Saturday, November 28, 2020

✍ 🍀🍀இயற்கை வாழ்வியல் முறை🍀🍀மணத்தக்காளி கீரையின் நன்மைகள்.

 ✍ 🍀🍀இயற்கை வாழ்வியல் முறை🍀🍀மணத்தக்காளி கீரையின் நன்மைகள்.

Manathakkali keerai payangal | மணத்தக்காளி கீரையின் பயன்கள் | Manathakkali  keerai benefits - YouTube

🍀🍀🍀🍀🍀🍀

கீரைகளை கடவுள் நமக்கு தந்த வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் கீரைகளில் சத்துக்களானது அதிகம் இருப்பதால் தான், நம் வீட்டில் உள்ள பாட்டிகள் அடிக்கடி வீட்டில் கீரையை சமைக்கச் சொல்வார்கள். மேலும் அக்காலத்தில் நம் முன்னோர்கள் கீரைகளை அதிகம் உட்கொண்டு வந்ததால் தான், அவர்களின் உடல் இன்று வரை மிகவும் வலிமையுடன் உள்ளது. அதுமட்டுமின்றி, அவர்களின் உடலை எந்த ஒரு நோயும் அவ்வளவு எளிதில் தாக்குவதில்லை.

இத்தகைய கீரைகளில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் மணத்தக்காளி கீரை. இந்த கீரையின் தண்டு, இலை, காய், பழம் போன்ற அனைத்துமே சமையலில் மட்டுமின்றி, மருத்துவத்திலும் பயன்படுகிறது. மேலும் 100 கிராம் கீரையில் நீர்ச்சத்து 82.1%, புரோட்டீன் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புக்கள் 2.1% உள்ளது. இப்போது அந்த மணத்தக்காளி கீரையின் முக்கியமான மருத்துவ குணங்கள் பற்றிப் பார்ப்போமா. 

Manathakkali Keerai Health benefits in Tamil - Tamil Desiyam

🍀🍀🍀🍀🍀🍀

வாய்ப்புண் உள்ளவர்கள், மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் மட்டுமின்றி, வயிற்றுப்புண்ணும் குணமாகும். ஏனெனில் வாய்ப்புண் உள்ளவர்களுக்கு வயிற்றுப்புண்ணும் இருக்கும். மலச்சிக்கல் மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால், இப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

🍀🍀🍀🍀🍀🍀

தொண்டை கரகரப்பு தொண்டை கரகரப்பு உள்ளவர்களுக்கு இந்த கீரை விரைவில் நிவாரணம் அளிக்கும். எனவே வாரம் இரண்டு முறை இந்த கீரையை உணவில் சேர்த்து வந்தால், தொண்டை கரகரப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். செரிமான பிரச்சனை செரிமான பிரச்சனை உள்ளவர்கள், மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், செரிமான பிரச்சனையும் நீங்கிவிடும்.

🍀🍀🍀🍀🍀🍀

உடல் வெப்பம் அதிகம் இருந்தால், மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டு வர, உடல் வெப்பம் தணியும். காசநோய் காசநோய் உள்ளவர்கள் இந்த கீரையின் பழத்தை தினமும் சாப்பிடுவது நல்லது. கை கால் வலி காய்ச்சல் வந்தால், கை கால் போன்றவை வலி எடுக்கும். இத்தகைய வலியையும், காய்ச்சலையும் போக்க இந்த கீரையை சாப்பிடுவது சிறந்தது.

மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால் உடலின் அழகு கூடுமா...?

🍀🍀🍀🍀🍀🍀

சருமத்தில் அலர்ஜி, வெயில் கட்டி போன்றவை இருந்தால், அப்போது மணத்தக்காளியின் சாற்றினை பிரச்சனை உள்ள இடத்தில் தடவினால், விரைவில் குணமாகும்.

🍀🍀🍀🍀🍀🍀

சிறுநீர் கோளாறு சிலர் தினமும் சரியாக சிறுநீர் கழிக்கமாட்டார்கள். அத்தகையவர்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால், சிறுநீர் சீராக வெளியேறி சிறுநீரகத்தில் கோளாறு ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

🍀🍀🍀🍀🍀🍀

உடனே கருத்தரிக்க வேண்டும் என்று நினைக்கும் புதுமணத் தம்பதியர்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால், கரு வலிமை பெறும். குறிப்பாக பெண்கள் சாப்பிட்டு வந்தால், பிரசவம் எளிமையாக நடைபெறும். கல்லீரல் பிரச்சனைகள் மஞ்சள் காமாலையினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு மற்றும் இதர கல்லீரல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைக் காண மணத்தக்காளி கீரை பெரிதும் உதவியாக இருக்கும். 

🍀🍀🍀🍀🍀🍀

நெஞ்சு வலி மணத்தக்காளி கீரை மற்றும் பழத்தினை காய வைத்து, பொடி செய்து காலை மற்றும் மாலையில் 1/2 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், நெஞ்சு வலி குணமாவதோடு, இதயமும் வலிமையடையும். வலிமையான விந்தணு முக்கியமாக ஆண்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால், அவர்களின் விந்தணு வலிமையுடன் இருக்கும்.

🍀🍀🍀🍀🍀🍀

மணத்தக்காளிக் கீரை வாய்ப்புண்களைக் குணமாக்கும் அருமருந்து. இதன் பச்சை இலைகளைத் தேவையான அளவு நெய் சேர்த்து வதக்கி, துவையல் செய்து, சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டுவர வாய்ப்புண் குணமாகும். வெறும் பச்சை இலைகளை, நாள் ஒன்றுக்கு ஐந்துமுறைகள் நன்றாக மென்று சாற்றை விழுங்கினாலும், வாய்ப்புண் முழுமையாக குணம் ஆகும்.

வாய்ப்புண்ணை குணமாக்கும் மணத்தக்காளி கீரை துவையல் || manathakkali keerai  thuvaiyal

🍀🍀🍀🍀🍀🍀

மூட்டுப் பகுதியில் ஏற்படும் வீக்கங்கள் காரணமாக அவதிப்படுபவர்கள், மணத்தக்காளி இலைகளை வதக்கி, மூட்டுப் பகுதியில் ஒத்தடம் கொடுத்தால், நல்ல பலன் கிடைக்கும். மணத்தக்காளிக் காயை வற்றல் செய்து, குழம்புக்குப் பயன்படுத்தலாம். 

🍀🍀🍀🍀🍀🍀

இதன் இலை, வேர் ஆகியவற்றை குடிநீர் செய்து அருந்துவது நோயற்ற வாழ்வைப் பெற உதவும்.

🍀🍀🍀🍀🍀🍀

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🍀🍀🍀🍀🍀🍀

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்.

🦚🦚🦚🦚🦚🦚

உடலில் உள்ள  எல்லா உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய  இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚🦚

நன்றி : பெருசங்கர்,  🚍 ஈரோடு  மாவட்டம், பவானி

🍀🍀🍀🍀🍀🍀

(( செல் நம்பர்))  (( 6383487768))

(( வாட்ஸ் அப்))  (( 7598258480 ))

🍀🍀🍀🍀🍀🍀

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9750895059

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...