Friday, September 25, 2020

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார்.

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார்.

இன்று பிற்பகல் 1.04 மணிக்கு காலமானார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு, ஆழ்ந்த இரங்கலையும், அவரது ஆத்மா சாந்தியடைய  வேண்டும்...

1946-ம் வருடம் ஜூன் 4 அன்று ஆந்திராவின் நெல்லூரில் பிறந்தார் . 1969-ல் எம்.ஜி.ஆருக்காக அடிமைப்பெண் படத்தில் ஆயிரம் நிலவே வா என்கிற பாடலைப் பாடியதன் மூலம் பிரபலம் அடைந்தார். இதுவரை 16 மொழிகளில் 40,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். கன்னட இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக 1981 பிப்ரவரி 8 அன்று ஒலிப்பதிவுக்கூடத்தில் ஒரே நாளில் 21 பாடல்களைப் பாடி சாதனை நிகழ்த்தியவர். ஆறு முறை சிறந்த பாடகருக்கான தேசிய விருதுகள் பெற்றுள்ளார்.

1966 முதல் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். திரைப்பட பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர். இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷண் விருதும் வழங்கியது.இவருக்கு 2016 ஆம் ஆண்டு 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது.

ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் நேற்று தகவல் அளித்தது.

51 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பி. இன்று காலமானார். இத்தகவலை அவருடைய மகன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்துள்ள தமிழ்த் திரையுலகமும் ரசிகர்களும் எஸ்.பி.பி.யின் மறைவுக்குச் சமூகவலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆயிரம் நிலாக்களிள் 

பாடும் நிலா-நீ...

             😔😔

ஆகையால்,நிலாவே வா..செல்லாதே வா...

               😔😔

சத்தம் இல்லாத தனிமை தேடியா சென்றீர்....

                 😔😔

நான் போகிறேன் மேலே மேலே என சொல்லாமலே......

                 😔😔

பாடும்நிலா போகிறது

இதயம் வரை கனக்கிறது....

இனி விழாக்கானுமா ?

தமிழிசை...

                   😔😔

சேலத்துக்கா மெட்ராசுக்கா திருச்சிக்கா திருத்தனிக்கா...

உலகத்துக்கே சோகம்......

                   😔😔

தேடும் கண் பார்வை தவிக்க...

உனை காணாது....

                   😔😔

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே.....

என்றது இப்போதுதான் 

புரிகிறது....

                   😔😔

பிரிந்தது உங்கள் உடலை விட்டு உயிர் மட்டுமே.....

                   😔😔

நம் பாசப்பினைப்பு அல்ல......

                     😔😔

சென்றுவாருங்கள் ஐயா..

ஆத்மா சாந்தி அடைய பிராத்திகிறேன்...

                      😔😔

உங்கள் குரலை கேட்டு வளர்ந்த கடைக்கோடி ரசிகன் ஒருவனின் குமுறல் இது......

                       😔😔

மலையூரின் சாரலிலே...

எனை மார்போடு சேர்த்வளே....

என்ற குரல்..தான்...

எனை அதிகம் ஈர்த்தது...

                   😔😔

பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்..

நீ வருவாயென....

         பாடும் நிலாவே

                 😔😔

அன்புடன்......

             இ.கிருபா...

(ஈழத்தீவிலிருந்து)



No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...