Sunday, January 10, 2021

”உங்கள் பயனர்களுக்கு மதிப்பு கொடுங்கள்” வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கை கிண்டல் செய்த டெலிகிராம்.

”உங்கள் பயனர்களுக்கு மதிப்பு கொடுங்கள்” வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கை கிண்டல் செய்த டெலிகிராம்.

WhatsApp vs Telegram vs Signal: A Detailed Comparison (2021) | Beebom

வாட்ஸ் அப் நிறுவனம் அதன் பயனர்களின் இருப்பிடம் உட்பட சில தனிப்பட்ட விவரங்களை கேட்டு வருகிறது. அதை கொடுக்காத பயனர்களின் கணக்குகள் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதியோடு முடக்கப்படும் எனவும் தகவல் வருகின்றன. அப்படி கொடுக்கப்படுகின்ற தகவல் ஃபேஸ்புக் தளத்தில் பகிரப்படும்.

இந்நிலையில் வாட்ஸ் அப் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை கேட்ட நொடி முதலே நெட்டிசன்கள் பலரும் வாட்ஸ் அப் மற்றும் அதன் கூட்டு நிறுவனமான ஃபேஸ்புக்கை TROLL செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், டெலிகிராம் நிறுவனமும் வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்கின் புதிய பிரைவசி பாலிசியை கிண்டல் செய்துள்ளது. குறிப்பாக அதை ட்வீட் செய்து சொல்லி வருகிறது. “டெலிகிராம் ஏன் பிரசித்தி பெற்ற அப்ளிகேஷனாக உள்ளது என்பதை அறிய ஃபேஸ்புக் நிறுவனம் தனியாக ஒரு குழுவை அமைத்துள்ளதாக கேள்விப்பட்டேன். அது ஏன் என்பதை நானே சொல்லி விடுகிறேன். உங்களது பணமாவது மிச்சமாகட்டும். உங்களது பயனர்களுக்கு மதிப்பு கொடுங்கள்” என சொல்லியுள்ளார் டெலிகிராமின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் டுரோவ்.

அதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் டெலிகிராம் டிரெண்டாகி வருகிறது...


♨️பப்ளிக் பேஜ்களிலிருந்து 'லைக் பட்டனை' நீக்கிய Facebook - என்ன காரணம் தெரியுமா?

இன்றைய உலகின் முன்னணி டிஜிட்டல் சமூக வலைத்தளமான பேஸ்புக் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதனை பயன்படுத்துபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்களாக மட்டுமின்றி அனைத்து வயதுடையவர்களாகும் உள்ளனர். கம்ப்யூட்டர் யூசர்களில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் தளமாக facebook.com இடம் பிடித்துள்ளது. இன்னொரு பக்கத்தில், பேஸ்புக், இந்த உலகின் மிக உயர்ந்த தொழில் நுட்ப திறன் கொண்ட வல்லுநர்களை இழுக்கும் காந்தமாகவும் மாறி வருகிறது. ஒவ்வொரு யூசரும் தங்களுக்கேற்ற வகையில் செட்டிங்ஸ்களை மாற்றி அமைத்துப் பயன்படுத்த வழி தருவதாலும், தனிப்பட்ட முறையில் இயங்கும் செயலிகளைக் கொண்டிருப்பதிலும், ஒரு தனித்துவம் மிக்க பொறியியல் அறிவின் அடையாளமாக பேஸ்புக் வடிவமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.


பேஸ்புக் இணைய தளத்தில், அதன் யூசர்கள் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். பேஸ்புக் (Facebook) நிறுவனமானது ஆர்டிஸ்டுகள், பொது நபர்கள் மற்றும் பிராண்டுகள் (Artists, Public figures and Brands) பயன்படுத்தும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பப்ளிக் பேஜ்களிலிருந்து லைக் பட்டனை ரிமூவ் செய்து விட்டதாக பேஸ்புக் (Facebook) நிறுவனம் கடந்த புதன்கிழமை தெரிவித்துள்ளது. பேஸ்புக் (Facebook) பேஜ்கள் பின்தொடர்பவர்களுக்கு மட்டுமே காண்பிக்கப்படும்


மேலும் யூசர்கள் உரையாடல்களில் (Conversations) சேரவும், நண்பர்களுடன் உரையாடவும், ரசிகர்களுடன் இணையவும் (Interact with Peers, and Engage with Fans) ஒரு பிரத்யேக செய்தி ஊட்டத்தைக் (News Feed) கொண்டிருக்கும் என ஒரு ப்ளாக் போஸ்ட்டில் (Blog post) தெரிவித்துள்ளது. இந்த புதிய மறுவடிவமைப்பு (New redesign) ஜனவரி 6ம் தேதி தொடங்கியுள்ளது. மறுவடிவமைப்பை பற்றி விளக்கிய பேஸ்புக், "நாங்கள் லைக்ஸ்களை அகற்றி, பின்தொடர்பவர்களை மக்கள் தங்கள் விருப்பமான பக்கங்களுடன் இணைக்கும் முறையை எளிதாக்க கவனம் செலுத்துகிறோம்" என்று கூறியது.


குறிப்பிடத்தக்க மாற்றங்களில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட லேஅவுட், செய்தி, எளிதான நெவிகேஷன், புதுப்பிக்கப்பட்ட பணி அடிப்படையிலான நிர்வாகக் கட்டுப்பாடுகள், செயல்படக்கூடிய நுண்ணறிவு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் (Redesigned layout, News Feed, easy navigation, updated task-based admin controls, actionable insights, and safety features) ஆகியவை அடங்கும். யூசர்கள் இப்போது தனிப்பட்ட பேஜ், பக்கங்களுக்கு இடையில் விரைவாக (personal profile and pages quickly) செல்லலாம்.


புதிய நிர்வாகக் கட்டுப்பாடுகள் மூலம், யூசர்கள் நம்பகமான பேஜ் அட்மின்களுக்கு (trusted page admins) முழு கட்டுப்பாடு அல்லது பகுதி அணுகலை வழங்க தேர்வு செய்யலாம். “நுண்ணறிவு, விளம்பரங்கள், உள்ளடக்கம், சமூக செயல்பாடு மற்றும் மெசேஜ்கள் (including Insights, Ads, Content, and Community Activity & Messages) உள்ளிட்ட குறிப்பிட்ட பணிகளை நிர்வகிக்க பல்வேறு நிலைகளை நீங்கள் இப்போது பெற முடியும். இது கணக்கு பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டை உறுதி செய்யும்” என்று ப்ளாக் போஸ்ட்டில் (Blog post) பேஸ்புக் தெரிவித்துள்ளது.


இந்த புதிய பாதுகாப்பு அம்சங்கள் ஸ்பேம்கள் மற்றும் ஆள்மாறாளர் கணக்குகளை முறையாகக் கண்டறிவதை உறுதி செய்யும். பிரத்யேக செய்தி தளம் (News Feed) பிற பொது நபர்கள் (public figures), பேஜ்கள், குழுக்கள் மற்றும் பிரபலமான உள்ளடக்கத்தை உள்ளடக்கிய புதிய இணைப்புகளைக் காண்பிக்கும் மற்றும் பரிந்துரைக்கும். இனிமேல் பொது நபர்களிடமிருந்து (public figures) வரும் கருத்துகள் பேஜ்களின் மேலே வரும். கருத்துகள் மற்றும் பரிந்துரை இடுகைகளிலிருந்து (comments and recommendation posts) யூசர்கள் நேரடியாக பேஜ்களைப் பின்தொடர முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. பேஜ்களுக்கான கூடுதல் அனுபவங்கள் வரும் மாதங்களிலும் வெளிவரும் என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment

முனைவர் படிப்பு - UGC புதிய அறிவிப்பு.

முனைவர் படிப்பு - UGC புதிய அறிவிப்பு. இது போன்ற தகவல் பெற https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc இந்த Telegram  குழுவில் இணையவும். https://...