Friday, November 27, 2020

அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கான பட்டியலில், தமிழகம் தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது.

அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கான பட்டியலில், தமிழகம் தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்தியா டுடே இதழ் நடத்திய ஆய்வில், அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கான பட்டியலில், தமிழகம் தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்தியா டுடே இதழ் ஆண்டுதோறும் சிறந்த மாநிலங்களுக்கான விருதைவழங்கி வருகிறது. இந்த ஆண்டிற்கான விருது வரும் டிச.,5ம் தேதி வழங்கப்பட உள்ளது இந்த விருதுக்கு தேர்வான மாநிலங்களின் பட்டியலை அந்த இதழ் வெளியிட்டுள்ளது. அதில், அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. நீர்மேலாண்மை,சுகாதாரத்துறை,, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை இந்தியா டுடே இதழ் நிர்வாகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு கடிதமாக கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில், இமாச்சல பிரதேசம் இரண்டாவது இடத்தையும், பஞ்சாப் மூன்றாவது இடத்தையும், கேரளா 4வது இடத்தையும், குஜராத் 5வது இடத்தையும் பிடித்துள்ளது.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு

அரசு அதிகாரிகள், பணியாளர்களின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பாலும், தமிழக மக்களின் ஒத்துழைப்பாலுமே "தொடர்ந்து 3-வது முறையாக சிறந்த மாநிலமாக தமிழ்நாடு" தேர்வாகி சாதனை புரிந்துள்ளது.
இவ்விருதினை அனைவருக்கும் அன்போடு சமர்ப்பிக்கிறேன். தொடர்ந்து தமிழக வளர்ச்சிக்கு ஒற்றுமையாக உழைப்போம்!

இந்தியா டுடே இதழ் நடத்திய ஆய்வில் ஒட்டுமொத்த துறைகளில் சிறந்து விளக்கக்கூடிய மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழ்நாட்டை முதலிடமாக தேர்ந்தெடுத்து கடிதம் அனுப்பியுள்ளது.

@IndiaToday இதழ் நிர்வாகத்திற்கு தமிழக அரசு சார்பில், எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...