Friday, December 11, 2020

✍🏻‌⚙️⚙️இயற்கை வாழ்வியல் முறை⚙️⚙️அண்ணாச்சி பூவின் நன்மைகள்.

✍🏻‌⚙️⚙️இயற்கை வாழ்வியல் முறை⚙️⚙️அண்ணாச்சி பூவின் நன்மைகள்.

Star Anise | Star Anise Benefits | Annachi Poo | அண்ணாச்சி பூ | Health Tips  in Tamil - YouTube

⚙️⚙️⚙️⚙️⚙️⚙️

அண்ணாச்சி பூ என்று அழைக்கப்படும் இந்த நட்சத்திர சோம்பு கறிகள், மற்றும் பிரியாணி வகைகளில் பார்த்திருப்போம். இந்தியாவில் பயன்படுத்தக்கூடிய மசாலாப் பொருட்களில் இந்த அண்ணாச்சி பூவும் முக்கியமான ஒன்று. இதற்கு ‘அன்னாசி மொக்கு’, தக்கோலம், நட்சத்திர சோம்பு என்னும் வேறு சில பெயர்களும் உண்டு. இது வெறும் மணத்துக்காக மட்டுமல்லாமல் உணவை அழகுபடுத்துவதற்க்கும், மற்றும் மருந்தாகவும் பயன்படுகின்றது.

⚙️⚙️⚙️⚙️⚙️⚙️

அண்ணாச்சி பூ பூர்வீகம்.

அண்ணாச்சி பூ சீனாவை பூர்வீகமாக கொண்டது. சீன ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த அண்ணாச்சி பூவை பயன்படுத்தி வந்தார்கள். இது படிப்படியாக எல்லா நாடுகளுக்கும் பரவி சென்று இந்தியாவில் தற்போது இது ஒரு தவிர்க்க முடியாத மசாலா பொருளாக மாறி உள்ளது.


⚙️⚙️⚙️⚙️⚙️⚙️

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

அண்ணாச்சி பூவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. இதில் பாக்டீரியா வைரஸ், பூஞ்சை மற்றும் ஈஸ்ட் இனங்களைக் கொல்லும் பய ஆக்டிவ் பொருட்கள் உள்ளது. இந்த எதிர்ப்பு பண்பினால் நம் உடலில் எந்த ஒரு தொற்றுக்களும் ஏற்படாமல் நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அண்ணாச்சி பூ உதவுகிறது. நம் உடலில் இருக்கும் நச்சுக்களை முழுமையாக அகற்றி நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கிறது இந்த அன்னாச்சி பூ.

⚙️⚙️⚙️⚙️⚙️⚙️

புளித்த ஏப்பம் தீரும்

ஒரு சிலருக்கு புளித்த ஏப்பம் உருவாகும். இது அவர்களுக்கு அசௌகரியத்தை உருவாக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு அன்னாசி பூ சிறந்த தீர்வாக இருக்கும். அன்னாசிப் பூவை பொடி செய்து அரை கிராம் அளவு எடுத்து  தினந்தோறும் மூன்று வேளையும் உணவுக்குப் பின் நீருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் புளித்த ஏப்பம் உண்டாகாது.

⚙️⚙️⚙️⚙️⚙️⚙️

சளி இருமல் பிரச்சனை தீரும்

அன்னாசி பூவை வறுத்து பொடி செய்து அரை ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் சீரகம், மிளகு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி தேன் சேர்த்து காலை, மாலை குடித்து வந்தால் சளி, காய்ச்சல், இருமல் போன்றவை குணமாகும்.

அண்ணாச்சி பூ மருத்துவ பயன்கள்

⚙️⚙️⚙️⚙️⚙️⚙️

தசை வலி குணமாகும்

அன்னாசி பூவை வறுத்து பொடி செய்து எடுத்து அதனுடன் விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை தலா 100 மில்லி அளவு எடுத்து அனைத்தையும் சேர்த்து தைலமாக காய்ச்சவும். 

இந்த தைலத்தை தசையில் ஏற்படும் வலிகளுக்கு பயன்படுத்தினால் தசை வலி குணமாகிறது. தசை பிடிப்பை சரிசெய்கிறது. நெற்றியில் தடவும்போது மன இறுக்கத்தை போக்குகிறது.

⚙️⚙️⚙️⚙️⚙️⚙️

அன்னாசி பூ எண்ணெய்

அன்னாசி பூவில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும அலர்ஜியை சரி செய்கிறது. நரம்புகளை வலுவாக்கவும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் இந்த எண்ணெய் உதவுகிறது.

⚙️⚙️⚙️⚙️⚙️⚙️

இப்போதைய காலகட்டத்தில் ஏராளமான தொற்றுகள் மனிதர்களை தாக்கி வருகிறது. இது அனைத்தையும் செயலிழக்க செய்வதற்கு நாம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். எனவே உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்க இது போன்ற பொருட்களை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

மாதவிலக்கை முறைப்படுத்தும் அன்னாசி பூ || tamil news annachi poo use to  Menses

⚙️⚙️⚙️⚙️⚙️⚙️

🌷🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்.

🦚🦚🦚🦚🦚🦚

உடலில் உள்ள எல்லா உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚🦚

நன்றி : பெருசங்கர், 🚍 ஈரோடு  மாவட்டம், பவானி.

(( செல் நம்பர்)) (( 6383487768))

(( வாட்ஸ் அப்))  (( 7598258480 ))

🦚🦚🦚🦚🦚🦚

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...