மூன்றாவதாக ஒரு புதிய வகை கொரோனா- பிரேசில் நாட்டில் கண்டுபிடிக்கப்பு.
பிரேசில் நாட்டில் மூன்றாவதாக புது வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் மக்கள் கொரோனாவிலிருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் பிரிட்டனிலிருந்து பரவிய உருமாறிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்நிலையில் பிரேசில் நாட்டில் மூன்றாவதாக ஒரு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் போல இந்த மூன்றாவது வகை கொரோனா வைரஸ் பயங்கரமாக தாக்கக் கூடியதாகவும், இந்த பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்க வகை வைரஸ்கள் உலகை கொஞ்சம் பயமுறுத்தி வருகின்றன.
காரணம் அவை தடுப்பூசிக்கு கட்டுப்படுவதில்லை என்பதை ஆகும். அதே சமயம் இந்த வைரஸ்கள் அபூர்வமாகத்தான் பரவும் என்பது ஆறுதல் அளிக்கும் ஒரு விஷயம். இந்த புதிய பிரேசில் வகை கொரோனா முதன்முதலில் ரியோ டி ஜெனிரோ என்ற நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பிரேசில் வகை கொரோனா பிரிட்டனில் பரவாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரிட்டன் பிரதமர் தெரிவித்துள்ளார். கொரோனா, உருமாறிய கொரோனாவிலிருந்தே இன்னும் மூன்றாவதாக ஒரு வைரஸ் பரவி மக்களை அச்சமடைய செய்துள்ளது.
No comments:
Post a Comment