Wednesday, November 11, 2020

✍🏻 இயற்கை வாழ்வியல் முறை 🍑மாதுளம் பழத்தின் மகத்துவம் .

 ✍🏻 இயற்கை வாழ்வியல் முறை 🍑மாதுளம் பழத்தின் மகத்துவம் . 

மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. மாதுளம்பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. 

🍑🍑🍑🍑🍑🍑

உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும் அதிக அளவிலும் அழித்து விடுகிறது அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது. மாதுளையில் இனிப்பு புளிப்பு துவர்ப்பு ஆகிய மூன்று சுவைகள் உள்ளன இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும் மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. 

Pomegranate GIFs - Get the best GIF on GIPHY

🍑🍑🍑🍑🍑🍑

பித்தத்தைப் போக்கி இருமலை நிறுத்துகிறது. புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்கு சிறந்த மருந்தாகிறது தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது வயிற்றுக்குள் ஏற்படும் தொந்தரவுகளை நீக்குகிறது எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் ரத்தவிருத்தி ஏற்படும் சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.

🍑🍑🍑🍑🍑🍑

தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலவீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும் உடல் எடை கூடும் தொண்டை மார்பு நுரையீரல் குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலவீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.

 Анимированная открытка "Её Sekret гранаты фрукт"

🍑🍑🍑🍑🍑🍑

மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும் மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். உடல் குளிர்ச்சியடையும் .

🍑🍑🍑🍑🍑🍑

காய்ச்சல் தணியும் மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகும் மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

🍑🍑🍑🍑🍑🍑

மலராத மாதுளம் மொட்டுக்களைக் காய வைத்து பொடித்துக் கொண்டு இதில் சிறிதளவு ஏலம், கசகசாவையும் பொடித்துக் கலந்து 10 கிராம் அளவில் நெய்யில் குழைத்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் வயிற்றுப் போக்கும் சீத பேதியும் குணமாகும்.

🍑🍑🍑🍑🍑🍑

உலர்த்திய மாதுளம் பூக்கள் 10 கிராமுக்கு மாதுளம் மரப்பட்டை 20 கிராம் சேர்த்துக் கொதிக்க வைத்து, சிறிது படிகாரத்தைக் கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். கொப்பளிப்பது தொண்டை வரை செல்ல வேண்டும். இவ்வாறு கொப்பளித்தால் தொண்டைப்புண் தொண்டைவலிவாய்ப்புண் குணமாகும். மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் தொல்லைப்படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்🍑🍑🍑🍑🍑🍑

மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கட்டிக் கொண்டால் தலைவலி தீரும். வெப்பநோய் தீரும். மாதுளம் பூக்கள் அருகம்புல், மிளகு, சீரகம் அதிமதுரம் சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்துக் கொண்டு வேளைக்கு 30 மில்லி எடுத்து இதில் பசு வெண்ணெய் சேர்த்துக் கலக்கித் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்கும் அலர்ஜியை நிவர்த்திக்கும் மூலச்சூடும் வெட்டை நோயும் நீர்க்கடுப்பும் நிவர்த்தியாகும்

🍑🍑🍑🍑🍑🍑

மாதுளம்பூச்சாறு 300 கிராம் சேகரித்து 200 கிராம் பசு நெய் சேர்த்து பூச்சாறு சுண்டும் அளவிற்கு காய்ச்சி நெய்யை வடித்து வைத்துக் கொண்டு தினசரி இரண்டு தேக்கரண்டி வீதம் காலை மாலை சாப்பிட்டு வந்தால் இரண்டு மாதத்தில் கடுமையான சயரோகப்பாதிப்பு, படிப்படியாகக் குறைந்து விடும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல் தேறும். தொடர்ந்து இருபது தினங்கள் இதே நெய்யை காலை மாலை சாப்பிட்டு வந்தால் எல்லா விதமான மூலநோயும் தீரும்.

🍑🍑🍑🍑🍑🍑

மாதுளம் விதை வேர்ப்பட்டை, மரப்பட்டை இவற்றைச் சமமாக எடுத்து உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு 5 கிராம் வீதம் சுடுதண்ணிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் கர்ப்பாசய நோய்கள் அனைத்தும் நிவர்த்தியாகி பெண்களின் ஆரோக்கியம் நீடிக்குமாம்

🍑🍑🍑🍑🍑🍑

புளிப்புமாதுளம் பழத்தோல் சாதிக்காய் சமமாகச் சேர்த்து வினிகர் விட்டு நன்கு அரைத்து மிளகு அளவில் மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு தினசரி 2-5 மாத்திரைகள் சாப்பிட்டுவந்தால் வயிற்றுப் புண்கள் குணமாகும்.

🍑🍑🍑🍑🍑🍑

துவர்ப்பு மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து புண்களின் மீது போட்டு வந்தால் விரைவில் புண்கள் ஆறிவிடும். மாதுளம் மரப்பட்டையை கஷாயம் தயாரித்து வாய் கொப்பளித்தால் ஆடும் பற்கள் கெட்டிப்படும் ஈறுகளின் நோய் தீரும் பற்களின் வலி குறையும். மாதுளை ஒரு பல்முனை நிவாரணியாகப் பயன்படுகிறது🍑🍑🍑🍑🍑🍑

மாதுளம்பழ தோல் அதனுள் இருக்கும் முத்து, விதை ஆகியவற்றை உள்ளடக்கிய பதப்படுத்தப்பட்ட பொருள் 60 பேருக்கு ஒரு மாத காலத்துக்கு வழங்கப்பட்டது. அவர்களுடைய உடலில் நடைபெறும் ரசாயன மாற்றங்களை இத்தகைய பொருள் சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடப்பட்டது.

Slicing A Pomegranate GIF by tothetenthpower | Gfycat

🍑🍑🍑🍑🍑🍑

மாதுளம் பழத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளை சாப்பிட்டர்களின் உடல் செல்கள் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது தேய்வடைவது குறைவாக இருந்தது. அதாவது மூளை, தசை கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றின் செயல் பலவீனமாவதை குறைக்கிறது.

🍑🍑🍑🍑🍑🍑

மேலும் முதுமைக்கு முக்கியமான அறிகுறியாக விளங்கும் தோல் சுருக்கத்துக்கு காரணமாக உள்ள செல்களின் டிஎன்ஏவை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் வயது அதிகமானாலும் தோலில் சுருக்கம் ஏற்டாது இதனால் இளமையுடன் இருக்கலாம்.




🍑🍑🍑🍑🍑🍑

இதய நோய் வராமல் தடுக்கவும், மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் மாதுளம் பழம் உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக வெறும் முத்துக்களை சாப்பிடுவதைவிட அதன் தோல் மற்றும் விதை ஆகிய அனைத்தையும் பதப்படுத்தி சாப்பிடுவது கூடுதல் பலனளிக்கும்.

🍑🍑🍑🍑🍑🍑

மாதுளம் பூக்களைச் சேகரித்து உலர்த்தி தூள் செய்து வைத்துக் கொள்ளலாம் இதனை ½ தேக்கரண்டி அளவு ¼ டம்ளர் தண்ணீரில் இட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி வாய் கொப்பளித்து வர வாய்ப்புண் தொண்டை இரணம், வலி தீரும்.

🍑🍑🍑🍑🍑🍑

பல்லுக்கு உதாரணமாக மாதுளை விதைகளைக் கூறுவார்கள் நன்கு முற்றிய மாதுளம் பழத்தை உடைத்தாலே உள்ளே முத்துப் பற்கள் போன்று அழகாக அடுக்கி வைக்கப்பட்டிக்கும் விதைகள் அனைவரையும் அதிசயிக்க வைக்கும். பற்களையும் ஈறுகளையும் பாதுகாக்க மாதுளம் பழம் சாப்பிடுவது மிகவும் அவசியமாகும்.

🍑🍑🍑🍑🍑🍑

மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு மாதுளையில் இனிப்பு புளிப்பு துவர்ப்பு ஆகிய மூன்று வகை சுவைகள் உள்ளன.

🍑🍑🍑🍑🍑🍑

இதில் இனிப்பு புளிப்பு இரண்டு வகை மாதுளையும் சக்தியளிக்கும். பழத்தில் சிறந்தது. மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும் அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.

🍑🍑🍑🍑🍑🍑

fruithacks2 | Blossom

🌷🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்.

🌻🌻🌻🌻🌻🌻

உடலில் உள்ள   எல்லா உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய 

 இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்.

🌻🌻🌻🌻🌻🌻

நன்றி : பெருசங்கர், ஈரோடு மாவட்டம், பவானி.

(( செல் நம்பர்)) (( 6383487768)) 

(( வாட்ஸ் அப்))  (( 7598258480 ))

No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...