Thursday, December 10, 2020

✍🏻⛺⛺இயற்கை வாழ்வியல் முறை⛺⛺பப்பாளி பழத்தின் நன்மைகள்.

 ✍🏻⛺⛺இயற்கை வாழ்வியல் முறை⛺⛺பப்பாளி பழத்தின் நன்மைகள்.

பப்பாளி சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் | மருத்துவ குணங்கள் -  YouTube

⛺⛺⛺⛺⛺⛺

பப்பாளி எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு சுவையான பழம். இதன் விலையும் மலிவாகவே இருப்பதால் இதை "ஏழைகளின் கனி" என்றும் கூறுவர். இதன் இனிமையான சுவையால் "பழங்களின் தேவதைஎன்றும் அழைக்கப்படும்.

⛺⛺⛺⛺⛺⛺

மனித உடலின் ஆரோக்கியம் மற்றும் அழகு இரண்டிலுமே பப்பாளியின் பங்கு மகத்தானது. பலவகையான ஊட்டச்சத்துக்களை கொண்ட பழங்களில் பப்பாளி முதன்மையானது. 100gm பப்பாளியில் 43கலோரிகள் மட்டுமே உள்ளன.

⛺⛺⛺⛺⛺⛺

மஞ்சள் நிற பழங்களில் காணப்படும் கரோட்டின் சத்து இப்பழத்தில் அதிகம் காணப்படுகிறது. இந்த சத்து புற்று நோய் வராமல் தடுக்கிறது. 18 வகையான சத்துக்கள் கொண்ட ஒரே பழம் பப்பாளியாகும்.

பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள் || Medicinal properties of papaya fruit

⛺⛺⛺⛺⛺⛺

உடல் ஆரோக்கியத்திற்காக ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிடுவதைவிட தினமும் சிறிது பப்பாளி பழத்தை சாப்பிடுவது சிறந்த நன்மையை தரும்.

⛺⛺⛺⛺⛺⛺

அதிகம் பழுக்காத பப்பாளியின் பால் கருக்கலைப்புக்கு வழிவகுக்கும். பப்பாளி காயை அதிகம் உட்கொண்டால் வயிற்று போக்கு அல்லது வயிற்று வலி ஏற்படலாம்.

⛺⛺⛺⛺⛺⛺

இந்தியாவின் பர்ட்யூ பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் அதிகளவு பெப்பெய்ன் என்சைம் உடலுக்கு சென்றால் தொண்டை வீக்கம், சளி, காய்ச்சல், நெஞ்செரிச்சல், ஆஸ்துமா, ஒவ்வாமை மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது.

⛺⛺⛺⛺⛺⛺

அளவுக்கு அதிகமாக பப்பாளியை சாப்பிடும் போது இரைப்பை மற்றும் குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தி, வயிற்றில் ஒருவித எரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனையை உண்டாக்குகிறது.

⛺⛺⛺⛺⛺⛺

அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது.

பப்பாளி பழத்தில் இவ்வளவு ஆபத்து உள்ளதா? - Lankasri News

⛺⛺⛺⛺⛺⛺

பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

⛺⛺⛺⛺⛺⛺

குழந்தைகளுக்கு பப்பாளி பழத்தை உண்ண கொடுப்பதால் அவர்களின் பற்கள் மற்றும் எலும்புகள் உறுதியாகும்.

⛺⛺⛺⛺⛺⛺

கண் பார்வை கோளாறு குறையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதில் போலிக் ஆசிட்(folic acid) அதிகமாக உள்ளது. ஆகையால் குழந்தைகளின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது . பெண்கள் இதை உண்பதால் மாத விலக்கு சீராகும்.

⛺⛺⛺⛺⛺⛺

ஆண்களின் உயிரணு உற்பத்தி திறனை அதிகரிக்கும். இப்பழத்தை தினமும் உண்பதால் நரம்பு தளர்ச்சி குறையும். கல்லீரலில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய உகந்தது.

⛺⛺⛺⛺⛺⛺

காலை உணவில் பப்பாளியை பழமாகவோ அல்லது ஜூஸாகவோ எடுத்துக் கொண்டால் உடல் கழிவுகளை வெளியேற்றும். மலச்சிக்கல் மற்றும் நெஞ்செரிச்சலை தீர்க்கும். உடல் எடை அதிகரித்து காணப்படுபவர் பப்பாளி பழத்தை காலை உணவாக சாப்பிட்டு வந்தால் விரைவில் எடை குறையும்.

⛺⛺⛺⛺⛺⛺

4 வாரங்கள் தொடர்ந்து இப்பழத்தை உண்பதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும். இந்த காயை சமைத்து உண்பதாலும் உடல் பருமன் குறையும்.

⛺⛺⛺⛺⛺⛺

அதிகமான பருப்பு உணவை உண்ட பிறகு, இரண்டு பப்பாளித்துண்டுகளச் சாப்பிட்டால், நன்றாக செரிமானமாகி விடும். தற்போது மேற்கொள்ளப் பட்டுள்ள ஆய்வுகள் பப்பாளியின் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மையானது காயங்களை ஆற்றவும் அறுவைசிகிச்சையின் பின் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், புற்றுநோய் சிகிச்சையின்போது ஏற்படும் தீயபக்கவிளைவுகளிலிருந்து விடுபடவும், மூட்டுவாத நோய்களுக்கும் கூட உதவலாம் என்று கண்டுபிடித்துள்ளனர்.

Papaya GIF - Papaya - Discover & Share GIFs

⛺⛺⛺⛺⛺⛺

மேலும் இக்காயை பிரசவித்த பெண்கள் சமைத்து சாப்பிட்டால் அதிக பால் சுரக்கும். பப்பாளியின் வேர்கள் மற்றும் பூக்கள் சிறுநீரக கோளாறு, மஞ்சள் காமாலை,மூச்சுக்குழாய் அழற்சி போன்ற நோய்களுக்கு எதிராக நன்மை தருவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

⛺⛺⛺⛺⛺⛺

பப்பாளி விதைகள் கருமை நிறத்தில் பார்பதற்கு கரு மிளகு போன்று இருக்கும். அது கசப்பு சுவை உடையதாகும். அந்த விதைகளை அரைத்து பாலில் கலந்து குடித்தால் நாக்குப்பூச்சிகள் வெளியேறும்.

⛺⛺⛺⛺⛺⛺

பப்பாளியின் இலைகள் ஆமணக்கு இலைகளின் வடிவத்தைப்போல் இருக்கும். அந்த இலைகளை அரைத்து நம் உடலின் ஏற்பட்ட காயங்களில் பூசினால், காயங்கள் விரைவில் குணமடையும்.

Papaya GIFs - Get the best GIF on GIPHY

⛺⛺⛺⛺⛺⛺

⛺⛺⛺⛺⛺⛺

பப்பாளி பழத்தை முகத்தில் தடவி வந்தால் கண் கருமை, முகத்தில் சுருக்கம், நீங்கி முகத்தில் பளபளப்பு மற்றும் அழகு கூடும்.

⛺⛺⛺⛺⛺⛺

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் இயற்கையானது. இதனால் உண்டாகும் வழிகள், உடல் சோர்வு தவிர்க்க முடியாதது. மற்றும் ஒரு சில பெண்களுக்கு ரத்த போக்கு அதிகமாகவும், குறைவாகவும் இருக்கும் நிலையில் பப்பாளி இந்த பிரச்னையை குணப்படுத்துகிறது. எனவே பெண்கள் பப்பாளி சாப்பிடுவது மிகவும் நல்லதாகும்.

⛺⛺⛺⛺⛺⛺

பப்பாளி பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. நரம்புகளில் ஏற்படும் இறுக்கத்தை குறைத்து, இரத்த அழுத்தம் ஏற்படாமல் இதயத்தை பாதுகாக்க பப்பாளியில் உள்ள  பொட்டாசியம் உதவுகிறது.

⛺⛺⛺⛺⛺⛺

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

⛺⛺⛺⛺⛺⛺

🌷🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்.

🦚🦚🦚🦚🦚🦚

உடலில் உள்ள எல்லா உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚🦚

நன்றி : பெருசங்கர், 🚍 ஈரோடு  மாவட்டம், பவானி.

⛺⛺⛺⛺⛺⛺

(( செல் நம்பர்)) (( 6383487768))

(( வாட்ஸ் அப்))  (( 7598258480 ))

⛺⛺⛺⛺⛺⛺

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...