Sunday, January 24, 2021

தேசிய பெண் குழந்தைகள் தின விழா-ரத்த தான முகாம்.

தேசிய பெண் குழந்தைகள் தின விழா-ரத்த தான முகாம்.

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம், வேம்படிதாளம் ஊராட்சி, திருவளிபட்டி என்ற கிராமத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா, குடியரசு தின விழா, தேசிய பெண் குழந்தைகள் தின விழா நாளான இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் மன்றம் , சிவராம் ஜி  ரத்த வங்கியுடன் இணைந்து ரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

A. முருகேசன், தாளாளர், சுவாமி  விவேகானந்தர் மெட்ரிகுலேஷன் மேல் நிலை பள்ளி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். S.A.ரவிச்சந்திரன், நேரு யுவகேந்திரா சேலம் மாவட்டம் தலைமை ஏற்றார். R.தமிழரசி ரவிச்சந்திரன் ஊராட்சி மன்ற தலைவர், வேம்படிதாளம், C.மோகன் குமார் ஊராட்சி மன்ற துணை தலைவர், வேம்படிதாளம் வேம்படிதாளம் ஊராட்சி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் முன்னிலையில் கோ.குமரேசன் தேசிய சேவை தொண்டர் வீரபாண்டி அவர்களின் ஒருங்கிணைப்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணிமன்றம் ரத்ததான முகாம் சிறப்பாக ஏற்பாடு செய்து 100க்கும் மேற்பட்ட யூனிட் ரத்தம் தானமாக அளித்தது.

முகாமில் முதல் ரத்த தானம் தனியாக பெண் கலந்து கொண்டார்கள் என்பதும்,  25க்கும் மேற்பட்ட பெண்கள் ரத்தம் தானம் செய்தார்கள் என்பதை குறிப்பிடத்தக்கது.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது?

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது? கடந்த இரண்டு மாதங்களாக விண்வெளியில் தங்கியுள்ள விண்வெ...