Saturday, October 17, 2020

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை: கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை: கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் கல்வி உதவித்தொகையைப் பெறக் கல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ''கல்லூரி இளங்கலை, முதுகலை, தொழில்முறைப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள் மத்தியக் கல்வி அமைச்சகத்தின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். 

மாணவர்கள் http://scholarships.gov.in என்ற இணையதளத்தில் அக்.31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். புதிதாக 2020-ம் ஆண்டு உதவித்தொகை பெறுவோர், 2019-ம் ஆண்டு உதவித்தொகை பெற்றோர் முதல் முறையாகப் புதுப்பித்தல், 2018-ம் ஆண்டு உதவித்தொகை பெற்றோர் 2-வது முறையாகப் புதுப்பித்தல், 2017-ம் ஆண்டு உதவித்தொகை பெற்றோர் 3-வது முறையாகப் புதுப்பித்தல், 2016-ம் ஆண்டு உதவித்தொகை பெற்றோர் 5-வது முறையாகப் புதுப்பித்தல் ஆகியவற்றுக்காக விண்ணப்பிக்கலாம்.

 

இதற்கு தேசியக் கல்வி உதவித்தொகை தளத்தில் (NSP) பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

* பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குக் குறைவாக உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

* மாணவர்கள் 12-ம் வகுப்பில் 80 சதவீதத்துக்குக் குறையாமல் மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்குத் தேர்வாகும் மாணவர்களின் இளங்கலைப் படிப்புக்குக்கு முதல் 3 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். முதுகலைப் படிப்புகளுக்கு ஆண்டுதோறும் ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். 5 ஆண்டுகள் கொண்ட தொழில்முறைப் படிப்புக்கு 4 மற்றும் 5-வது ஆண்டுகளில் ஆண்டுதோறும் ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.

நன்றி: hindutamil.

1 comment:

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...