Monday, October 5, 2020

உலக விண்வெளி வாரம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி கல்லூரி பேராசிரியர்.

உலக விண்வெளி வாரம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் புத்தனாம்பட்டி  நேரு நினைவு கல்லூரி கல்லூரி பேராசிரியர். 

நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் ரமேஷ் செயற்கைக்கோள், இஸ்ரோ செயல்பாடு, விண்வெளி பயணம், இயற்பியல் பயன்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதன் மூலம் கடந்தாண்டு கல்லூரி மாணவர்கள் கோபி கலை அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் இன்ஜினியரிங் கல்லூரியில்  நடந்த  உலக விண்வெளி  வாரத்தில் கலந்துகொண்டு தாங்கள் செய்த ராக்கெட்  மாதிரியான பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி மற்றும் செயற்கைக்கோள் செயல்படும் விதம் குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.  இந்த வருடம் நேரு நினைவுக் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் இணையதள வாயிலாக  இஸ்ரோ உலக விண்வெளி  வாரத்தில் பங்குபெற்று வருகின்றனர்.

நன்றி:  தினமலர் (05.10.2020)





ராக்கெட் மாதிரிகள்  செய்வதற்கு ஊக்கமளித்து தேவையான அனைத்து உதவிகளையும் செய்த கல்லூரி தலைவர், செயலர் மற்றும் முதல்வருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன். ராக்கெட்  மாதிரிகள் செய்வதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கிய ஓய்வுபெற்ற இஸ்ரோ விஞ்ஞானி பாலசண்முகம் மற்றும் தன்ராஜ்  ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.


கடும் உழைப்பால் ராக்கெட் மாதிரிகளை செய்துகொடுத்த கல்லூரியில்  லேத் பணியாளர் முருகன் அவர்களுக்கு மிக்க நன்றி. மேலும் ராக்கெட் மாதிரிகள் வண்ணமயமாக ஜொலிக்க பெயிண்டிங்கில் உதவி செய்த தனசேகர் அவர்களுக்கும் நன்றி. ராக்கெட் வடிவமைக்க உதவியாக இருந்த  இயற்பியல் துறை பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், கணினி அறிவியல் துறை ஆசிரியரல்லா பணியாளர்கள் மற்றும் மின் பராமரிப்புத்துறை சேர்ந்த நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.


கடும் உழைப்பால் இரவு பகல் பாராது உழைத்து ராக்கெட் மாதிரிகளை வடிவமைத்து அறிவியல் கண்காட்சியில் செயல்படுத்திய  இயற்பியல் துறை மாணவ மாணவிகளுக்கு நன்றிகள்.

10 comments:

  1. Proud of physics department 👍👍👍👍👍 power of physics 🔥🔥🔥🔥🔥🔥

    ReplyDelete
  2. Vazhathukal 🙏🙏🙏🙏♥️

    ReplyDelete
  3. மிகச் சிறப்பான செயல்பாடுகளுக்கும், வருங்கால வின்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏼 🙏🏼🙏🏼🚩

    ReplyDelete
  4. Very well sir.
    And
    Thanks you so much sir 🙏

    ReplyDelete

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது?

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது? கடந்த இரண்டு மாதங்களாக விண்வெளியில் தங்கியுள்ள விண்வெ...