Friday, December 25, 2020

✍️கவிதை✍️வீடு கட்டுவோம் ✍️இரஞ்சிதா தியாகராஜன்.

 ✍️கவிதை✍️

     வீடு கட்டுவோம் ✍️இரஞ்சிதா தியாகராஜன்.

சின்னச்சின்ன சிறுவர்களே... 

சிறகடிக்கும் சிட்டுக்களே...


செல்போனில் சிந்நனையை விடுத்து 

சீக்கிரம் விளையாட வாரீர்... 


காலங்களும் மாறிப் போச்சி...

தெருக்களில் விளையாண்ட நாட்களும் எங்கே போச்சி...??? 


அழகழகாய்... அற்புதமாய்... 

விதவிதமாய்.. 

வித்தியாசமாய்... 


மணலில் வீடு கட்ட விரைந்து வாரீர்... 


எத்தனை எத்தனையோ அறைகளை அழகாய் பிரித்து... 

சின்ன சின்ன சுவருகள் சிறப்பாய் அமைத்து ...


சிறு குச்சிகளை குழி தோண்டி வைப்போம்... 

பச்சை இலையை பார்த்து தைப்போம்... 


சுத்தி வைப்போம் சுவற்றை... 

சுத்தியும் போடுவோம் கண் திருஷ்டியை... 


முகத்தின் மகிழ்ச்சி வீட்டின் விளக்காய் ஒளிர... 

சிறுவர்களே!!! சிரிப்புகளெல்லாம் கீதமாய் பாட... 


மணல் வீடு ஒன்றைக் கட்டுவோம்.. 

மனதால் ஒற்றுமை போற்றுவோம்... 

சுதீப்-த ரா™🔥 على تويتر: "மணல் வீடு கட்டும் குழந்தை அலை வந்து அழிக்கும் ,  அதைக் கண்டு சிரிக்கும் குழந்தை ! குழந்தையை போல மனதை வைத்துக்கொண்டால் ...

கூடி விளையாண்டால் கோடி இன்பம்..

இதை உணர்ந்தே நாளும் செய்வோம் மணலில் ஒரு பிம்பம்...

✍️கவிதை ✍️: இரஞ்சிதா தியாகராஜன், இயற்பியல், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

No comments:

Post a Comment

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது?

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது? கடந்த இரண்டு மாதங்களாக விண்வெளியில் தங்கியுள்ள விண்வெ...