Saturday, December 26, 2020

தேசிய விண்வெளி ஆய்வு மையத்தில் வேலை வாய்ப்பு-விண்ணப்பிக்க கடைசி தேதி 27.12.2020

தேசிய விண்வெளி ஆய்வு மையத்தில் வேலை வாய்ப்பு-விண்ணப்பிக்க கடைசி தேதி 27.12.2020

கர்நாடகம் மாநிலம், பெங்களூருவில் செயல்பட்டு வரும் தேசிய விண்வெளி ஆய்வகத்தில் காலியாக உள்ள 24 இளநிலை செயலக உதவியாளர், இளநிலை சுருக்கெழுத்தாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: தேசிய விண்வெளி ஆய்வகம் (National Aerospace Laboratories)

மொத்த காலியிடங்கள்: 24

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Junior Secretariat Assistant 

காலியிடங்கள்: 12

சம்பளம்: மாதம் ரூ.19900 – 63200

வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 10, பிளஸ் 2 தேர்ச்சி அல்லது பியூசி தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

கணினியில் எம்.எஸ். ஆபிஸ், எம்.எஸ். வேர்ட், எம்.எஸ். எக்செல், பவர் பாயிண்ட் போன்றவற்றில் பணிபுரியும் திறனும் கலை, அறிவியல்,வணிகப் பிரிவில் பட்டம் பெற்றிருந்தால் விரும்பத்தக்கது. 

பணி: Junior Secretariat Assistant (F&A)

காலியிடங்கள்: 05

சம்பளம்: மாதம் ரூ.19900 – 63200

வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Stenographer

காலியிடங்கள்: 07

சம்பளம்: மாதம் ரூ.25500 – 81,100

வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 10, பிளஸ் 2 தேர்ச்சி அல்லது பியூசி தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறனுடன் அதனை கணினியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

கணினியில் எம்.எஸ். ஆபிஸ், எம்.எஸ். வேர்ட், எம்.எஸ். எக்செல், பவர் பாயிண்ட் போன்றவற்றில்  பணிபுரியும் திறனுடன் கலை, அறிவியல் வணிகப் பிரிவில் பட்டம் பெற்றிருந்தால் விரும்பத்தக்கது. 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:  https://www.nal.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.12.2020

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

Click here to Apply Online 

Click here to Apply Online (For NAL)

Extension of last date (15.1.2021) for receipt of online applications for the posts of Junior Secretariat Assistant and Junior Stenographer in CSIR-NAL against advertisement No.8/2020.

இந்த வேலை வாய்ப்பு செய்தியை அனைவருக்கும் பகிருங்கள் யாரேனும் ஒருவருக்கு பயன்படும்.

No comments:

Post a Comment

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது?

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது? கடந்த இரண்டு மாதங்களாக விண்வெளியில் தங்கியுள்ள விண்வெ...