Saturday, September 26, 2020

அக்டோபர் 1 முதல் 10, முதல்12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரும் பொழுது பெற்றோரின் ஒப்புதல் கடிதத்தை பெற்று வர வேண்டும் கல்வித்துறை திட்டவட்டமான அறிவிப்பு காணொளி

அக்டோபர் 1 முதல் 10, முதல்12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரும் பொழுது பெற்றோரின் ஒப்புதல் கடிதத்தை பெற்று வர வேண்டும் கல்வித்துறை திட்டவட்டமான அறிவிப்பு காணொளி.



தமிழகத்தில் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர அரசு அனுமதி வழங்கி உள்ளது.

கொரோனாநோய் தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. மத்திய அரசு செப் 21 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கியது. அதன்படி பல மாநிலங்களில் அரசு பள்ளிகளை திறந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் இன்னும் கொரோனா தொற்று குறையாத காரணத்தால் பள்ளிகள் எப்போது திறக்கும் என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக அரசு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம் என அனுமதி வழங்கி உள்ளது.


10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை கேட்க அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பள்ளிக்கு செல்லலாம் என அறிவித்துள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளி மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு செல்லலாம் எனவும், மேலும் அவர்கள் கொரோனோ கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியேவுள்ள பள்ளிகளுக்கு மட்டும் செல்ல அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆசிரியர்களை குழுக்களாக பிரித்து இடைவெளி விட்டு பள்ளிகளுக்கு வர வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது?

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது? கடந்த இரண்டு மாதங்களாக விண்வெளியில் தங்கியுள்ள விண்வெ...