Friday, January 28, 2022

உலகில் வெற்றி பெற்ற மனிதர்களீடம் உள்ள 3 முக்கிய குணங்ககள்.

உலகில் வெற்றி பெற்ற மனிதர்களீடம் உள்ள 3 முக்கிய குணங்ககள்.

தவறாமல் இந்த வீடியோ முழுவதும் பாருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.   


வெற்றி பெற இந்த ஒரு பழக்கத்தை மட்டும் டெய்லி நைட் பண்ணுங்க.



நாம் நினைத்ததை எல்லாம் கொடுக்க போகிற ஒரு புத்தகம் | ரகசியம்.



பிப்ரவரி 15 ஆம் தேதி வரை எதற்கெல்லாம் கட்டுப்பாடு.?

பிப்ரவரி 15 ஆம் தேதி வரை எதற்கெல்லாம் கட்டுப்பாடு.?




கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே தேர்வு.

கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே தேர்வு.

கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும்..

பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கவுள்ள நிலையில், உயர் கல்வித்துறை தகவல்










Thursday, January 27, 2022

✍🏻⤵️⤵️இயற்கை வாழ்வியல் முறை⤵️⤵️அரிவாள்மனைப் பூண்டு நன்மைகள்.

✍🏻⤵️⤵️இயற்கை வாழ்வியல் முறை⤵️⤵️ அரிவாள்மனைப் பூண்டு நன்மைகள்.


⤵️⤵️⤵️⤵️⤵️

அரிவாள்மனைப் பூண்டு கூர்நுனிப்பற்கள் கொண்ட கூர்மையான வடிவ இலைகளை உடைய மிகக் குறுஞ்செடியினம். மழைக்காலங்களில் தமிழகமெங்கும் தானே வளரக்கூடியது. இதன் இலையே மருத்துவ பயனுடையது. இது இரத்த கசிவை தடுக்கும் மருந்தாக செயற்படும். அரிவாள் மூக்கு பச்சிலை என்றும் அழைக்கப்படுகிறது

⤵️⤵️⤵️⤵️⤵️

இதன் வேர் பொடி நரம்புத் தளர்ச்சியை போக்க வல்லது. ஞாபகச் சக்தியை கூட்ட வல்லது. ஆண்,பெண் சிறு நீர் கழிக்கும் பாதையை சுத்தப் படுத்த வல்லது. தகாத உடல் உறவால் ஏற்படும் தொற்று வியாதிகளைக் குணப்படுத்தும்.

⤵️⤵️⤵️⤵️⤵️

ஒரு தேக்கரண்டிப் பொடியை தினமும் உணவிற்குப் பின் 2 வேளை பெண்கள் உட்கொண்டால் உடல் பலஹீனம் ஆவதைக் கட்டுப்படுத்தும்.

⤵️⤵️⤵️⤵️⤵️

இதன் பொடி அரைத் தேக்கரண்டியுடன் தேன் சேர்த்து உரத்த குறலில் பேசியும், மேல்கட்டை பாடலாலும் தொண்டையில் ஏற்பட்ட வரட்ச்சி,கம்மல் ஆகியவற்றை குணமாக்கும்.

⤵️⤵️⤵️⤵️⤵️

இதன் வேர், விதை இவைகளை இரண்டுக்கு ஒன்று என்ற விகித த்தில் கலந்து பொடி செய்து சர்கரையுடன் சேர்த்துத் தினம் 3 வேளை சாப்பிட்டால் ஒரு வாரத்தில் உடலில் ஏற்படும் எரிச்சில் குணமாகும்.

⤵️⤵️⤵️⤵️⤵️

இதன் வேரை எடுத்துத் துண்டுகளாக வெட்டி ஒரு லிட்டர் தண்ணீரில் காய்ச்சி சுண்ட வைத்து கால் லிட்டர் ஆனவுடன் அந்தக் கசாயத்தை சாராயம் அருந்தித் தொண்டையில் எரிச்சல் உள்ளவர்கள் தினம் இரு வேளை 2 அவுன்ஸ் வீதம் ஒரு வாரம் குடித்தால் குணமடைவர்.

⤵️⤵️⤵️⤵️⤵️

இதன் பொடி 10 கிராம் எடுத்து 80 மி.லி. நீரில் கொதிக்க வைத்து 20 மி.லி. யாகக் காய்ச்சி வடிகட்டி ஒரு கப் காலை மட்டும் குடித்து வர மூக்கு,வாய் மற்றும் உடலில் ஏற்படும் இரத்த ஓட்டத்தைக் கட்டுப் படுத்தும்.

⤵️⤵️⤵️⤵️⤵️

அரிவாள்மனைப் பூண்டின் இலையைக் கசக்கி வெட்டுக் காயத்தில் பிழிய இரத்தப் பெருக்கு நிற்கும்.

⤵️⤵️⤵️⤵️⤵️

அரிவாள்மனைப் பூண்டின் இலையுடன் சம அளவு குப்பை மேனி இலை, பூண்டுப் பல் 2, மிளகு 3 சேர்த்து அரைத்து புன்னைக் காய் அளவு உள்ளுக்குக் கொடுத்து காயத்திலும் கட்ட நஞ்சு முறியும். அப்போது உப்பு, புளி நீக்க வேண்டும்.

⤵️⤵️⤵️⤵️⤵️

அரிவாள் மூக்குப் பச்சிலையானது ஆயுதங்களால் உண்டாகின்ற காயத்தைச் சீக்கிரத்தில் ஆற்றுவதுந் தவிர மாக விஷத்தையும் உதிரக் கெடுதியால் பிறந்த சிரஸ்தாப ரோகத்தையும் விலகும் என்க.

⤵️⤵️⤵️⤵️⤵️

அரிவாள் மூக்குப் பச்சிலையைக் காரமில்லாத தட்டை அம்மிக் கல்லில் வைத்து வெண்ணெய் போல் அரைத்து வெட்டுப் பட்ட காயங்களுக்குத் தடவச் சீலைக் கொண்டு அழுத்திக் கட்ட இரத்தம் சொரிதல் நீங்கி விரைவில் ஆறும். இந்த இலையுடன் சிறிது மிளகு பூண்டு கூட்டி அரைத்து வேளைக்கு சிறு சுண்டைக்காய் பிரமாணம் அந்தி சந்தி 3 நாள் கொடுத்துப் பாற் பத்தியம் வைக்கக் கடுமையான விஷங்கள் இறங்குவதுடன் தலை வலியும் நீங்கும்.

⤵️⤵️⤵️⤵️⤵️

ஈறுகளில் இருந்து ரத்தம் வருவது குணமாக இருபது பூக்களை அதை இரண்டு டம்ளர் நீரிலிட்டு ஒரு டம்ளராக சுண்டைக்காய்ச்சி அதை இளஞ்சூடாக வாய் கொப்பளித்து வந்தால்

இதன் மூலமாக, ஈறுகளில் இருந்து ரத்தம் வருவது குணமாகும்.

⤵️⤵️⤵️⤵️⤵️

அரிவாள்மனைப் பூண்டின் இலை, கிணற்றுப் பாசான் இலை சம அளவு எடுத்து அரைத்து புழுவெட்டின் மீது தடவி வர விரைவில் மாறும். இதன் இலையை மஞ்சள் சேர்த்து அரைத்து சொறி சிரங்கு மீது தடவி வர குணமாகும். மேலும், அரிவாள்மனைப் பூண்டின் இலை, கிணற்றுப் பாசான் இலை, எலும்பு ஒட்டி இலை வகைக்கு சம அளவாக எடுத்து அரைத்துப் பற்றிட காயங்களில் உண்டான வீக்கம் விரைவில் குணமாகும்.

⤵️⤵️⤵️⤵️⤵️

அரிவாள்மனைப் பூண்டின் இலை, குப்பைமேனி இலை, மஞ்சள் சேர்த்து அரைத்து படர்தாமரை மீது தடவி வர விரைவில் குணமாகும்.

⤵️⤵️⤵️⤵️⤵️

வெள்ளைபடுதல் குணமாக வேர்ப்பட்டைகளை உலர்த்தி, இடித்துப் பொடியாக்கி பால் மற்றும் சர்க்கரை கலந்து சாப்பிட வேண்டும்.

⤵️⤵️⤵️⤵️⤵️

மூட்டுவலி குணமாக

இலைகளை நன்கு அரைத்து வலியுள்ள இடத்தில் பூச வேண்டும். தொடர்ந்து 3 வாரங்கள் இவ்வாறு செய்ய வேண்டும்.

⤵️⤵️⤵️⤵️⤵️

கட்டுரை ராஜசேகரன்

⤵️⤵️⤵️⤵️⤵️

🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

வார இறுதி ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பு.

வார இறுதி ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பு.

தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கம், பிப்ரவரி 15ம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் நீடிக்கப்பட்டிருக்கிறது. இதில் பல புதிய கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி பள்ளிகள் அனைத்திலும் 1 முதல் 12 வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடருமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிறு பொதுமுடக்கம் நீக்கப்பட்டுள்ளது. போலவே நாளை முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பின் முழு விவரங்கள் இங்கே:

  • சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு தடை தொடர்கிறது
  • அரசு, தனியாரால் நடத்தப்படும் அனைத்து கலை விழாக்களுக்கும் அனுமதியில்லை
  • துணி, நகைக்கடைகளில் ஒரே நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் அனுமதி உண்டு
  • திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு அதிகபட்சமாக 100 பேருக்கு மட்டுமே அனுமதி உண்டு
  • இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு அதிகபட்சமாக 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்
  • திரையரங்குகள், உடற்பயிற்சிக்குக் கூடங்களில் ஒரே நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அனுமதி உண்டு
  • நாளை (ஜனவரி 28, 2022) முதல் இரவுநேர ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது.
  • வரும் ஞாயிற்றுக்கிழமை முதல், ஞாயிறு முழு பொதுமுடக்கம் ரத்து செய்யப்படுகிறது.
  • பிப்.1ஆம் தேதி முதல் 1 முதல் 12 வரை அனைத்து வகுப்புகளுக்கும் நேரடியாக வகுப்புகள் நடத்தப்படும். போலவே பிப்.1 முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படுகின்றது. அனைவருக்கும் நேரடி வகுப்புகள் நடக்கும்.
  • தொழிற்பயிற்சி, பயிற்சி நிலையங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது
  • கேளிக்கை, பொழுதுபோக்கு பூங்காக்கள் அனைத்தும் 50% பேருடன் இயங்க தமிழக அரசு அனுமதி உண்டு
  • மழலையர், நர்சரி பள்ளிகளுக்கு அனுமதியில்லை. அவற்றை திறப்பதற்கான தடை நீடிக்கிறது.





18 லட்சம் பார்வையாளர்களை கடந்த நமது மாணவர்கள் கல்விக்களஞ்சியம் குறித்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கருத்துக்கள் (Feedback).

18 லட்சம் பார்வையாளர்களை கடந்த நமது மாணவர்கள் கல்விக்களஞ்சியம் குறித்த மாணவ , மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கருத்துக்கள் (Feedback). நமது...