Thursday, November 5, 2020

தமிழக மக்களுக்கு ரூ.10,000 பரிசு – தேர்தல் ஆணையம் பம்பர் அறிவிப்பு

தமிழக மக்களுக்கு ரூ.10,000 பரிசு – தேர்தல் ஆணையம் பம்பர் அறிவிப்பு 

தமிழகத்தில் அடுத்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் பொதுமக்களுக்கு தேர்தல் ஆணையம் ஆனது இணையவழி போட்டி அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வாக்காளர் தேர்தல் நடைமுறையில் பங்கேற்க முறையான அறிவூட்டல் (SVEEP) என்ற பெயரில் ஒரு திட்டத்தினை தேர்தல் ஆணையம் துவங்கி இருந்தது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு தேர்தலில் பங்கேற்பது குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த இணையவழியில் போஸ்டர்கள் வரைதல், கவிதை மற்றும் பாட்டுப் போட்டி மற்றும் ஸ்லோகன் எழுதுதல் போன்ற போட்டிகளை நடத்த உள்ளது. அடுத்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

SVEEP – 2020 ஆன்லைன் போட்டிகள் :

தமிழக மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இப்போட்டிகளுக்கான ஆன்லைன் இணைய முகவரி வெளியிடப்படும். SVEEP – 2020 ஆன்லைன் போட்டிகள்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போட்டிகள், தேர்தலில் 100% மக்களின் வாக்களிப்பினை உறுதி செய்ய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 18ம் தேதி மாலை 5 மணி முதல் இந்த போட்டிகளுக்கான இணைய முகவரிகள் செயல்பட தொடங்கி விடும்.

பரிசு தொகை :

முதல் பரிசு – ரூ.10,000/-

இரண்டாம் பரிசு – ரூ.7,000/-

மூன்றாம் பரிசு – ரூ.5,000/-

https://www.elections.tn.gov.in < ---Link

தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான குறும்படங்கள், அனிமேஷன் வீடியோக்கள், பாடல்கள், மீம்ஸ்கள் உள்ளிட்டவற்றில் நல்ல அனுபவம் உள்ள மீடியா ஏஜென்சிகள், தனி நபர்கள் தேர்தல் ஆணையத்தைத் தொடர்பு கொள்ளலாம். அனைவரது பங்களிப்பையும் வரவேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் இதில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணைய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அலுவலகத்தின் தேர்தல் இணையதளத்தில் ‘ஸ்வீப் (SVEEP) போட்டி 2020- இயங்கலை போட்டிகள்’ என்ற இணையவழி மூலமாக பங்கேற்கலாம்.

இப்போட்டிகள் அனைத்தும் இணைய தளம் மூலமாக மட்டுமே நடத்தப்படும். இந்தியாவில் தேர்தல்கள் மற்றும் 100 வாக்காளர் பட்டியல் பெயர் பதிவு மற்றும் வாக்குப்பதிவினை அடைவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் என்பதே இப்போட்டியின் முக்கிய கருத்துருவாகும்.

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...