Monday, November 9, 2020

நவம்பர் 16ல் பள்ளி திறக்கலாம் - பெற்றோர்கள் கருத்து.

நவம்பர் 16ல் பள்ளி திறக்கலாம்- பெற்றோர்கள் கருத்து. 

தமிழகத்தில் பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம்  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைபெற்றது. இதில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் வைரஸ் பரவலை தடுக்க பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் பலகட்ட தளர்வுகளுக்குப் பிறகு, நவம்பர் 16ஆம் தேதி பள்ளிகளை திறக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டார். இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பள்ளி கல்லூரிகளை திறக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன் அடிப்படையில் மாணவர்களின் பெற்றோர்களிடம் இன்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என அரசு அறிவித்தது. அதன்  அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் காலை 10 மணிமுதல் நடைபெற்றது. மாணவர்களின் பெற்றோர்கள் முகக்கவசம் அணிந்தும் பள்ளிகளின் வாசல்களில் சானிடைசர் மூலம் கைகளை சுத்தப் படுத்திக் கொண்டும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.இதில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டு பள்ளியை திறக்க ஆதரவு தெரிவித்திருந்தனர். 

நன்றி : மாலை தமிழகம் 




1 comment:

  1. பெற்றோர்கள் அனைவரும் மிகப்பெரிய மருத்துவர்கள் எனவே அவர்கள் அறிக்கை கொடுத்ததால் தாராளமாக பள்ளிகளை திறக்கலாம்

    ReplyDelete

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...