Wednesday, December 23, 2020

✍️கவிதை✍️ எங்கள் தமிழ்மொழி ✍️இரஞ்சிதா தியாகராஜன்.

 ✍️கவிதை✍️

   எங்கள்  தமிழ்மொழி ✍️இரஞ்சிதா தியாகராஜன்.

உறுத்தும் உச்சரிப்பு

தாய் மொழியே.... 

எங்கள் தமிழ் மொழியே... 

தூய மொழியே... 

எங்கள் உயிர் மொழியே... 


உன்னை நான் எவ்வாறு புகழ்வேனோ??? 

புகழ வார்த்தைகளும் இல்லாமல் சொக்கித் திகைப்பேனோ!!!


பூவில் தேனை அருந்திய பின் வண்டு மயங்குமாம்... 

எங்கள் தமிழ்த்தேனுக்கு 

அறுசுவையும் பின்தங்குமாம்... 


தமிழ் வாழ்வு: தமிழர் வாழ்வு : வாழ்வியல் -செல்வி- காகம்

பிறந்த குழந்தை சொல்வதறியாது  மொழியின்றி தவிக்குமாம்.... 

இருளினில் வரும் ஒளியாய் "அம்மா"என எங்கள் தமிழ் முன் நிற்குமாம்... 


நான் ஒரு தமிழர் என தாயின் கருவில் அறிய மறந்தேனோ???

அறிந்திருந்தால் அழாமல் பிறந்திருப்பேனோ!!!... 


தாய் மொழி சிறப்பை இன்னும் எழுதவே எழுதுகோல் எண்ணுகிறது...

ஒன்றோ!! இரண்டோ!! புகழ வார்த்தைகளும் சொக்கி வழி மறக்கிறது.. 


வீரத்தமிழா!!! நாம் மண்ணில் வீழ்ந்தாலும் 


நம் தமிழ் விண்ணைத் தொட....

வாழ்க நம் தாய்மொழி!!! 

வளர்க நம் உயிர்மொழி!!!

✍️கவிதை ✍️: இரஞ்சிதா தியாகராஜன், இயற்பியல், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.


2 comments:

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...