Thursday, December 17, 2020

TNPSC (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) அடுத்த 2021 ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.

 TNPSC (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) அடுத்த 2021 ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி (TNPSC) அடுத்த ஆண்டுக்கான தேர்வு விவரங்கள் தொடர்பான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. ஜனவரி 3-ந் தேதியன்று குரூப் 1 தேர்வுகள் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டன. தற்போது கொரோனா கால கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டுவிட்டன.

 

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி அடுத்த ஆண்டுக்கான 42 தேர்வுகள் தொடர்பான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுகள் ஜனவரி 3-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் மே மாதமும் ஜூலையில் குரூப்- 3 தேர்வுகளும் நடைபெறும். தமிழகத்தில் பல லட்சம் பேர் எழுதக் கூடியது டிஎன்பிஎஸ்சி குரூப் 4- விஏஓ. இந்த குரூப்4 விஏஓ தேர்வுகள் செப்டம்பரில் நடைபெறும். தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் பல்லாயிரக்கணக்கான பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிஎன்எஸ்பிசியின் தேர்வு அட்டவணை முழு விவரம்:


No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...