Sunday, October 18, 2020

அசாமில் நவம்பர் 2 முதல் பள்ளிகள் கல்லூரிகள் இயங்கும்- நேரம் அறிவிப்பு.

 அசாமில் நவம்பர் 2 முதல் பள்ளிகள் கல்லூரிகள் இயங்கும்- நேரம் அறிவிப்பு.

அசாமில் நவம்பர் 2 தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ் பரவியதன் காரணமாக ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நடப்புக் கல்வி ஆண்டுக்கான பாடங்கள் தற்போது ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அக்.15-ம் தேதி முதல், பள்ளிகளைத் திறக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநில அரசுகளே முடிவுசெய்து கொள்ளலாம் என்று அறிவித்து, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

 

இதற்கிடையே அசாம் மாநிலத்தில் நவ.2-ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய கல்வித்துறை அமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சார்மா, ''கரோனா பரவலைத் தடுக்க ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது நவம்பர் 2-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அக்டோபர் 15-ம் தேதி வாக்கில் வெளியிடப்படும். எனினும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள விடுதிகள் திறக்கப்பட வாய்ப்புகள் குறைவே'' என்று அமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா தெரிவித்தார்.



No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...