✍️கவிதை ✍️ 🧎🏻♂️குழந்தை தொழிலாளர்கள்🧎🏻♂️- இரஞ்சிதா தியாகராஜன்.
புத்தகம் சுமக்க ஆசைத்தான்....
பொதியைச் சுமக்கிறேன்.....
பிஞ்சு விரல்களால் பென்சில் பிடிக்க ஆசைத்தான்....
பஞ்சின் நூலை நெய்கிறேன்....
உயிர் எழுத்து உச்சரிக்க
ஆசைத்தான்....
உயிர் போக உழைக்கிறேன்...
என்னை போன்ற சிறுவர்களோடு சிரித்து மகிழ ஆசைத்தான்....
சிரமத்தோடு சிரிக்கிறேன்....
கண்களும் சிறிது உறங்கவே ஆசைத்தான்....
உட்கார கூடாதென உதைக்கிறார் சிலர்....
படித்து விண்ணகம் செல்ல ஆசைத்தான்....
விடியலை எண்ணி ஏங்குகிறேன்....
ஆசைத்தான்.... ஆசைத்தான்...
என் ஆசைகளை இன்னும் சொல்லவே ஆசைத்தான்...
குழந்தை தொழிலாளர் என்பார் எனது பெயர்...
யாரேனும் கூண்டில் இருந்து விடுவிக்க வாருங்கள்....
எனக்கு விடியலைத் தாருங்கள்....
என் ஆசைகளும் என்று நிறைவேறுமோ....???☹️ ☹️☹️
நிறைவேறும் முன்னே மரணமும் என்னை ஆளுமோ...!!!!!
✍️கவிதை ✍️: இரஞ்சிதா தியாகராஜன், இயற்பியல், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உயிர் எழுத்து உச்சரிக்க ஆசைதான். .. உயிர்போல உழைக்கிறேன்..... great this line🙏
ReplyDeleteSemma😻
ReplyDeleteSuper RANJITHA
ReplyDelete