Thursday, September 17, 2020

குஜராத் அரசியல் வரலாற்றில் நீண்டகால முதல்வராக இருந்த, இந்திய பிரதமர் நரேந்திர தாமோதரதாசு மோடி பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 17, 1950).

குஜராத் அரசியல் வரலாற்றில் நீண்டகால முதல்வராக இருந்த, இந்திய பிரதமர் நரேந்திர தாமோதரதாசு மோடி பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 17, 1950).

நரேந்திர தாமோதரதாசு மோடி (Narendra Damodardas Modi) செப்டம்பர் 17, 1950ல் ஒரு நடுத்தர குடும்பத்தில் வாட்நகர் என்னும் இடத்தில் பிறந்தார். அவர் தாமோதர்தாசு முல்சந் மோதி மற்றும் அவரது மனைவி கீரபேன்னுக்கும் பிறந்த ஆறு குழந்தைகளில் இவர் மூன்றாவதாக பிறந்தார். தன்னுடைய ஆரம்பக் கல்வியை ‘வட்நகரில்’ உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய நரேந்திர மோடி அவர்கள், பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பொழுதே, ரயில் நிலையத்தில் டீக்கடை நடத்திவந்த தன்னுடைய தந்தைக்கு உதவிகள் பல செய்துவந்தார். இவர் இளமைப் பருவத்திலிருந்து ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் (RSS) ஒரு உறுப்பினராகவும் உள்ளார். இளமை முதல் அரசியலில் ஆர்வம் கொண்டவர். இவர் 1998 ஆம் ஆண்டில் அரசியல் அறிவியல் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இவர் குஜராத் மாநிலம், இமாசல பிரதேச தேர்தல் பிரச்சாரங்களில் இயங்க அத்வானியால் தேர்வு செய்யப்பட்டார். அப்போதைய முதல்வர் கேசுபாய் படேல் பதவி விலகியதை அடுத்து நடந்த இடைத் தேர்தலில், நரேந்திர தாமோதர்தாசு மோடி வெற்றி பெற்று அக்டோபர் 7, 2001ல் குஜராத்தின் முதல்வர் ஆனார்.

 

மோடி தன் பதவிக்காலத்தை அக்டோபர் 7, 2001ல் தொடங்கி ஜூலை 2007 வரை இருந்தார். பின் டிசம்பர் 23, 2007 தேர்தலில் மறுபடியும் வெற்றி பெற்று ஆட்சியை தொடர்ந்தார். இவர் தொடர்ந்து 4610 நாட்கள் முதல்வர் பதவியில் இருந்து, குஜராத்து வரலாற்றில் சாதனை படைத்துள்ளார். மிகப்பெரிய அளவில் தொழில் வளர்ச்சி ஏற்படவேண்டும் என்பதில், அதிக ஆர்வம் கொண்டவராக விளங்கிய அவர், மின்சாரம், தண்ணீர், சாலை வசதிகள், பெண் கல்வி, ஆரோக்கியம், ஊழலற்ற நிர்வாகம், விவசாயம், தொழில் வளர்ச்சி என அனைத்துத்துறைகளிலும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி, குஜராத் மாநிலத்தை மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக மாற்றிக்காட்டினார். இவருடைய சாதனையைப் பாராட்டி, “இந்தியா டுடே” நாளிதழ், “இந்தியாவின் சிறந்த முதல்வர்” என்ற விருதை வழங்கி கௌரவித்தது. மேலும், குஜராத் கணினித்துறையில் இவர் ஏற்படுத்திய வளர்ச்சிக்காக ‘கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா’ என்ற அமைப்பு “இ-ரத்னா” விருதை வழங்கி கௌரவித்தது. 


மோடி ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் உறுப்பினராக இருந்துள்ளார். ஊடகங்களும் அறிஞர்களும் இவரை இந்து தேசியவாதியாக விவரிக்கின்றனர். இக்கூற்றை இவரும் ஏற்றுக் கொண்டுள்ளார். கோத்ரா தொடருந்து எரிப்புக்க்குப் பின் 2002 ஆம் ஆண்டு குஜராத்து வன்முறைக்காக மிகக் கடுமையாக சாட்டப்பட்டது இருப்பினும் நீதிமன்றம் தீர்ப்பு இவருக்கு சாதகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. குஜராத்தில் மிக விரைவான பொருளாதார வளர்ச்சிக்கான சூழலை உருவாக்கியதாக இவரது பொருளாதார கோட்பாடுகள் பரவலானப் பாராட்டுக்களைப் பெற்றுள்ளன. இருப்பினும், இவரது ஆட்சி குறிப்பிடத்தக்க மனிதவளர்ச்சிக் கூறுகளில் நேர்மறை தாக்கம் எதுவும் ஏற்படுத்தவில்லை என்றும் குறைகாணப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (தே.ஜ.கூ.) கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, நரேந்திர மோதி நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டார். ஏப்ரல் 2014 முதல் மே 2014 வரை இரண்டு மாதங்களில் நாடெங்கும் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 430 பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். 

2014 ஆம் ஆண்டு 16 ஆவது மக்களவைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முதன்மையேற்கும் தேசிய சனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு வாரணாசி மற்றும் வடோதரா ஆகிய இரண்டு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார். வடோதரா தொகுதியில் 5,70,128 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வாரணாசி தொகுதியில் 3,71,784 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜகவின் மக்களவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் உரையாற்றினார். மே 26, 2014 அன்று பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அவருடன் ஏனைய 44 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். புது தில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் வெளிமுற்றத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணமும், இரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். 


2019 ஆம் ஆண்டு 17 ஆவது மக்களவைத்தேர்தலில் வாரணாசியில் 674664 வாக்குகள் பெற்று 479505 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றியடைந்தார். இரண்டாவதாக வந்த சமாஜ்வாதி கட்சியின் சாலினி யாதவ் 195159 வாக்குளும் மூன்றாவதாக வந்த காங்கிரசின் அசய் ராய் 152548 வாக்குகளும் பெற்றனர். 2019 இந்தியப் பொதுத் தேர்தலில், 543 மக்களவைத் தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 303 தொகுதிகளில் வெற்றி பெற்றதால், நரேந்திர மோடி இரண்டாம் முறையாக இந்தியப் பிரதமராக மே 30, 2019 அன்று பதவி ஏற்றார். அமைச்சர்கள் அனைவரும் முதல் 100 நாட்களுக்குரிய தமது திட்ட அட்டவணையை தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டார். அனைத்து அமைச்சர்களையும், அமைச்சகத்தின் செயலர்களையும் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார். தனது வாழ்க்கைக் கதையை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

அரசுமுறைப் பயணமாக இதுவரை 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முடிய ஓராண்டில் மட்டும் 16 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். குஜராத்தில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்துபிஜேபியில் அடிப்படை உறுப்பினாராக சேர்ந்துதற்போது இந்தியாவின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியின் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது. மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், அவர்கள் நலனை மேம்படுத்தவும் பாடுபடுவதால் நரேந்திர மோடி `மக்களின் தலைவராக’ இருக்கிறார். மக்கள் மத்தியில் இருப்பது, அவர்களுடைய ஆனந்தங்களைப் பகிர்ந்து கொள்வது, அவர்களின் துயரங்களை தீர்ப்பதைத் தவிர அவருக்கு மனநிறைவு அளிக்கும் விஷயம் வேறு எதுவும் கிடையாது. களத்தில் உள்ள மக்களுடன் தொடர்பில் இருப்பது என்ற அவருடைய வலுவான `தனிப்பட்ட தொடர்பு’ என்பது, இணையதளத்தில் அவருடைய தொடர்புகள் மூலம் வெளிப்படுகிறது. இந்தியாவில் தொழில்நுட்பம் சார்ந்த பெரிய தலைவராக அவர் கருதப்படுகிறார். மக்களுடன் தொடர்பு கொள்வது மற்றும் அவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இணையதள வசதிகளை அவர் பயன்படுத்திக் கொள்கிறார்.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.





இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

No comments:

Post a Comment

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது?

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது? கடந்த இரண்டு மாதங்களாக விண்வெளியில் தங்கியுள்ள விண்வெ...