Thursday, August 27, 2020

சைக்ளோடான் மற்றும் யுரேனிய ஐசோடோப்பை பிரித்தெடுக்கும் முறைகளை கண்டறிந்த, நோபல் பரிசு பெற்ற எர்னஸ்ட் ஆர்லண்டோ லாரன்ஸ் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 27, 1958).

சைக்ளோடான் மற்றும் யுரேனிய ஐசோடோப்பை பிரித்தெடுக்கும் முறைகளை  கண்டறிந்த, நோபல் பரிசு பெற்ற எர்னஸ்ட் ஆர்லண்டோ லாரன்ஸ் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 27, 1958).

 


எர்னஸ்ட் ஆர்லண்டோ லாரன்ஸ் (Ernest Orlando Lawrence) ஆகஸ்ட் 8, 1901ல் தெற்கு டகோட்டாவின் கேன்டனில் பிறந்தார். அவரது பெற்றோர்களான கார்ல் குஸ்டாவஸ் மற்றும் குண்டா (நீ ஜேக்கப்சன்) லாரன்ஸ். இருவரும் நோர்வே குடியேறியவர்களின் சந்ததியினர். அவர்கள் கேன்டனில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் கற்பிக்கும் போது சந்தித்தனர். தந்தை பள்ளிகளின் கண்காணிப்பாளராகவும் இருந்தார். அவருக்கு ஒரு தம்பி, ஜான் எச். லாரன்ஸ் இருந்தார். அவர் ஒரு மருத்துவர் ஆவார். மேலும் அணு மருத்துவத் துறையில் முன்னோடியாக இருந்தார். லாரன்ஸ் கேன்டன் மற்றும் பியர் பொதுப் பள்ளிகளில் பயின்றார். பின்னர் மினசோட்டாவின் நார்த்ஃபீல்டில் உள்ள செயின்ட் ஓலாஃப் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் ஒரு வருடம் கழித்து வெர்மிலியனில் உள்ள தெற்கு டகோட்டா பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டார். 1922ம் ஆண்டில் வேதியியலில் இளங்கலை பட்டத்தையும், வில்லியம் பிரான்சிஸ் கிரே ஸ்வானின் மேற்பார்வையில் 1923ல் மினசோட்டா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுகலைப் பட்டத்தையும் முடித்தார். தனது ஆய்வறிக்கையில், லாரன்ஸ் ஒரு சோதனை கருவியை உருவாக்கினார். அது ஒரு நீள்வட்டத்தை ஒரு காந்தப்புலம் வழியாக சுழற்றியது. 


தெற்கு டகோடா பல்கலைக்கழகம் மற்றும் மினசோட்டா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பட்டதாரியான லாரன்ஸ் 1925ம் ஆண்டு யேலில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். 1928ம் ஆண்டில் அவர் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றினார். ஒருநாள் மாலையில் லாரன்ஸ் நூலகத்தில் அதிக வேக துகள்களை உற்பத்தி செய்யும் ஒரு முடுக்கியின் வரைபடத்தை கண்டார். அந்த வரைபடத்தால் கவரப்பட்டு ஆராயும் போது இரண்டு மின்காந்த புலங்களுக்கிடையே வட்டப்பாதையில் முடுக்கப்படும் கலன் பற்றிய யோசனை வந்தது. இந்த யோசனையின் வெளிப்பாடு தான் சைக்ளோட்ரானாக அமைந்திருந்தது. லாரன்ஸ் பெரிய மற்றும் அதிக விலையுயர்ந்த சைக்ளோடான்களை தொடர்ச்சியாக உருவாக்கினார். 1936 ஆம் ஆண்டு அவரது கதிர்வீச்சு ஆய்வுக்கூடம் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ துறையாக ஆனது. லாரன்ஸ் அதன் இயக்குநராக இருந்தார்.

 

இயற்பியலுக்காக சைக்ளோட்ரோனைப் பயன்படுத்துவதோடு கூடுதலாக ரேடியோ ஐசோடோப்களின் மருத்துவ பயன்களை ஆய்வு செய்வதில் லாரன்ஸ் ஆர்வம் காட்டினார். இரண்டாம் உலகப் போரின் போது, லாரன்ஸ் தனது கதிர்வீச்சு ஆய்வகத்தில் மின்காந்தத்தை பயன்படுத்தி ஐசோடோப்புகளை பிரித்தெடுக்கும் முறையை உருவாக்கினார். கலூட்ரான் என்ற இயந்திரத்தை இதற்காக பயன்படுத்தினார். டென்னெஸியில் உள்ள ஒக் ரிட்ஜ்ல் மிகப் பெரிய மின்காந்தத்தை பயன்படுத்தி ஐசோடோப்புகளை பிரித்தெடுக்கும் ஆலையை உருவாக்கினார். இது Y-12 என அழைக்கப்பட்டது. திறனற்றதாக அது இருந்தாலும் வேலை செய்தது. போருக்குப் பின்னர், லாரன்ஸ் அரசு ஆதரவோடு பெரிய அறிவியல் திட்டங்களை செயல்படுத்த தொடங்கினார். அதிக அளவு செலவு செய்து மிகப்பெரிய இயந்திரங்களை உருவாக்குவதற்கு “பெரிய அறிவியல்” என்ற திட்டத்தை தொடங்கி பிரசாரம் செய்தார். கலிபோர்னியாவின் லிவர்மரில் அமைந்த இரண்டாம் அணு ஆயுத ஆய்வகத்திற்கு எட்வர்ட் டெல்லர் பிரச்சாரத்தை வலுவாக ஆதரித்தார். அவருடைய இறப்புக்குப் பிறகு, கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆட்சியாளர்கள் லாரன்ஸ் லிவர்மோர் நேஷனல் லேபாரட்டரி மற்றும் லோரன்ஸ் பெர்க்லி தேசிய ஆய்வகத்திற்கு அவருடைய பெயரையே வைத்து அவரை கவுரவித்தது.

 


சுழற்சியலைவியைக் கண்டறிந்ததற்காக 1939 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர். யுரேனிய ஐசோடோப்பை பிரித்தெடுக்கும் முறையைக் கண்டறிந்ததற்காகவும் அறியப்படுகிறார். நோபல் பரிசுக்கு கூடுதலாக, லாரன்ஸ் 1937ல் எலியட் க்ரெஸன் பதக்கத்தையும், ஹியூஸ் பதக்கத்தையும், 1938ல் இயற்பியலில் காம்ஸ்டாக் பரிசையும், 1940ல் டடெல் பதக்கத்தையும் பரிசையும், 1942ல் ஹோலி பதக்கத்தையும், 1942ல் தகுதிக்கான பதக்கத்தையும், 1951ல் வில்லியம் புரோக்டர் பரிசு, 1952ல் ஃபாரடே பதக்கம், மற்றும் 1957ல் அணுசக்தி ஆணையத்தின் என்ரிகோ ஃபெர்மி விருது போன்ற விருதுகளை பெற்றுள்ளார். 1948ல் லெஜியன் டி ஹொன்னூரின் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 1958 ஆம் ஆண்டில் அமெரிக்க இராணுவ அகாடமியால் சில்வானஸ் தையர் விருதைப் பெற்றவர் ஆவார். நோபல் பரிசு பெற்ற எர்னஸ்ட் ஆர்லண்டோ லாரன்ஸ் ஆகஸ்ட் 27, 1958ல் தனது 57வது அகவையில், கலிபோர்னியா, பாலோ ஆல்டோ மருத்துவமனையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். 1961 ஆம் ஆண்டில் பெர்க்லீயில் கண்டுபிடித்த 103 வது தனிமத்திற்கு லென்டூரியம் என்று பெயரிடப்பட்டது அவருக்கு கிடைத்த மிகப் பெரிய கெளரவம்.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...