மக்களுக்கு வானத்தில் இருந்து விழும் சிறு சிறுகோள்கள் (கற்கள்) பற்றிய விழிப்புணர்வு தேவை -, சர்வதேச சிறுகோள்கள் தினம் (International Asteroid Day) இன்று (தினம் ஜூன் 30).
ஜூன் 30, 1908ல் ரஸ்சியாவில் உள்ள ஒரு தூரத்துப் பிரதேசத்தில் நெருப்புப் பந்து ஒன்று காலைவேளை வானில் கடந்தது. ஒரு சில வினாடிகளுக்கு பிறகு, வானில் மிகப்பெரிய வெடிப்பு ஒன்று ஏற்பட்டு, டோக்கியோ நகரத்தின் அளவுகொண்ட காட்டுப்பிரதேசத்தை அழித்தது. இதில் 80 மில்லியன் மரங்கள் தரைமட்டமாகின. பூமி நடுங்கியது, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன, 60 கிமீக்கு அப்பால் இருந்த நகரத்தில் மக்கள் இந்த வெடிப்பின் உக்கிரத்தையும் வெப்பத்தையும் உணர்ந்தனர். நல்லவேளையாக இந்த வெடிப்பு நிகழ்ந்த பிரதேசம் மக்கள் யாரும் வாழாத காட்டுப்பகுதியாகும். அதனால் ஒருவரும் இறந்ததாக எந்தத் தகவலும் இல்லை. இந்த வெடிப்புச் சம்பவம் தற்போது துங்குசுக்கா (Tunguska) நிகழ்வு என அழைக்கப்படுகிறது. இது நீலத்திமிங்கிலத்தைப் போன்ற இரு மடங்கு பெரிதான ஒரு சிறுகோள் ஒன்றினால் ஏற்பட்டது. இந்தச் சிறுகோள் பூமியின் மேற்பரப்பிற்கு 10 கிமீ உயரத்தில் வெடித்தது.
112 வருடங்களுக்கு முன்னர் இந்த நிகழ்வு இடம்பெற்ற போது எம்மால்
இப்படியான நிகழ்வுகளை எதிர்வுகூறும் முறைகள் எதுவும் இருக்கவில்லை. ஆனால் இன்று
சிறுகோள்களை கண்டறியவும் அவதானிக்கவும் பல செயற்திட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு வருடமும் ஜூன் 30ல் துங்குசுக்கா
(Tunguska) நிகழ்வின் ஞாபகார்த்தமாக மக்கள் இத்தினத்தை சர்வதேச சிறுகோள் தினமாக
கொண்டாடுகின்றனர். பொதுமக்களிடம் சிறுகோள்களைப் பற்றிப் பரப்புரை செய்ய ஜூன் 30 ஆம் நாளைச் பன்னாட்டுச் சிறுகோள் நாளாக ஐக்கிய அமெரிக்கா
அறிவித்துள்ளது. இந்த நாளில் மக்களுக்கு சிறுகோள்கள் பற்றியும், அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் பற்றியும் விழிப்புணர்வு
ஏற்படுத்தப்படுகிறது. மேலும் இந்தப் பிரபஞ்ச ஆபத்தில் இருந்து எம்மை எப்படிக்
காத்துக்கொள்ளலாம் என்றும் விவாதிக்கின்றனர். Tunguska
நிகழ்வைவிட பெரிய சிறுகோள்கள் எமது பூமியில்
மோதியுள்ளன. 66 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் Chicxulub
எனும் சிறுகோள் பெரும்பாலான டைனோசர்களை
பூமியில் இருந்து அழித்தது.
சிறுகோள் (Asteroid) என்பது சூரியக் குடும்பத்தின் உட்புறப் பகுதியில் சூரியனைச் சுற்றிவரும் கோள் வட்டமையாத கோள்களினும் மிகச் சிறியனவாகிய, வால்வெள்ளியின் பான்மையேதும் இல்லாத, சூரியக் குடும்ப உருவாக்கத்தின்போது கோள்களுக்குள் சேர்த்துக்கொள்ளப்படாத முற்கோளாக்க வட்டின் (protoplanetary disc) எச்சங்களாய வான்பொருள்கள் ஆகும். இவற்றில் பெரியனவும் கோளினும் சிறியனவும் ஆக அமையும் வான்பொருள்கள் கோள் போன்றவை எனப்பொருள்படும் கோள்போலிகள் (போலிக்கோள்கள்) (Planetoid) எனப்படுகின்றன. மிகப் பெரும்பான்மையான சிறுகோள்கள், சிறுகோள் பட்டைப் (asteroid belt) பகுதியிலேயே காணப்படுகின்றன. இவை செவ்வாய்க்கும், வியாழனுக்கும் இடையில், நீள்வட்ட வட்டணையிலேயே உள்ளன. சில சிறுகோள்களுக்கு, சிறுகோள் நிலாக்களும் அமைவதுண்டு. சூரியக் குடும்பத்தின் வெளிப்புறப் பகுதியில் உள்ள சிறுகோள்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றின் மேற்பரப்புகள் வால்வெள்ளிகளைப் போல ஆவியாகும் தன்மையோடு அமைந்திருந்த்தால், இவை சிறுகோள்பட்டையில் உள்ள சிறுகோள்களில் இருந்து பிரித்துணரப்படுகின்றன. இந்தக் கட்டுரை சூரியக் குடும்ப உட்புறச் சிறுகோள்களையும் வியாழனைச் சுற்றிவரும் சிறுகோள்களை மட்டுமே கருதுகிறது.
சிறுகோளுக்கான
சரியான வரைவிலக்கணம் தெளிவாக இல்லை. வியாழனின் அரைப் பேரச்சுகளுக்கு (semi-major axes) அப்பாலுள்ள, பனிக்கட்டியினாலான சிறிய கோள்கள், வால்வெள்ளிகள், செண்டார்கள் (Centaur), அல்லது நெப்டியூனுக்கு அப்பாலுள்ள பொருள்கள். விண்கற்கள், கோளிடை வெளியிலுள்ள திண்மப் பொருட்கள் ஆகியவை சிறுகோள்களிலும்
குறிப்பிடத்தக்க அளவு சிறியவை (1 கிமீ லும் மிகச்
சிறிய விட்டம் உள்ளவை). விண்கற்கள் பொதுவாக பாறைஅளவு அல்லது அதனினும் சிறியவை. 1801 ஆம் ஆண்டுக்குப் பிறகு வானில் பல நுண்ணிய பொருள்கள் செவ்வாய்க்கும்
வியாழனுக்கும் நடுவிலுள்ள வட்டணைகளில் சூரியனைச் சுற்றி வருவதாகக்
கண்டுபிடிக்கபட்டது. அவை சூரியனைச் சுற்றுவதால் அவற்றைக் கோளாகத்தான் மதிக்க
வேண்டும். ஆனால் அவை மிகமிகச் சிறியவை. இந்தப் பொருள்கள் புள்ளியாகளாகத்
தெரிகின்றன. அவை விண்மீன்களைப் போலவே புள்ளி புள்ளியாகத் தெரிகின்றன. அதனால்
அவற்றுக்கு விண்மீண்களைப் போல வடிவமுள்ளவை என்று பொருள்படும் அஸ்டிராய்டு (asteroid)
என்ற பெயர் இடப்பட்டது. ஆனால் சில அறிவியலாளர்கள்
கோள்களை ஒத்தவை என்ற பொருள்படுகிற பிளானடாய்டு (planetoid) என்ற பெயரைப் பயன்படுத்துகிறார்கள். இவை சில வேளைகளில் புவியின்
வளிமண்டலத்தில் புகுந்து விடுவதுண்டு. அவை காற்றுடன் உராய்ந்து சூடாகி எரிந்து
விடும். அவற்றை விண்கொள்ளிகள் (meteors) என்கிறார்கள்.
சில விண்கொள்ளிகள் முழுவதுமாக எரிந்து விடாமல் அவற்றின் ஒரு பகுதி தரையில் வந்து
விழுவதுண்டு. அவற்றை விண்தாது (meteorite) என்பார்கள். அது
புவியின் வளிமண்டலத்தில் நுழையாமல் விண்வெளியிலேயே இருந்தால் அதை விண்கல் (meteroid)
எனக் குறிப்பிடுகிறார்கள்.
பெரும்பாலான சிறுகோள்கள் செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் அமைந்த வட்டணைகளிலும் வியாழனைச் சுற்றி வியாழத் திரோயன்களாகவும் அமைகின்றன. புவியண்மை வாட்டணைச் சிறுகோள்கள் உட்பட, வேறு வட்டணைக் குடும்பச் சிறுகோள்களும் கணிசமான எண்ணிக்கையில் நிலவுகின்றன. இவை அவற்றின் உமிழ்வுக் கதிர்நிரல் பான்மையை வைத்துப் பின்வரும் மூன்று முதன்மைக் குழுக்களாகப் பகுக்கப்படுகின்றன: C வகை, M வகை, S வகை. C வகை கரிமம் செறிந்ததாகும். M வகை பொன்மம் (உலோகம்) செறிந்ததாகும். S வகை சிலிகேட் கல் செறிந்ததாகும். இவற்றின் அளவுகள் பெரிதும் வேறுபடுகின்றன. இவற்றில் 1000 கிமீ அளவு குறுக்களவு அமைந்தவையும் உண்டு. இவை விண்வீழ்கற்களில் இருந்தும் வால்வெள்ளிகளில் இருந்தும் வேறுபட்டவை. வால்வெள்ளிகளின் இயைபுக் கூறுகள் பனிக்கட்டியும் தூசும் ஆகும். ஆனால் சிறுகோள்களின் உட்கூறுகள் கனிமங்களாலும் பாறையாலும் ஆனவை. மேலும் சிறுகோள்கள் சூரியனுக்கு அருகாமையில் உருவாகியவை. எனவே இவற்றில் வால்வெள்ளிகளில் உள்ளதைப்போல பனிக்கட்டி அமைவதில்லை. சிறுகோள்களும் விண்வீழ்கற்களும் அளவில் மட்டுமே வேறுபடுகின்றன. விண்வீழ்கற்கள் ஒரு மீட்டரினும் சிறியன. ஆனால் சிறுகோள்கள் ஒரு மீட்டரினும் பெரியவையாகும். கடைசியாக, விண்கற்கள் சிறுகோள் பொருள்களையோ வால்வெள்ளிப் பொருள்களையோ பெற்றிருக்கலாம்.
4 வெசுட்டா எனும்
சிறுகோள் மட்டுமே ஒளித்தெறிப்புப் பரப்பைக் கொண்டுள்ளது. எனவே இதைச் சரியான
இருப்பில் உள்ளபோது, வெற்றுக்கண்ணாலேயே மிக இருண்ட வானில்
பார்க்கலாம். அரிதாக புவியருகே வரும் சிறுகோள்கள் குறுகிய நேரத்துக்கு
வெற்றுக்கண்ணுக்குப் புலப்படுவதுண்டு. மார்ச் 2016 வரை சிறுகோள்
மையம் 1.3 மில்லியன் வான்பொருள்களை உள்புற,
வெளிப்புற சூரியக் குடும்பத்தில் பதிவு
செய்துள்ளது. இவற்றில் 750,000 பொருள்களுக்குப் போதுமான தகவல்கள்
கிடைத்து எண்ணிட்டு பெயரிடப்பட்டுள்ளன. 243 இடாவு அதன் நிலாவான டாக்டிலும், டாக்டில் தான்
முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோளின் நிலாவாகும். கியூசெப்பே
பியாசி எனும் வானியலாளரே 1801ம் ஆண்டில், முதன் முதலில் சிறுகோளைக் கண்டறிந்தார். அதன் பெயர் சீரெசு ஆகும்.
இதுவே சிறுகோள்களில் மிகவும் பெரியது. இது முதலில் கோளாகவே கருதப்பட்டது. ஆனால், இப்போது இது குறுங்கோளாகக் (கோள்குறளி) (dwarf
planet) கருதப்படுகிறது. வால்வெள்ளிகள்,
செண்டார்கள், சிறிய நெப்டியுனியக் கடப்புப் பொருள்கள் அடங்க, அனைத்து பிற சிறுகோள்களும் இப்போது சிறிய சூரியக் குடும்பப்
பொருள்களாக வகைபடுத்தப்படுகின்றன. இதற்குப் பின்னர் விண்மீன் போன்ற
ஒளிப்புள்ளிகளாகத் தோன்றும் பிற சிறுகோள்வட்டு அமையாத வான்பொருள்களும்
கண்டுபிடிக்கப்பட்டன. இவை அவற்றின் தோற்ற இயக்கங்களால் விண்மீன்களில் இருந்து
வேறுபடுத்தப்பட்டன.
மேக்சு வுல்ஃப் என்பார் 1891ல் முன்னோடியாக குறுங்கோள்களைக் கண்டுபிடிக்கும் வானொளிப்படவியலை அறிமுகப்படுத்தினார். இம்முறைய்ல் ஒளிப்பட்த்தட்டில் குறுங்கோள்களின் இயக்கம் வெண்கீறைகளாக அமையும். பழைய கட்புல நோக்கீட்டு முறையை விட இது குறுங்கோள்களின் கண்டுபிடிப்பு வீதத்தை வியப்புறும் வகையில் கூட்டியது: வுல்ஃப் மட்டுமே 323 புரூசியாவில் தொடங்கி 248 குறுங்கோள்களைக் கண்டுபிடித்தார். மேலும் அதுவரையில் ஏறத்தாழ, 300 குறுங்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இவற்றுக்கு மேலும் பல இருக்க வாய்ப்பிருந்தாலும் அவை வானப் புழுக்கள் எனக்கொண்டு வானியலாளர்கள் அவற்றின் கண்டுபிடிப்பில் ஆர்வம் கொள்லவில்லை. மேலும் ஒரு நூற்றாண்டு கழிந்தபிறகும், சில ஆயிரம் குறுங்கோள்களே கண்டுபிடிக்கப்பட்டு எண்ணும் பெயரும் இடப்பட்டுள்ளன. குறுங்கோள்களின் கண்டுபிடிப்பு 1998 வரை நான்கு படிநிலை நிகழ்வால் கண்ட்டறியப்பட்டன. முதலில் வானின் ஒருபகுதி அகல்புலத் தொலைநோக்கியால் ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டன. இவை வான்வரைபடங்கள் எனவும் அழைக்கப்பட்டன. இவை ஒருமணி நேர இடைவெளிகளில் எடுக்கப்பட்டன.
பல நாட்கள்
தொடர்ந்து இதுபோல ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டன. இரண்டாம் படிநிலையாக, ஒரே வான்பகுதி சார்ந்த இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட ஒளிப்படங்கள்
ஒரு பருநோக்கியால் நோக்கப்பட்டன. சூரியனை வட்டணையில் சுற்றிவரும் எந்தவொரு
வான்பொருளும் தொடர்ந்த இரு ஒளிப்படங்களில் சற்றே நகர்ந்திருக்கம். பருநோக்கியில்
அந்த வான்பொருளின் தோற்றம் விண்மீன்களின் பின்னணியில் மெல்ல மிதப்பதுபோல அமையும்.
மூன்றாம் படிநிலையாக, அப்படி நகரும் வான்பொருள்
இனங்காணப்படும். பின்னர் அர்ஹன் இருப்பு துல்லியமாக, இலக்கவியல் நுண்ணோக்கியால் அளக்கப்படும். இந்த வான்பொருளின் இருப்பு
விண்மீன் இருப்புகள் சார்ந்து அளக்கப்படும். முதல் மூன்று
படிநிலைகள் மட்டுமே குறுங்கோள் கண்டுபிடிப்பை முழுமையாக்கி உறுதிபடுத்தாது:
நோக்கீட்டாளர் ஒப்ர் ஒதுக்கீட்டைட்த்தை மட்டுமே கண்டுள்ளார். இதற்கு தற்காலிகமாக,
கண்டுபிடித்த ஆண்டையும் அரைமாத கண்டுபிப்பு
கடிதத்தையும் இறுதியாக கண்டுபிடிப்பின் வரிசைமுறை எண்ணையும் வைத்து ஒரு பெயரீடு
தரப்படும். கடைசிப் படிநிலையாக, இதன் இருப்புகளும் நோக்கீட்டு நேரமும்
சிறுகோள் மையத்துக்கு அனுப்ப்ப்படும். அங்கு ஒற்றை வட்டணையில் தரப்பட்ட முந்தய
ஒதுக்கீட்டிடங்களுடன் ஒப்பிட்டு கணினி நிரல்கள் அவற்ரில் எந்த இருப்பில் இந்த புது
இருப்பை வைப்பது என்பதைத் தீர்மானிக்கும். அப்போது இதற்கு ஓர் அட்டவணை எண்
தரப்படும். பின்னர் இந்த வான்பொருளின் வட்டணையைக் கணக்கிட்டு, இந்த வான்பொருளுக்குப் பெயரிடும் உரிமை பன்னாட்டு வானியல் ஒன்றிய
ஒப்புதலுடன் கண்டுபிடிப்பாளருக்கு வழங்கப்படும்.
உங்களுக்கு இந்த
நிகழ்வுகளில் பங்குபெற விருப்பமிருந்தால் அல்லது சிறுகோள்களைப் பற்றி மேலும் அறிய
ஆர்வம் இருந்தால், சர்வதேச சிறுகோள் தினத்தில் உலகம்
முழுதும் நடைபெறும் சிறுகோள் தின நிகழ்வுகளை பார்வையிடலாம்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ்,
இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment