✍🏻🧆🧆இயற்கை வாழ்வியல் முறை🧆🧆உண்ணும் உணவும் உடல் ஆரோக்கியமும்.
🧆🧆🧆🧆🧆🧆
உணவே நம் ஆரோக்கியத்தின் அடிப்படை. நாம் உண்ணும் உணவு நமக்கு ஊட்டம் அளிப்பதுடன், மன மகிழ்ச்சியையும் வேலைத் திறனையும் அதிகரிக்கும் வகையிலும் அமைய வேண்டும்.
🧆🧆🧆🧆🧆🧆
உணவுப் பழக்கத்தில் நாம் ஏற்படுத்திக்கொள்ளும் தவறுகள் நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது. அதுபோன்ற தவறுகள் ஏற்படக்கூடாது என்பதற்காக, நாம் என்ன சாப்பிடவேண்டும்? எதனுடன் எதை கலந்து சாப்பிட வேண்டும்? எந்த அளவில் சாப்பிட வேண்டும்? சமச்சீரான ஊட்டச்சத்து என்றால் என்ன? என்பது பற்றி எல்லாம் சித்த மருத்துவம் சிறப்பாக எடுத்துரைக்கிறது.
🧆🧆🧆🧆🧆🧆
வயிற்றுப் புண், நெஞ்சு எரிச்சல், உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற பல நோய்களுக்கு தவறான உணவுப் பழக்கமும் முக்கியமான காரணமாக இருக்கிறது. உணவால் உடலில் ஏற்படும் தட்பவெப்ப மாற்றமும், வளர்சிதை மாற்றமும் ஹார்மோன் பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகிறது. இதற்கு மருந்துகள் எடுத்துக்கொள்வது மட்டுமே தீர்வாகாது. உணவிலும் சரியான மாற்றத்தைக் கொண்டு வந்தால் மட்டுமே நிரந்தரத் தீர்வு காண முடியும்.
🧆🧆🧆🧆🧆🧆
அறுசுவை உணவு
உணவை உண்ணும்போது நாம் முதலில் உணர்வது சுவையைதான். நமது ஊட்டச்சத்தின் வழிகாட்டிகளாக இருப்பவை ஆறு சுவைகள். இந்த சுவைகள் அனைத்தும் ஐம்பூதங்களின் சேர்க்கையால் ஆனது. மண்ணும் நீரும் சேர்ந்தது இனிப்பு. மண்ணும் தீயும் சேர்ந்தது புளிப்பு. நீரும் தீயும் சேர்ந்தது உப்பு. தீயும் காற்றும் சேர்ந்தது காரம். காற்றும் ஆகாயமும் சேர்ந்தது கசப்பு. மண்ணும் காற்றும் சேர்ந்தது துவர்ப்பு என ஐந்து பூதங்களின்சேர்க்கையால் இந்த ஆறுசுவைகளும் தோன்றின.
🧆🧆🧆🧆🧆🧆
இதில் இனிப்பு, புளிப்பு, உப்பு ஆகிய மூன்றும் உடலுக்கு ஊட்டம் அளிக்கக்கூடிய சுவைகள். காரம், கசப்பு, துவர்ப்பு ஆகிய மூன்றும் உடலை மெலிய வைக்கக்கூடிய சுவைகள்.
🧆🧆🧆🧆🧆🧆
இனிப்பு-உடலுக்கு ஊட்டமளித்து மனதிற்கு உற்சாகம் அளிக்க கூடியது. இனிப்பு சுவை அதிகமாகும்போது கபத்தை அதிகரிக்கும். செரிமானத்தை குறைத்துவிடும். சளி தொந்தரவு மற்றும் சர்க்கரை நோயை வர வழைத்து விடும்.
🧆🧆🧆🧆🧆🧆
தானியங்கள், சிறு தானியங்கள், பயறு வகைகள், பால்பொருட்கள், கிழங்குகள் பழங்கள், கரும்பு, தேன், வெல்லம் போன்றவை இனிப்பு சுவை கொண்டவை.
🧆🧆🧆🧆🧆🧆
புளிப்பு- பித்தத்தைத் தூண்டி ஜீரணத்தை அதிகரிக்கும். இதயத்திற்கு பலமளிக்கும்.
🧆🧆🧆🧆🧆🧆
புளிப்பு சுவை அதிகமாகும்போது அஜீரணம் ஏற்படும். சரும நோய் உண்டாகும். ரத்தம் கேடு அடையும்.
🧆🧆🧆🧆🧆🧆
மாங்காய், தக்காளி, புளி, மாதுளை, புளிச்சக்கீரை, மோர் போன்றவற்றில் இயற்கையான அமிலம் சிறிதளவு இருக்கும். புளிப்பு சுவை உணவில் உள்ள வைட்டமின் மற்றும் புரதச் சத்துக்களை கிரகி்த்து உடலுக்கு அளிக்கும். புளித்த மாவில் செய்யப்படும் இட்லி, தோசை உடல் நலத்திற்கு அதிக கேடு விளைவிக்கும்.
🧆🧆🧆🧆🧆🧆
உப்பு-உமிழ் நீரை அதிகரிக்கச் செய்யும். ஜீரணத்திற்கு உதவும். திசுக்களில் நீரை சேமித்து வைக்க துணைபுரியும். இதை அளவோடு பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாகும்போது தலைமுடி நரைக்கும். முடி கொட்டும். ரத்தக்கொதிப்பு, சிறுநீரக செயலிழப்பு என பல தொந்தரவுகளை உண்டாக்கும்.
🧆🧆🧆🧆🧆🧆
காரம்-செரிமானத்தை தூண்டும், கபத்தை போக்கும், உணர்ச்சியை கூட்டும். அதிகபட்ச காரம் உடல் வன்மையையும், நரம்பையும் பாதிக்கும். உடல் உறுப்புகளை தளர வைத்து விடும்.
🧆🧆🧆🧆🧆🧆
மிளகு, மிளகாய், இஞ்சி, பூண்டு, கிராம்பு, திப்பிலி, வெங்காயம், கடுகு, துளசி, புதினாபோன்றவை காரச்சுவை உடையவை.
🧆🧆🧆🧆🧆🧆
கசப்பு-கசப்பு சுவையை தரும். பலரும் இதை உணவில் சேர்த்துக் கொள்வது இல்லை. கசப்பு சுவையுடைய தாவரங்களில் மருத்துவ நுண் மூலக்கூறுகள் உள்ளன. இவை உடலில் உள்ள விஷ தன்மையை நீக்க உதவுகிறது. கபத்தை குறைக்கும்.
🧆🧆🧆🧆🧆🧆
கசப்பு, ஒரு மருத்துவ சுவை. இதை அதிகமாக சாப்பிடும்போது வாதத்தை அதிகரிக்கும். பாகற்காய், வேப்பம்பூ, சுண்டைக்காய்,வெந்தயம், சீரகம் மற்றும் காய்கறி, கீரைகளில் கசப்பு சுவை உள்ளது.
🧆🧆🧆🧆🧆🧆
துவர்ப்பு-கனியாத காய், பூ, மரப் பட்டைகளில் துவர்ப்பு சுவை அதிகம் உள்ளது. துவர்ப்பு சுவையில் உள்ள டானின் எனும் ரசாயனம் உடல் செல்களை சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. அது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும். ரத்தத்தை சுத்தி செய்யும். புண்களை ஆற்றும். பிஞ்சு காய்கறிகள், வாழைப்பூ, மாதுளம் பிஞ்சு, நாவல்பழம், நெல்லிக்காய், கடுக்காய் போன்றவை துவர்ப்பு சுவையுடையவை.
🧆🧆🧆🧆🧆🧆
நாம் அதிகமாக இனிப்பு, உப்பு, புளிப்பு சுவைக்கு மட்டுமே உணவில் முக்கியத்துவம் கொடுக்கிறோம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய கசப்பு, துவர்ப்பு வகைக் காய்கறி மற்றும் கீரைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். கார சுவைக்கு மிளகாய்க்கு பதில் மிளகு சேர்த்துக் கொள்வது சிறந்தது. புளிப்பு, உப்பு, காரம் இவை மூன்றும் ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். இத்தகைய ஆறு சுவைகளையும் கலந்து சாப்பிட்டால், நமக்கு உடலுக்கு வேண்டிய சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும்.
🧆🧆🧆🧆🧆🧆
இனிப்பு சத்து உள்ள தானியங்கள் ஒரு பங்கும்- துவர்ப்பு, கசப்பு சத்துள்ள கீரை காய்கறிகள் ஒரு பங்கும்- ஜீரணத்தை எளிதாக்க கூடிய உப்பு, காரம், புளிப்பு ஆகியவைகளை மிதமாகவும் சேர்த்து சமைப்பது மிகச் சிறந்த உணவு முறை.
🧆🧆🧆🧆🧆🧆
உணவை முறையாக சாப்பிடுவது எப்படி தெரியுமா?
உமிழ்நீர் சுரக்க உதவக் கூடிய இனிப்பு சுவையை முதலில் சாப்பிட வேண்டும். பின்பு ஜீரணத்திற்குரிய அமிலங்களை சுரக்கக்கூடிய புளிப்பு சுவையையும் அடுத்து காரம், கசப்பு, துவர்ப்பு சுவைகளையும், இறுதியில் மோர் சாப்பிடுவதும் சிறந்த உணவு உண்ணும் முறையாகும். உணவின் இறுதியில் இனிப்பு, பழங்கள் சாப்பிடுவது மிகவும் தவறான செயல். இதனால் ஜீரண கோளாறுகள் ஏற்படும். நாம் திருமண விருந்துகளில் இந்த தவறான உணவுப்பழக்கத்தைதான் கடைப்பிடிக்கிறோம்.
🧆🧆🧆🧆🧆🧆
சர்க்கரை நோயாளிகள் மற்றும் அதிக எடை உள்ளவர்கள் உணவில் இனிப்பு சுவையை குறைத்து கசப்பு, துவர்ப்பு சுவைகளை அதிகம் சேர்க்க வேண்டும். சளி, இருமல் இருக்கும்போது இஞ்சி, கிராம்பு, மிளகு போன்றவற்றை பயன்படுத்தலாம். பசி குறையும்போது சிறிது புளிப்பு சுவையை சேர்த்துக்கொள்ளலாம். நீரிழப்பு ஏற்படும்போது மோரில் சிறிது உப்பு கலந்து பருகலாம். குழந்தைகளுக்கு சளி பிடித்திருக்கும்போது இனிப்பு உணவுகளை அதிகம் சாப்பிட கொடுக்கக்கூடாது.
இவற்றை எல்லாம் நன்றாக புரிந்துகொண்டு, அதற்கு தக்கபடி உணவுகளை சுவைஅறிந்து உண்டுவந்தால் நோயின்றி வாழலாம்.
🧆🧆🧆🧆🧆🧆
கட்டுரை: டாக்டர் இரா.பத்மபிரியா, சித்த மருத்துவர், சென்னை.
🧆🧆🧆🧆🧆🧆
மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.
🧆🧆🧆🧆🧆🧆
🌷🌷🌷🌷🌷🌷
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்
🦚🦚🦚🦚🦚🦚
உடலில் உள்ள எல்லா உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்.
🦚🦚🦚🦚🦚🦚
நன்றி : பெருசங்கர், 🚍 ஈரோடு மாவட்டம், பவானி.
🧆🧆🧆🧆🧆🧆
(( செல் நம்பர்)) (( 6383487768))
(( வாட்ஸ் அப்)) (( 7598258480 ))
🧆🧆🧆🧆🧆🧆
குரு வாழ்க குருவே துணை
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
N.P. RAMESH: 9750895059.
இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram குழுவில் இணையவும்.
நன்றி.
No comments:
Post a Comment