Wednesday, November 4, 2020

பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஆலோசனை

பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஆலோசனை

பள்ளி,  கல்லூரிகள் நவம்பர் 16ல் திறக்க எதிர்ப்பு எழுந்துள்ள நிலைையில் திறப்பு குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிின்றார்.


தமிழகத்தில் நவ.16-ல் பள்ளிகளை திறக்கலாமா? தள்ளி வைக்கலாமா? என்பது குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வுகள் நடந்து கொண்டு இருந்தபோதே நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. பிளஸ் 2 தேர்வின் இறுதி நாளான அன்று தொற்றின் வேகம் அதிகரித்தது. தேர்வு முடிந்த மறுநாளான  மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஏப்ரல் மாதம் நடக்க இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கீழ் வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.  பள்ளிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.

பின்னர் படிப்படியாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளும், 9,10,பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் பாடம் நடத்தும் வகையில் பள்ளிகளும் நவம்பர் 16ம் தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு  அறிவித்துள்ளது. இருப்பினும், கொரோனா தொற்று முற்றிலும் முடிவுக்கு வராத நிலையில் தங்கள் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்ப முடியாது என்ற பெற்றோர் ஒட்டுமொத்தமாக மறுத்து வருகின்றனர். தமிழக அரசின் பள்ளி  திறப்பு அறிவிப்பிற்கு எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தப்பின் பள்ளிகளை திறக்கலாமா?  இல்லை தள்ளி வைக்கலாமா? என்பது குறித்து அரசு அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளிகள் திறப்பு குறித்து வரும் 9 ஆம் தேதி கருத்துக்கேட்பு கூட்டம்.பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக சங்கத்தினர் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு...


இந்நிலையில் வரும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் விடுமுறைகள் வருவதைக் கருத்தில் கொண்டும், மாணவர்கள் பாடங்களை முழுமையாக கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் அல்லது இணையவழி வாயிலாகவும் கற்பது அவர்களுக்கு முழுமையான நிறைவினை அளிக்காது என்பதையும் ஆசிரியர்கள் மூலமாக நேரடி வகுப்பறையில் கற்பதன் மூலம் தான் மாணவர்கள் எளிதாகப் பாடங்களைப் புரிந்துகொண்டு கற்பதற்கும் தேர்வினை எதிர்கொள்வதற்கும் ஏதுவாக இருக்கும் என்பதையும் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டது.

மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி அந்தந்த பள்ளி நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து பள்ளிகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே மாநிலத்தின் வழிகாட்டு நெறிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் வாயிலாகப் பள்ளிகள் திறப்பு குறித்து சில கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஏற்கனவே பெற்றோர்கள், கல்வியாளர்களின் கருத்துக்கள் அரசால் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டு இருந்தபோதிலும் மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி அந்தந்த அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடமும், தனியார் பள்ளிகளின் நிர்வாகத்துடனும் பள்ளிகள் திறப்பது குறித்த கருத்துகளைப் பெற்றிட ஏதுவாக வருகின்ற நவம்பர் 9ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கோரிக்கை குறித்து அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு கருத்துக் கேட்புக் கூட்டம் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களின் தலைமையில் காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ளது.

இந்த கருத்துக் கேட்புக் கூட்டங்களில் 9-10 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம், கலந்து கொள்ள இயலாதவர்கள் கடிதம் மூலமாக தங்களின் கருத்துகளைத் தெரிவிக்கலாம். இந்த கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்படும் முடிவின் அடிப்படையில் அந்தந்த பள்ளிகள் திறப்பது குறித்து அரசால் முடிவெடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...