Thursday, November 19, 2020

சூரிய சக்தி மூலம் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்த வினிஷா மாணவிக்கு குவிந்த பாராட்டுக்கள்

சூரிய சக்தி மூலம் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்த வினிஷா மாணவிக்கு குவிந்த பாராட்டுக்கள்.


கிளாஸ்கோவில் நடந்த காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாட்டில் பேசிய தமிழகத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி வினிஷா உமாசங்கர் பேசிய பேச்சால் உலகத் தலைவர்கள் வெலவெலத்துப் போய் விட்டனர்.


சுற்றுச்சூழலுக்கான ஆஸ்கர் விருது எனப்படும் எர்த்ஷாட் பிரைஸ் பெறுவதற்கான இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக வினிஷா தேர்வாகியுள்ளார். இதையடுத்து கிளாஸ்கோ மாநாட்டில் அவரை உரை நிகழ்த்த வருமாறு இங்கிலாந்து இளவரசர் வில்லியம் அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று வினிஷா உரை நிகழ்த்தினார்.

அவரது உரையில் அனல் பறந்தது. பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பிடன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் முன்னிலையில் வினிஷா, வெளுத்து வாங்கி பேசினார். "பொய் வாக்குறுதிகளை மட்டுமே தலைவர்கள் அளிக்கிறார்கள்" என்று வினிஷா பேசிய போது அனைவரும் வெலவெலத்துப் போய் விட்டனர்.

வினிஷா பேசுகையில், "எனது தலைமுறையினர் கடும் கோபத்துடனும், விரக்தியுடனும் இருக்கிறோம். பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே உலகத் தலைவர்கள் அளிக்கிறார்கள். இது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது. இந்த பூமியை தயவு செய்து காப்பாற்றுங்கள். அதற்காக ஆக்கப்பூர்வமாக பாடுபடுங்கள்.


நாம் பேசுவதை நிறுத்தி விட்டு செயலில் இறங்க வேண்டும் என்று உங்களை மிகுந்த மரியாதையுடன் கேட்டுக் கொள்கிறேன். எர்த்ஷாட் பிரைஸ் பெற்றவர்களும் சரி, இறுதிச் சுற்றுக்கு வந்தவர்களும் சரி, நிறைய கண்டுபிடிப்புகளை செய்துள்ளோம். தீர்வுகளை வைத்துள்ளோம். திட்டங்கள் தீட்டியுள்ளோம். சுற்றுச்சூழல் மாசு, காற்று மாசு உள்ளிட்டவற்றை சரி செய்யத் தேவையான ஆலோசனைகளை வைத்துள்ளோம். பழைய விவாதங்களை மறந்து விட்டு, எங்களது கருத்துக்களையும் கேளுங்கள். புதிய எதிர்காலத்துக்குத் திட்டமிடுங்கள். உங்களது பொன்னான நேரத்தை அதற்காக ஒதுக்குங்கள். பணத்தை வீணடிக்காமல் இதற்காக செலவிடுங்கள்.

எங்களைப் போன்ற இளம் தலைமுறையினருடன் நீங்கள் இணைய வேண்டும். எங்களுக்கு ஆதரவாக இருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். பழைய முறை சிந்தனைகள் விட்டொழிய வேண்டும். நமக்கு புதிய சிந்தனை தேவைப்படுகிறது. ஆனால் எங்களுடன் நீங்கள் இணைய முன்வந்தால், உங்களுக்குப் பிடிக்குதோ இல்லையோ, நாங்கள்தான் உங்களை வழி நடத்துவோம். நீங்கள் தாமதம் செய்தாலும் நாங்கள் துரிதமாக இருப்போம். அதேசமயம், எங்களுடன் சேர்ந்ததற்காக நீங்கள் நிச்சயம் வருத்தப்பட மாட்டீர்கள்.


உலகத் தலைவர்கள் வெற்று வாக்குறுதிகளை மட்டுமே அளிப்பதை எனது தலைமுறையினர் ரசிக்கவில்லை. எங்களது கோபத்துக்கு நியாயமும் உண்டு. ஆனால் கோபத்தை வெளிக்காட்ட எங்களுக்கு நேரமில்லை. செயலில் இறங்க வேண்டிய நேரத்துக்கு நாம் வந்து விட்டோம். நான் இந்தியாவிலிருந்து வந்த பெண் இல்லை, நான் இந்த பூமியின் பெண், அதற்காக பெருமைப்படுகிறேன். நான் ஒரு மாணவி, கண்டுபிடிப்பாளர், சுற்றுச்சூழலியலாளர்.. ஆனால் எல்லாவற்றையும் விட நான் ஒரு மிகச் சிறந்த நம்பிக்கையாளர் என்று பேசினார் வினிஷா.

சூரிய சக்தி மூலம் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்த திருவண்ணாமலை மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. மாணவி வினிஷாவின் முயற்சிகளுக்கு அவர் படிக்கும் பள்ளி நிர்வாகம் தரப்பிலிருந்து அனைத்து ஒத்துழைப்பும் தந்து ஊக்குவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சுற்றுச்சூழலை காக்கவேண்டும் என்ற உயரிய சிந்தனையோடு சூரிய சக்தியால் இயங்கும் இஸ்திரி பெட்டி வடிவமைத்திருக்கிறார் வினிஷா. 


புதிய கண்டுபிடிப்புதிருவண்ணாமலையை சேர்ந்த உமாசங்கரின் மகள் வினிஷா அதே பகுதியில் உள்ள எஸ்.கே.பி. இண்டர்நேஷனல் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பாடங்களை மனப்பாடம் செய்தோமா, மதிப்பெண் பெற்றோமா என்றில்லாமல் சமூகம் மீதான தனது அக்கறையால் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும் என்பதில் வினிஷா எப்போதும் ஆர்வம் உடையவர். சுற்றுச்சூழல்கரித்துண்டுகளுக்கு மாற்றாக சூரிய சக்தியை கொண்டு செயல்படும் இஸ்திரி பெட்டியை வடிவமைத்த வினிஷாவின் திறமையை கவுரவிக்கும் பொருட்டு ஸ்வீடன் அரசு பட்டயம், பதக்கம் மற்றும் எட்டு லட்ச ரூபாய் பணமும் வழங்கியுள்ளது. இதனை ஸ்வீடன் நாட்டு துணை பிரதமர் இசபெல்லா காணொலி நிகழ்வு மூலம் வழங்கியுள்ளார்.  வினிஷாவின் திறமையை பாராட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனிடையே கடந்தாண்டு அறிதிறன் மின் விசிறியை கண்டறிந்ததற்காக அப்துல்கலாம் இக்னைட் விருதும் இவர் பெற்றிருக்கிறார்.  இந்நிலையில் தற்போது பிரதமரின் ராஷ்ட்ரிய பால் சக்தி புரஸ்கார் விருதுக்கு வினிஷா பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் ஒன்றை மட்டும் இலக்காக கொண்டு கோழிப்பண்ணைகளை போல் செயல்படும் பள்ளிகளுக்கு மத்தியில் இது போன்று சமூகத்துக்கு பயனான காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது எஸ்.கே.பி. இண்டர்நேஷனல் பள்ளி.





இது போன்ற தகவல் பெற

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

Notification for Student’s Registrations in ISRO START Programme

Notification for Student’s Registrations in ISRO START Programme. இஸ்ரோ ஆன்லைன் படிப்பு பதிவு பதிவுகளுக்கான அறிவிப்பு. ISRO has an active sp...