Thursday, November 19, 2020

✍️கவிதை ✍️ 👩‍❤️‍💋‍👨என் அப்பா ❤️❤️❤️அப்பாவின் சிறப்பு - இரஞ்சிதா தியாகராஜன்.

 ✍️கவிதை ✍️

    👩‍❤️‍💋‍👨என் அப்பா ❤️❤️❤️ இரஞ்சிதா தியாகராஜன்.❤️

அப்பாவின் சிறப்பு.

அழகிய சின்ன கிராமமாம்.... 

நால்வரில் கடைக்குட்டியாய் பிறந்ததோர் ஆண் சிங்கமாம் 


நான் காதல் கொண்ட முதல் ஆண்மகனே!!! உன் செல்ல மகளாய் பிறக்க என்ன தவம் செய்தேனோ!!! நானே....


பள்ளிக்கூடம் பார்த்தால் பறந்திடுவாய்.... 

பாசத்திற்கு மட்டும் மயங்கிடுவாய்.... 


அன்பின் அரசரே.... 

என் முதல் காதலரே!!! 

      அப்பா.... 

பாசத்தை தெளிக்கும் பயிரே !!!

உங்கள் அன்பை பிடித்ததாலோ என்னவோ????? 

ஏழ்மை நம்மை விட்டு விலக மறுக்கிறது.... 


மழைத்துளியோ சிரிக்கிறது... 

பனித்துளியோ நனைக்கிறது.... 

வெயிலோ வாட்டுகிறது.... 

நடசத்திரமோ இரசிக்கிறது நம்மை பார்த்து.... 

வீட்டின் மேற்கூரை ஓட்டையில்... 


நெற்பயிர் கூட ஓர் நாள் அறுவடையாகும்.... 

உங்கள் உழைப்போ அயராதாகும்... 


வலிகள் நிறைந்த உன் மார்பை... 

என் பேனாவின் விழியினால் துடைக்க முயல்கிறேன்.... 

கவிதைத் தாயின் வழியாக மீண்டும் கருத்தரிக்கிறேன் உங்கள் மகளாக....  


என் தந்தையே!!!!! 

இனிய ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள் 🌸🌸🌸

✍️கவிதை ✍️: இரஞ்சிதா தியாகராஜன், இயற்பியல், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.










2 comments:

Notification for Student’s Registrations in ISRO START Programme

Notification for Student’s Registrations in ISRO START Programme. இஸ்ரோ ஆன்லைன் படிப்பு பதிவு பதிவுகளுக்கான அறிவிப்பு. ISRO has an active sp...