புதிய கண்டுபிடிப்பில் இந்தியா சாதனை – 4 கேப்சூல் போதும்- காற்றுமாசுக்கு தீர்வு.
நாகரீக உலகில் நாம் வேகமாக இழந்து வரும் வளங்களில் மண், நீருக்கு அடுத்து நாம் சுவாசிக்க அத்தியாவசியமான சுத்தமான காற்றும் ஒன்று. உயிரியல் ஆதாரங்களில் காற்று மிக முக்கிய பங்காற்றுகிறது. காற்றானது பல்வேறு வகைகளில் மாசடைகிறது. குறிப்பாக தொழிற்சாலைகளிலிருந்து வரும் புகை, பிளாஸ்டிக் எரிப்பதனால் வரும் நச்சு புகை உள்ளிட்ட பலவகைளில் மாசடைகிறது. ஆனால், நாம் அன்றாட பயன்படுத்தும், நம்மிடமிருந்து பிரிக்க முடியாத, அத்தியாவசியமாகிவிட்ட பைக், கார் ஆகியவற்றிலிருந்து வரும் புகை காற்றை பெருமளவு மாசுபடுத்துகிறது.
டில்லி அருகே, பூசாவில் உள்ள இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனம் காற்றுமாசுக்கு தீர்வு ஒன்றினை கண்டுபிடித்துள்ளது. எட்டு நுண்ணுயிரிகள் கலந்த டிகம்போஸர் கேப்சூல்களை தயாரித்துள்ளது. ஒரு கேப்சூலின் விலை ரூ 5/-
ஒரு ஹெக்டேர் அல்லது 2.5 ஏக்கர் தோட்டத்தில் 4 கேப்சூல்களை 25 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால் தோட்டத்தில் உள்ள பழைய பயிர்கள் மக்கிப் போகி விடும். இதனால் அவற்றை எரிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. மேலும் நிலம் செழிப்பாக மாறும். 2.5 ஏக்கர் நிலத்திற்கு ரூ 20 மட்டுமே செலவாகும் என்று அந்த நிறுவனம் கூறுகிறது. முக்கியமாக காற்று மாசு அடைவது தடுக்கப்படுகிறது. இது டில்லி மற்றும் அண்டை மாநிலங்களின் காற்று மாசு பிரச்னைக்கு தீர்வாக அமையும்’ இவ்வாறு அவர் கூறினார்.
Source By: Mediyaan
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி
பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி,
புத்தனாம்பட்டி, திருச்சி.
No comments:
Post a Comment