Thursday, January 27, 2022

வார இறுதி ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பு.

வார இறுதி ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பு.

தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கம், பிப்ரவரி 15ம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் நீடிக்கப்பட்டிருக்கிறது. இதில் பல புதிய கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி பள்ளிகள் அனைத்திலும் 1 முதல் 12 வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடருமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிறு பொதுமுடக்கம் நீக்கப்பட்டுள்ளது. போலவே நாளை முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பின் முழு விவரங்கள் இங்கே:

  • சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு தடை தொடர்கிறது
  • அரசு, தனியாரால் நடத்தப்படும் அனைத்து கலை விழாக்களுக்கும் அனுமதியில்லை
  • துணி, நகைக்கடைகளில் ஒரே நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் அனுமதி உண்டு
  • திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு அதிகபட்சமாக 100 பேருக்கு மட்டுமே அனுமதி உண்டு
  • இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு அதிகபட்சமாக 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்
  • திரையரங்குகள், உடற்பயிற்சிக்குக் கூடங்களில் ஒரே நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அனுமதி உண்டு
  • நாளை (ஜனவரி 28, 2022) முதல் இரவுநேர ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது.
  • வரும் ஞாயிற்றுக்கிழமை முதல், ஞாயிறு முழு பொதுமுடக்கம் ரத்து செய்யப்படுகிறது.
  • பிப்.1ஆம் தேதி முதல் 1 முதல் 12 வரை அனைத்து வகுப்புகளுக்கும் நேரடியாக வகுப்புகள் நடத்தப்படும். போலவே பிப்.1 முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படுகின்றது. அனைவருக்கும் நேரடி வகுப்புகள் நடக்கும்.
  • தொழிற்பயிற்சி, பயிற்சி நிலையங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது
  • கேளிக்கை, பொழுதுபோக்கு பூங்காக்கள் அனைத்தும் 50% பேருடன் இயங்க தமிழக அரசு அனுமதி உண்டு
  • மழலையர், நர்சரி பள்ளிகளுக்கு அனுமதியில்லை. அவற்றை திறப்பதற்கான தடை நீடிக்கிறது.





No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...