Sunday, October 4, 2020

உலக விண்வெளி வாரம் (அக்டோபர் 4-10) - இந்திய விண்வெளி சாதனைகளைக் கொண்டாடும்-இஸ்ரோ.

உலக விண்வெளி வாரம்  (அக்டோபர் 4-10) - இந்திய விண்வெளி சாதனைகளைக் கொண்டாடும்-இஸ்ரோ. 

சமூக தேவைகளுக்கான விண்வெளி தொழில்நுட்பத்தின் பயன்பாடு பூமி என்கிற கிரகத்தில் வசிக்கும் மனிதர்களிடம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு வருடமும் உலகமெங்கும் 70 நாடுகள், அக்டோபர் மாதம் 4-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ’உலக விண்வெளி’ வாரமாக கொண்டாடுகின்றன. மனிதகுலத்தின் தேவைகளுக்கு விண்வெளி தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்துவதற்காக சர்வதேச சமூகத்தினரை ஊக்குவிக்கும் வகையில் இது கொண்டாடப்படுகிறது. 1957-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ம் தேதி ’ஸ்புட்னிக்-1’ என்கிற செயற்கை விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. 1967-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி மாநிலங்களின் செயல்பாடுகளைக் காணுதல் மற்றும் சந்திரம் மற்றும் இதர கோள்கள் உள்ளிட்ட புற விண்வெளிகளை அமைத்திக்கான நடவடிக்கைக்காக பயன்படுத்துதல் போன்றவற்றுக்காக உலக நாடுகளிடையே ஒப்பந்தம் கையொப்பமானது. 

ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையம் (SHAR), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) ஏவுதளமாகும். இங்கு பாரம்பரியமாக மக்களை சென்றடையும் வகையிலான பல நிகழ்வுகளுடன் உலக விண்வெளி வாரம் கொண்டாடப்படுகிறது. உலக விண்வெளி வாரத்திற்கான இப்படிப்பட்ட நிகழ்வுகள் 2015ம் ஆண்டு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து திருப்பதி, விஜயவாடா, குண்டூர் ஆகிய அருகாமையிலுள்ள பகுதிகளுக்கும் விரிவடைந்தது. 2016ம் ஆண்டில் இந்நிகழ்வுகள் ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு என தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பகுதிகளில் விரிவடைந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த ஆண்டு இணையதளம் வாயிலாக கொண்டாங்கள் நடைபெறும். 




நிகழ்வின் ஒரு பகுதியாக எழுத்துபோட்டிகள், ஓவியப்போட்டிகள், போன்றவை மாணவர்களிடயே நடத்தப்படும். புகழ்பெற்ற பிரமுகர்களின் விரிவுரைகள் மற்றும் கலந்துரையாடல்கள் மற்றும் காணொளி காட்சிகள் போன்றவை அக்டோபர் 4-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Quiz போட்டியில் ஒவ்வொரு இடத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்கள் SDHC SHAR, ஸ்ரீஹரிகோட்டாவில் நடைபெறும் இறுதி போட்டியில் பங்கேற்பார்கள். இறுதி வெற்றியாளருக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்படும் காட்சிகளை காண்பதற்கு வாய்ப்பளிக்கப்படும். மாணவர்களும் பொதுமக்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு பயனடையலாம்.


Source By: ISRO

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.


No comments:

Post a Comment

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது?

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது? கடந்த இரண்டு மாதங்களாக விண்வெளியில் தங்கியுள்ள விண்வெ...