உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா கட்டுரைத் தொகுப்பில், தங்களது கட்டுரைகள் இடம்பெற விரும்புவோா், அக்.15-ஆம் தேதிக்குள் படைப்புகளை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அந்நிறுவனத்தின் முழுக் கூடுதல் பொறுப்பு இயக்குநா், சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழாவை சிறப்பிக்கும் வகையில், பொன்விழா கட்டுரைத் தொகுப்பை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கட்டுரைகள் உலகத் தமிழா்களிடையே வரவேற்கப்படுகின்றன. இந்தக் கட்டுரைகள், மொழி, இனம் உள்ளிட்ட பன்முக ஆய்வுத் தளங்களிலும், இக்கால இலக்கியங்கள் பொருண்மைகளிலும் அமையலாம். கட்டுரை தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்படலாம். ஏ4 அளவில் 10 பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை இருக்க வேண்டும்.
இவ்வாறான கட்டுரைகள், மின்னஞ்சல் முகவரிக்கு, அக்.15-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் அனுப்ப வேண்டும். தோ்ந்தெடுக்கப்படும் சிறந்த கட்டுரைகள், நிறுவனம் வெளியிடும் பொன்விழா ஆண்டில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்” என்ற சிறப்பு கட்டுரைத் தொகுப்பில் இடம்பெறும். மேலும், விவரங்களுக்கு இயக்குநா், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை 600 113 என்ற முகவரியை நேரிலோ அல்லது 044 22542992, 22542781 ஆகிய தொலைபேசி எண்களையோ அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mail : iits@tn.nic.in
source: dinamani
No comments:
Post a Comment