Sunday, August 23, 2020

UPSC, TNPSC, TRB, Banking, Railways, SSC, IES போன்ற போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் -22 ஆகஸ்ட் முதல் 5 செப்டம்பர் வரை

 UPSC, TNPSC, TRB, Banking, Railways, SSC, IES போன்ற போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் -22 ஆகஸ்ட் முதல் 5 செப்டம்பர் வரை 


அண்ணா நூற்றாண்டு நூலகம்   UPSC, TNPSC, TRB, Banking, Railways, SSC, IES போன்ற போட்டித்தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்வினை, துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் வல்லுனர்களைக் கொண்டு 22 ஆகஸ்ட் முதல் 5 செப்டம்பர் வரை தினமும் மாலை 3.30 மணி முதல் 5.30 மணி வரை இணையவழியில் கட்டணமின்றி நடத்தவுள்ளது. இந்த நிகழ்வுகளில் www.youtube.com/aclchennai எனும் யூடியூப் முகவரி மற்றும் https://www.facebook.com/ACLChennai/ எனும் முகநூல் முகவரி வழியாக கலந்து கொள்ளலாம். இந்த தொடர் நிகழ்வை மதிப்பிற்குரிய திரு. வெ. இறையன்பு IAS  அவர்கள் 22-8-2020 (சனிக்கிழமை), மாலை 3.30 மணிக்கு துவங்கி வைக்கிறார் .


ஆசியாவின் பெரிய நூலகங்களில் முதன்மையான அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கால்கோள் விழா முன்னாள் தமிழக முதல் அமைச்சர் டாக்டர். மு.கருணாநிதியால் 2008ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 16ஆம் நாள் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கப்பட்டது. நூல்கள் மற்றும் கற்பதில் அண்ணா கொண்ட பற்று மற்றும் தீராத ஆர்வத்தை மரியாதை செய்யும் பொருட்டும், அவரது நூற்றாண்டை நினைவுறுத்தும் விதமாகவும் "அண்ணா நூற்றாண்டு நூலகம்" எனப் பெயரிடப்பட்டுள்ளது. 3.75 லட்சம் சதுர அடி பரப்பில் அமைந்துள்ள நூலகம் தரைத்தளம் நீங்கலாக 8 தளங்களைக் கொண்டது. தற்சமயம் பல்வேறு துறை சார்ந்த 5 லட்சம் புத்தகங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள நூலகம், மிகவும் குறுகிய காலத்தில் 12 லட்சம் புத்தகங்களாக அதிகரிக்கும் நோக்கத்துடன் இயங்குகிறது. இது தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு அருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


நூலகத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக "உலக இணைய மின் நூலகத்துடன்" (World Digital Library) இணைக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் 31 மாவட்ட நூலகங்களையும் கன்னிமரா நூலகத்துடன் இணைக்கும் கணினி இணைப்பு தற்போது செயலாக்கத்தில் உள்ளது. இந்த அனைத்து இணைப்புகளும் "அண்ணா நூற்றாண்டு நூலகத்துடன்" இணைக்கப்படும்.

Source By: Arannacentenylibrary

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

No comments:

Post a Comment

த. பாதர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவியல் கண்காட்சி.

த. பாதர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவியல் கண்காட்சி. இன்று உப்பிலியபுரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி த.பாதர்பே...