Thursday, December 31, 2020

தமிழகம், புதுச்சேரியில் 3 நாள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழகம், புதுச்சேரியில் 3 நாள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 1, 2, 3 ஆகிய தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வரும் சூழலில், ஈரப்பதம் மிகுந்த காற்று வடகிழக்கு திசையில் இருந்து வீசுவதன் காரணமாக ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. அடுத்த சில தினங்களுக்கும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துஉள்ளது. இது தொடர்பாக செய்தியாளர் களிடம் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று கூறியதாவது:

தற்போது ஈரப்பதம் மிகுந்த கடல் காற்று தமிழகத்தை நோக்கி வீசி வருகிறது. இந்த காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக 31-ம் தேதி (இன்று) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஜனவரி 1-ம் தேதி தென் தமிழக கடலோர மாவட் டங்கள், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.

2-ம் தேதி தென் கடலோர மாவட்டங்கள், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மித மான மழையும், இதர மாவட்டங் களில் வறண்ட வானிலையும் நிலவும். 3-ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் வறண்ட வானிலை யும் நிலவக்கூடும். சென்னை மற் றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பு இல்லை.

30-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காரைக்கால், நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ., திருவாரூர் மாவட்டம் குடவாசல், நன்னிலம், நாகப்பட்டினம் மாவட் டம் வேதாரண்யம், திருப்பூண்டி, நாகப்பட்டினம் ஆகிய இடங் களில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

5% அதிக மழை

டிசம்பர் 31 முதல் ஜனவரி 2-ம் தேதி வரை குமரிக்கடல் பகுதி களில் வடகிழக்கு திசையில் இருந்து மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும்.

வடகிழக்கு பருவமழை காலத் தில் தமிழகத்துக்கு வழக்கமாக 45 செ.மீ. மழை கிடைக்க வேண்டும். இந்த ஆண்டு இதுவரை 47 செ.மீ. மழை கிடைத்துள்ளது. இது வழக் கத்தைவிட 5 சதவீதம் அதிகம். இவ்வாறு அவர் கூறினார்.

Source by : Hindutamil

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...