Monday, January 25, 2021

✍🥀🥀இயற்கை வாழ்வியல் முறை🥀🥀தும்பைப் பூவின் மருத்துவ குணங்கள்.

🥀🥀இயற்கை வாழ்வியல் முறை🥀🥀தும்பைப் பூவின் மருத்துவ குணங்கள்.

தும்பை பூவின் மருத்துவ பயன்கள் | Thumbai flower health benefits - YouTube

🥀🥀🥀🥀🥀🥀

சளியைப் போக்க..

உடம்பில் கப மாற்றத்தால் ஏற்படும் நோய்களைப் போக்கும் அருமருந்தாகும் தும்பை. சளி பிடிப்பதால் நோய்களின் தாக்கம் அதிகரிக்கும். அடிக்கடி சளித் தொல்லையால் அவதிப்படுபவர்கள் தும்பை இலையின் சாறில் தேன் கலந்து அருந்தினால் சளித் தொல்லையில் இருந்து விடுபடலாம்..

🥀🥀🥀🥀🥀🥀

ஜலதோஷம்...

20 தும்பைப் பூக்களைப் போட்டுக் காய்ச்சி தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் ஜலதோஷம், தலைப் பாரம், சிறுரோகம் சம்பந்தப்பட்ட அனைத்தும் தீரும்.

🥀🥀🥀🥀🥀🥀

மலச்சிக்கல்.. 

மலச்சிக்கல் இருப்பதுதான் நோயின் அறிகுறி. தற்காலத்தில் வேதிப் பொருட்கள் கலந்த உணவுகளை உண்பதாலும், அதிக மன அழுத்தத்தாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது. தும்பை இலையை நன்கு அலசி அதனுடன் புதினா, கொத்தமல்லி கலந்து வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.. 

🥀🥀🥀🥀🥀🥀

வாயுத்தொல்லை...

வாயுவை அதிகரிக்கும் உணவுப்பொருட்களை உண்பதால் ஏற்படும் தொல்லையில் இருந்து விடுபட தும்பை இலையின் சாறைத் தொடர்ந்து மூன்று நாட்கள்ந்தக் குளிர் காலத்தில் பலரும் ஜலதோஷம், சளியால் அவதிப்பட்டு வருகிறார்கள். அதற்கு அருமருந்தாகத் திகழக்கூடியது தும்பை.

🥀🥀🥀🥀🥀🥀

கண்..

கணினியில் வேலை செய்பவர்களின் கண்கள் விரைவாகச் சோர்வடையும். இதனால் கண்களில் ஒருவிதமான வலி ஏற்படும். அதைப் போக்கவும், கண்களில் ஏற்படும் நோய் பாதிப்புகளை அகற்றவும் தும்பை இலையின் சாறு சிறந்த மருந்தாகும்.

தும்பை மூலிகையின் மருத்துவப் பயன்கள் - Medicare benefits of hammer herb |  பெமினா தமிழ்

🥀🥀🥀🥀🥀🥀

தொண்டைச் சதைவளர்ச்சி.. 

'டான்சில்ஸ்' எனப் படும் தொண்டைச் சதை வளர்ச்சியை தடுத்து விடும் தன்மை இதற்கு உண்டு. தும்பையின் தளிர் இலைகளைப் பறித்து நன்கு நீர் விட்டு அலசி அதனுடன் பாசிப் பருப்பு கலந்து வேக வைத்து, பின்னர் புளிக் கரைசலை ஊற்றி சிறி துநேரம் கழித்து தாளித்துக் கடைந்து சாப்பிட்டால் தொண்டைச் சதை வளர்ச்சி தடுக்கப்படும்.

🥀🥀🥀🥀🥀🥀

குழந்தைகளுக்கு

தும்பைப் பூவின் சாறு 4 சொட்டு, உத்தாமணிச் சாறு 4 சொட்டு, மிளகுத்தூள் 3 கிராம் இந்த மூன்றையும் தேனுடன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுக் கோளாறுகளும், மாந்தம், பேதி போன்ற நோய்களும் குணமாகும்.

🥀🥀🥀🥀🥀🥀

பெண்களுக்கு: 

வாயுப் பிரச்சினையால் சில பெண்களுக்கு மாதவிலக்கு தடைப்பட்டு தாமதமாகும். அவர்கள், தும்பை இலை, உத்தாமணி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து அதில் 3 கிராம் அளவு பசுவின் பாலுடன் கலந்து சாப்பிட்டால் மாதவிடாய் கோளா றுகள் நீங்கும். இதைச் சாப்பிடும் காலங்களில் புளி, காரம் ஆகியவற்றை உணவில் சேர்க்கக் கூடாது

🥀🥀🥀🥀🥀🥀

சளி தொல்லை நீங்க..

தும்பைப் பூவை பாலில் கொதிக்க வைத்து குடிக்கவும்.

குறட்டை குணமாக:

50 மில்லி நல்லெண்ணெய், 50 எண்ணிக்கை தும்பை பூ, இரண்டையும் போட்டு கொதிக்கவைத்து வடிகட்டி தினமும் 21 நாளைக்கு மூக்கில் 3 சொட்டு இட்டு வர குணமாகும். 

🥀🥀🥀🥀🥀🥀

மூக்கில் சதை வளர்ச்சி, தொண்டையில் சதை வளர்ச்சி, காசக் கழலைகள், குடலில் ஏற்படும் கட்டி, வீக்கம் குணமாக 100 மில்லி தேன், 50 எண்ணிக்கை தும்பை பூ, 50 நித்திய கல்யாணி பூ இரண்டையும் தேனில் ஊர வைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டிவிதம் சாப்பிட குணமாகும்.

கருப்பை கட்டி கரைய:-

20 தும்பை பூ உடன் 5 கிராம் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர குணமாகும்..

🥀🥀🥀🥀🥀🥀

தும்பை இலையை அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, வெளியிலும் பூசினால்  பூரான் கடி குணமாகும். அதனால் ஏற்பட்ட தடிப்பும், அரிப்பும் மறையும்.  தும்பை இலைச்சாற்றைத் தேன் கலந்து உள்ளுக்குத் தர நீர்க்கோவை குணமாகும்.

எள்ளின் மருத்துவப் பயன்கள் - Medicinal uses of sesame | பெமினா தமிழ்

🥀🥀🥀🥀🥀🥀 

தும்பை இலை, கீழா நெல்லி இலை இரண்டையும்  சம அளவாக எடுத்து அரைத்துச் சுண்டைக்காய் அளவு 1 டம்ளர் பசும்பாலில் கலந்து 2 வேளை குடித்துவர மாதவிலக்கு ஒழுங்காக வராமல் இருப்பவர்களுக்கு முறையான மாதவிலக்கு ஏற்படும்.

தும்பைச் சாறும், வெங்காயச்சாறும் கலந்து ஐந்து நாள் தர ஆசனப் புண் குணமாகும். தும்பைச் செடியை அரைத்துத் தேமல் உள்ள இடத்தில்  பூசி வரத் தேமல் குணமாகும். தும்பைப் பூ, நந்தியாவட்டப் பூ, புளியம்பூ, புங்கம் பூ, எள் பூ, திப்பிலி ஆகியவற்றைச் சேர்த்துக் கண்ணுக்கு மையாகத் தீட்டிவர வெள்ளெழுத்து மாறும்; கண் பார்வை தெளிவடையும். 

🥀🥀🥀🥀🥀🥀

பாம்புக்கடிகளுக்கும் தும்பையும் மிளகும் சேர்த்து முதலுதவியாக அளிக்கலாம். தும்பைச் சாற்றுடன் சிறிது சோற்றுப்புக் கலந்து கரைத்து மேலுக்குப் பூசி உலரவிட்டுக் குழித்துவரச்  சிரங்கு, சொறி நமச்சல்போகும். தும்பை இலைச் சாறை 3 சொட்டு மூக்கிலிட்டு உறிஞ்சித் தும்மினால் தலையில் நீரோ, கபால நீரோ, மண்டைக்குத்தலோ, மண்டையிடியோ குணமாகும். தும்பையிலைச் சாறு 25 மில்லியளவு பாம்பு தீண்டியவருக்குக் கொடுக்க இரண்டு  மூன்று முறை பேதியாகும். கபத்துடன் வாந்தியாகும்.

குளிர்ந்த உடல் சூடு அடையும். புதுப்பானையில் பச்சரிசி, பாசிப்பயறு பொங்கி உப்பில்லாமல் சாப்பிட வேண்டும். ஒருநாள் முழுவதும் பாம்பு தீண்டியவரைத் தூங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மூன்று நாட்கள் உப்பில்லாமல் பொங்கல் செய்து கொடுக்க நஞ்சு இறங்கும். மயங்கிய நிலையில் இருந்தால் சாற்றினை நசியமிடலாம். நசியத்தில் தெளியவில்லையென்றால் இறப்பது உறுதி. நச்சு முறிவில் தும்பை தனித்த ஒரு இடம் பெறுகிறது.

இன்னும் எத்தனையோ பலன்கள் தும்பைக்கு; இதன் பயன்பாடு பாரம்பரியாமாக நம் நாட்டு மக்களிடையே இருந்துவருகிறது

🥀🥀🥀🥀🥀🥀

.🌷🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்.

🤭🤭🤭🤭🤭🤭

உடலில் உள்ள எல்லா உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்.

💞💞💞💞💞💞

நன்றி :பெருசங்கர், 🚍ஈரோடு மாவட்டம், பவானி.

(( செல் நம்பர்)) (( 6383487768))

(( வாட்ஸ் அப்))  (( 7598258480 ))

🥀🥀🥀🥀🥀🥀

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH : 9750895059.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...