Tuesday, November 10, 2020

✍️கவிதை ✍️ 🌈அறிவியல் 🌈 அறிவியல்.... அற்புத அறிவியல்.... அகில உலகமே படிக்கும் புது இயல்.... இரஞ்சிதா தியாகராஜன்.

 ✍️கவிதை ✍️

         🌈அறிவியல் 🌈


அறிவியல்.... அற்புத அறிவியல்.... 

அகில உலகமே படிக்கும் புது இயல்.... 


ஏறு.... ஏறு.... ஏறு... 

கட்டி நிலம் உழுத காலமோ வேறு.... 

எங்கள் அறிவியல் வளர்ச்சியைப் பாரு... 

அதிருதே மேலை நாடு...


சுந்தர்பிச்சையே.... சுந்தர்பிச்சையே.... 

கணிப்பொறியில் செய்தார் ஓர் புரட்சியே... 


சின்ன சின்ன பெண்ணே... 

கல்பனா சாவ்லா கண்ணே.... 

நீ விண்ணை அடைந்த விந்தையும் தான் என்னே???


அப்துல் கலாம் அறிவியலைக் காதலித்தார்.... 

சாதனைகளில் அவர் பெயரை பதித்தார்.... 


பாரு... பாரு... பாரு 

எங்கள் அறிவியல் வளர்ச்சியைப் பாரு.... 


விண்மீன்களும் வானில் மிதக்குதே..... 

பூமிக்கு வரவே பயத்தில் தோற்குதே.... 

GSLV

இஸ்ரோவின் இராக்கெட்டுகள் வானில் மிதக்குது....

இந்தியாவின் திறமை கொடி கட்டி பறக்குது..... 


பள்ளிக்குழந்தையும் சாதனைகள் படைக்குது....

பல நோபல் பரிசுகள் உடனே அழைக்குது.... 


அதிசயம் அதிசயம்.... எத்தனை பாரு... 

அளக்கவே முடியுமோ???நீயும் கூறு!!


தேடு.. தேடு... துணிந்து நீ தேடு.. 

புதிதாய் பிறக்கட்டும் அறிவியல் மொட்டுக்கள் நூறு....

✍️கவிதை ✍️: இரஞ்சிதா தியாகராஜன், இயற்பியல், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

6 comments:

காதலுக்கு உதவுமா குவாண்டம் காந்த கணினிகள்?

 காதலுக்கு உதவுமா குவாண்டம் காந்த கணினிகள்? பள்ளிக்கூட காலத்தில் இரண்டு சாதாரண காந்தங்களை கையில் வைத்திருப்பது புதையல் ஆகும். ஒரு காந்தம் வை...