Tuesday, December 22, 2020

✍️கவிதை✍️ கணித மேதை இராமானுஜன்✍️இரஞ்சிதா தியாகராஜன்.

 ✍️கவிதை✍️

     கணித மேதை இராமானுஜன்✍️இரஞ்சிதா தியாகராஜன்.


வீட்டின் தாழ்வாரப் பகுதியில்... 

தாயின் தாவணி பிடித்து தவழ்ந்திடும் ஓர் 

குயில்.... 


மண்ணெல்லாம் மார்கழி மாத பனிக்காற்று...

ஈரோட்டில் பிறந்ததோர் கணித ஊற்று... 


காசு, பணம் தான் உன் வாழ்வில் பஞ்சம்.... 

உன் திறமையோ விண்ணை எஞ்சும்... 


உலகமே வியக்கும் புதிர் கணிதம்.... 

நீ புதையலை எடுத்த விந்தையும் தான் எங்ஙனம்.... 


பகு எண்கள், பகா எண்களாம்.... 

உலகையே கலக்குது உன் கணிதங்களாம்... 


பிடித்து படித்தால் பல பரிசுகள் அழைக்கும்...

பிடிக்காமல் படித்தால் தேர்வரையில் பைத்தியமும் பிடிக்கும்... 

இதை என் பள்ளி பருவங்களே எனக்கு உணர்த்தும்... 


சின்னஞ்சிறு வயதில் என்னே!!! சாதனைகள்... 

எட்டிப் பிடித்தாய் இமயமலைகள்... 


மண்ணில் சாதனை போதும்... 

விண்ணில் சாதனை புரிய வேண்டும் என நினைத்தாயோ!!!


நீ மண்ணை நீங்கினாலும் 

எங்கள் மனதில் தினம் தினம் பிறப்பாய்.... 


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐

✍️கவிதை ✍️: இரஞ்சிதா தியாகராஜன், இயற்பியல், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

No comments:

Post a Comment

காதலுக்கு உதவுமா குவாண்டம் காந்த கணினிகள்?

 காதலுக்கு உதவுமா குவாண்டம் காந்த கணினிகள்? பள்ளிக்கூட காலத்தில் இரண்டு சாதாரண காந்தங்களை கையில் வைத்திருப்பது புதையல் ஆகும். ஒரு காந்தம் வை...