Sunday, December 13, 2020

✍🏻⛴️⛴️இயற்கை வாழ்வியல் முறை⛴️⛴️பேரிக்காயும் அதன் நன்மைகளும்.

✍🏻⛴️⛴️இயற்கை வாழ்வியல் முறை⛴️⛴️பேரிக்காயும் அதன்  நன்மைகளும்.

⛴️⛴️⛴️⛴️⛴️⛴️ 

பேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது பழம் தான். இதனை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள் வெளித் தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது பழம்தான். சில காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை மலைப் பகுதிகளில் விளையக்கூடியது.

குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். இக்காலங்களில் இதை வாங்கி சாப்பிடுபவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள்.

⛴️⛴️⛴️⛴️⛴️⛴️

பேரிக்காய் நம் உடலின் கழிவுகளை நீக்கி சுத்தம் செய்யும் ஆற்றல் கொண்டது. சிறுநீரகக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த கனி. சிறுநீரை வெளியேற்றவும், பலவீனமான சிறுநீரகச் செயல்பாட்டைச் சரிசெய்யவும், உடலின் அதிகப்படியான நீரை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் உதவுகிறது.

இதய படபடப்பு மற்றும் இதயம் பலவீனமானவர்கள் தினம் ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். உடல் சூட்டை குறைக்கும் ஆற்றல்  இதற்கு உண்டு. மேலும் சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களையும் சரி செய்யும் தன்மை இதற்கு உண்டு.

பேரிக்காயை அடிக்கடி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

 ⛴️⛴️⛴️⛴️⛴️⛴️

பேரிக்காய் தோலின் துவர்ப்புத் தன்மைதான் இதன் பலமே! பேரிக்காயைத் தோலுடன் சாப்பிடும்போது அது இதயநோயை கட்டுப்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து  நிறைந்துள்ளதால், டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை குறைக்கிறது. இதிலுள்ள ஃபிளவனாய்ட்ஸ் மற்றும் ரசாயணங்கள் இன்சுலின் உணர்திறனை  மேம்படுத்துகிறது. மேலும், மலச்சிக்கல் தொடர்பான நோய்களுக்கும்குடல் புண்ணுக்கும் இது சிறந்த நிவாரணியாகும்.

 ⛴️⛴️⛴️⛴️⛴️⛴️

பேரிக்காய் உடல் எடையைக் குறைக்கும் ஆற்றலும் இதற்கு உள்ளது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து உடலைக் கட்டுக்கோப்பாக  வைத்திருக்க உதவுகிறது

⛴️⛴️⛴️⛴️⛴️⛴️

சுவையான இந்தப் பழத்தில் ஏ, பி, பி2, என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது.

இந்த நான்கு பழங்கள் மட்டும் சாப்பிடுங்கள்: நோய் உங்களை அண்டாது - Lankasri  News

⛴️⛴️⛴️⛴️⛴️⛴️

வளரும் குழந்தைகளுக்கு சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அவசியத் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன. பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது. பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பழம் வீதம் சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகள் நன்கு வளர்ச்சி பெறுவார்கள்.

கருவில் வளரும் குழந்தை நன்கு வளர பேரிக்காய் பெரிதும் உதவுகிறது. கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெற பேரிக்காய் சிறந்த மருந்து.

பிறந்த இளம் குழந்தைக்கு தாய்ப்பாலே சிறந்த ஊட்டச் சத்து மிகுந்த உணவாகும். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். குழந்தை பிறந்தது முதல் தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம். ஆனால் தற்போது தாய்ப்பால் கொடுப்பது குறைந்து வருகிறது. சில பெண்களுக்கு தாய்ப்பால் சரியாக சுரப்பதில்லை. இவர்கள் காலையிலும் மாலையிலும் 1 பேரிக்காய் வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

Pear on Make a GIF

⛴️⛴️⛴️⛴️⛴️⛴️

வயிற்றில் புண் இருந்தால்தான் வாயில் புண் ஏற்படும். இந்த வாய்ப் புண்ணையும், வயிற்றுப் புண்ணையும் ஆற்றும் சக்தி பேரிக்காய்க்கு உண்டு. தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.

⛴️⛴️⛴️⛴️⛴️⛴️

உண்ணும் உணவின் அலர்ஜி காரணமாக சிலருக்கு வயிற்றுப் போக்கு உண்டாகும். மேலும் சிலருக்கு பாக்டீரியாக்களால் வயிற்றுப் போக்கு உண்டாகும். தினமும் பேரிக்காய் ஒன்று சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு நீங்கும்.

⛴️⛴️⛴️⛴️⛴️⛴️

இரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன. இவற்றைப் உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது.

⛴️⛴️⛴️⛴️⛴️⛴️

உடல் சூட்டைத் தணிக்கும்.

கண்கள் ஒளிபெறும்.

நரம்புகள் புத்துணர்வடையும்.

தோலில் ஏற்பட்ட பாதிப்புகளை குணப்படுத்தும்

⛴️⛴️⛴️⛴️⛴️⛴️

குடல், இரைப்பை இவைகளுக்கு நல்ல பலம் கிடைக்கும். உடலை வலுவாக்கும்.

Asset servicing reporters news archive | Pear Tree selects UMB for fund  accounting and custody services

⛴️⛴️⛴️⛴️⛴️⛴️

பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பழம் வீதம் சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகள் நன்கு வளர்ச்சி பெறுவார்கள்.இதை பயன்படுத்தி உடலுக்கு புத்துணர்வை தரக்கூடிய மருந்து தயாரிக்கலாம்.

⛴️⛴️⛴️⛴️⛴️⛴️

பேரிக்காயை அரைத்து பசையாக எடுத்துகொள்ள வேண்டும். அதனுடன் சர்க்கரை சேர்த்து, நீர்விடாமல் பாகு பதத்தில் காய்ச்ச வேண்டும். பின்னர் ஆறவைத்து பாட்டிலில் எடுத்து வைக்கலாம். இதனுடன் நீர்விட்டு பருகுவதன் மூலம் உடலில் புத்துணர்வு ஏற்படும். பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றுநோயை குணப்படுத்தும்.

⛴️⛴️⛴️⛴️⛴️⛴️

இப்பழத்தில் காணப்படும் விட்டமின் ஏ சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், பருக்கள் ஆகியவை ஏற்படாமல் பாதுகாக்கிறது. இப்பழம் கேசம் உதிர்வதை தடுக்கிறது. கண்களில் கண்புரை நோய் ஏற்படாமலும் பாதுகாக்கிறது.

Pear Tree - Conference | Suttons

⛴️⛴️⛴️⛴️⛴️⛴️

பேரிக்காய், காய்ச்சல் சிகிச்சையின் போது சிறப்பாக செயல்படும் சில குளிர்விக்கும் பண்புகளை கொண்டுள்ளது ஆகையால், நீங்கள் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், பேரிக்காய் உண்பது உங்களுக்கு சிறந்த ஒரு நிவாரணத்தை தரும்

⛴️⛴️⛴️⛴️⛴️⛴️

தினமும் ஒரு பேரிக்காய் என்ற அளவில் அடிக்கடி இப்பழத்தினை உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.

⛴️⛴️⛴️⛴️⛴️⛴️

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

⛴️⛴️⛴️⛴️⛴️⛴️

🌷🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚🦚🦚

உடலில் உள்ள எல்லா உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚🦚

நன்றி : பெருசங்கர், 🚍 ஈரோடு  மாவட்டம், பவானி.

⛴️⛴️⛴️⛴️⛴️⛴️

(( செல் நம்பர்))  (( 6383487768))

(( வாட்ஸ் அப்))  (( 7598258480 ))

⛴️⛴️⛴️⛴️⛴️⛴️

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...