Tuesday, September 8, 2020

செப்டம்பர் 21-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க மத்திய அரசு அனுமதி.(9 முதல் 12 வரை)

செப்டம்பர் 21-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க மத்திய அரசு அனுமதி (9 முதல் 12 வரை)


வைரஸ் தொற்று காரணமாக, கடந்த 5 மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருக்கிறது. எப்போது திறக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், மத்திய அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை, விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 


செப்.,21 முதல் 9-12 ம்வகுப்பு மாணவர்கள் சுய விருப்பத்தின்படி பள்ளிக்கு வரலாம் என அரசு தெரிவித்து உள்ளது. அவ்வாறு வரும் மாணவர்கள் பெற்றோர் ஒப்புதல் பெற்ற பிறகே பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம். பள்ளியில் 6 அடி தனிமனித இடைவெளியை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை கழுவவேண்டும். முக கவசம் அணிய வேண்டும். பிரார்த்தனை கூட்டம் விளையாட்டு, ஒன்று கூடுதல் போன்றவற்றிற்கு அனுமதி கிடையாது. 

கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் இருந்து மாணவர்கள் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதியில்லை. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மன அழுத்தம் போக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும். மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அந்த அறிவிப்பில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பள்ளி திறப்பின்போது, மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Govt Guidance (வழிகாட்டு நெறிமுறை)<----- Click

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...