Friday, November 20, 2020

வியாழன் கோள் பற்றிய ஆய்வுக்கு புகழ்பெற்ற டச்சு கணிதவியலாளர், இயற்பியலாளர், வானியலாளர், வில்லெம் தெ சிட்டர் நினைவு தினம் இன்று (நவம்பர் 20, 1934).

வியாழன் கோள் பற்றிய ஆய்வுக்கு புகழ்பெற்ற டச்சு கணிதவியலாளர், இயற்பியலாளர், வானியலாளர், வில்லெம் தெ சிட்டர்  நினைவு தினம் இன்று (நவம்பர் 20, 1934).


வில்லெம் தெ சிட்டர் (Willem de Sitter) மே 6, 1872ல்  சுனீக்கில் பிறந்தார். இவர், கணிதவியலைக் குரோனிங்கன் பல்கலைக்கழகத்தில் பயின்றார். குரோனிங்கன் வானியல் ஆய்வகத்தில் பிறகு சேர்ந்தார். தென்னாப்பிரிக்கா, நன்னம்பிக்கை முனையில் உள்ள அரசு வான்காணகத்தில் 1897 முதல் 1899 வரை பணிபுரிந்தார். பின்னர், 1908ல் இலெய்டன் பல்கலைக்கழக வானியல் கட்டிலில் பணியமர்த்தப்பட்டார். 1919ல் இருந்து தனது இறப்பு வரை இலெய்டன் பல்கலைக்கழக இயக்குநராக இருந்தார். இவரது மகன்களில் ஒருவரான உல்போ தெ சிட்டர் ஒரு டச்சு புவியியலாளர் ஆவார். மற்றொருமகனாகிய உல்போ தெ சிட்டர் ஒரு சமூகவியலாளர் ஆவார்.

 Space Moon GIF by NASA - Find & Share on GIPHYPlanets GIFs | Tenor

Jupiter GIFs | Tenor

வில்லெம் அண்டப் புறநிலைக் கட்டமைப்புப் புலத்தில் விரிவான ஆய்வு செய்துள்ளார். ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுடன் இணைந்து 1932ல் ஓர் ஆய்வுரை வெளியிட்டார். இதில் இருவரும் புடவி வளைமைக்கான அண்டத் தரவுகளின் விளைவுகள் பற்றி விவாதித்துள்ளனர். இவர் தே சிட்டர் வெளி, தெ சிட்டர் புடவி ஆகிய கருத்துப் படிமங்களை விவரித்துள்ளார். இது ஐன்ஸ்டைனின் பொது சார்பியலுக்கான ஒரு தீர்வாகும். இதில் பொருண்மமோ நேரியல் அண்ட மாறிலியோ அமையவில்லை. இது இயல்வளர்ச்சிப் போக்கில் தொடர்ந்து விரிவுறும் வெற்றுப் புடவி ஆகும். இவர் வியாழன் கோள் பற்றிய ஆய்வுக்கும் புகழ்பெற்ரவர் ஆவார். 



வில்லெம் டச்சு கிழக்கிந்தியாவாக அன்று விளங்கிய இந்தோனேசியாவில் உள்ள இலெம்பாங்கில் அமைந்த போசுச்சா வான்காணகத்தின் இயக்குநராக இருந்தார். இவர் இங்கே மெசியர் 4 எனும் பேரியல் விண்மீன்கொத்தை ஆய்வு செய்தார். 1912ல் நெதர்லாந்து அரசு கலை, அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினர் ஆனார். ஜேம்சு கிரெய்கு வாட்சன் பதக்கம் (1929), புரூசு பதக்கம்(1931), அரசு வானியல் கழகப் பொற்பதக்கம்(1931) போன்ற பதக்கங்கள் பெற்றுள்ளார். நிலாக் குழிப்பள்ளம் தெ சிட்டர் குறுங்கோள் 1686 தெ சிட்டர் என இவரது பெயர் இடப்பட்டள்ளது. வியாழன் கோள் பற்றிய ஆய்வுக்கு புகழ்பெற்ற வில்லெம் தெ சிட்டர்  நவம்பர் 20, 1934ல் தனது 62வது அகவையில், லைடனில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.




இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...