Saturday, January 23, 2021

அணுக்கருவினுள் ஏற்படும் வலிமை மிக்க அணுக்கரு விசையை உருவாக்கும் மெசான் (pi meson) என்ற துகளைக் கண்டு பிடித்தத, நோபல் பரிசு பெற்ற ஹிடேகி யுகாவா பிறந்த தினம் இன்று (ஜனவரி 23, 1907).

அணுக்கருவினுள் ஏற்படும் வலிமை மிக்க அணுக்கரு விசையை உருவாக்கும் மெசான் (pi meson) என்ற துகளைக் கண்டு பிடித்ததநோபல் பரிசு பெற்ற ஹிடேகி யுகாவா பிறந்த தினம் இன்று (ஜனவரி 23, 1907).

ஹிடேகி யுகாவா (Hideki Yukawa) ஜனவரி 23, 1907ல் ஜப்பானில் டோக்கியோ பெருநகரில் பிறந்தார். இவருடைய தந்தை 'டகுஜி ஒகாவாஎன்பவராவார். தான் பிறந்த ஊரிலேயே இளமைக் கல்வியைப் பெற்ற இவர், கியோடோ என்ற இடத்தில் அமைந்திருந்த கியோட்டோ இம்பீரியல் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்றார். 1929-லிருந்து நான்கு ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். பட்டதாரியான இவர் கோட்பாட்டு இயற்பியலில் ஆர்வம் செலுத்தினார். குறிப்பாக ஆதாரத் துகளைக் (Elementary particles) கண்டறிவதில் அதிக ஆர்வம் செலுத்தினார். 1932ல் 'சுமிகோஎன்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். 1932-39 க்கு இடைப்பட்ட கலத்தில் விரிவுரையாளராகவும்பிறகு ஒசாக்கா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றினார். அங்கு ஆய்வுகளில் ஈடுபட்ட ஹிடேகி 1935ல் ஆதாரத் துகள்களுக்கிடையே ஏற்படும் உள்வினைகள் என்பது பற்றி இவருடைய ஆய்வறிக்கையை வெளியிட்டார்.

அறிக்கையில் அணுக்கரு விசைக்கான புதிய புலக் கொள்கையை உருவாக்கியிருந்தார். அதில் மெசான் என்ற பொருளின் வெளிப்பாட்டைக் குறிப்பிட்டார். 1937ல் அமெரிக்க இயற்பியலாளர்கள் காஸ்மிக் கதிர்களில் இருந்து வெளிப்படும் ஒரு வகை மெசான் என்ற துகளைக் கண்டு பிடித்தது இவருடைய ஆய்வுக்கு ஊக்கமூட்டுவதாக இருந்தது. எனவேமெசான் கொள்கையை விரிவாக்குவதில் இவருடைய சொந்தக் கருத்துகளின் அடிப்படையில் தீவிரமாக ஈடுபட்டார். 1938ல் இவருக்கு முனைவர் பட்டம் கிடைத்தது. 1947லிருந்து ஆதாரத் துகள்களின் பொதுக் கொள்கை அடிப்படையில் தீவிரமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். 1948ல் அமெரிக்காவிலும் 1949 முதல் அமெரிக்காவிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் வருகை தரும் பேராசிரியராக செயல்பட்டார்.

 

யுகாவா வலுவான அணுசக்தியின் வரம்பிலிருந்து (அணுக்கருவின் ஆரத்திலிருந்து)சுமார் 100 MeV / c2 நிறை கொண்ட ஒரு துகள் இருப்பதைக் கணித்தார். ஆரம்பத்தில் 1936 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்மியூயான் (ஆரம்பத்தில் "மு மீசன்" என்று அழைக்கப்பட்டது) இந்த துகள் என்று கருதப்பட்டதுஏனெனில் இது 106 MeV / c2 நிறை கொண்டது. இருப்பினும்பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள்மியூயான் வலுவான அணுசக்தி தொடர்புகளில் பங்கேற்கவில்லை என்பதைக் காட்டியது. நவீன சொற்களில்இது மியூனை ஒரு லெப்டனாக ஆக்குகிறதுஆனால் ஒரு மீசன் அல்ல. இருப்பினும்வானியற்பியலாளர்களின் சில சமூகங்கள் தொடர்ந்து மியூனை "மு-மேசன்" என்று அழைக்கின்றன. 

1947 ஆம் ஆண்டில்இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் சிசில் பவல்சீசர் லேட்ஸ்கியூசெப் ஒச்சியாலினி மற்றும் பலர் இணைந்து முதல் உண்மையான மீசன்கள்சார்ஜ் செய்யப்பட்ட பியோன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. துகள் முடுக்கிகளின் வருகை இன்னும் வரவில்லை என்பதால்உயர் ஆற்றல் கொண்ட துணைத் துகள்கள் வளிமண்டல அண்ட கதிர்களிலிருந்து மட்டுமே பெறப்படுகின்றன. புகைப்படத் தகடுகளின் வளர்ச்சியின் பின்னர்குழம்புகளின் நுண்ணிய பரிசோதனையானது சார்ஜ் செய்யப்பட்ட துணைஅணு துகள்களின் தடங்களை வெளிப்படுத்தியது. பியோன்கள் முதலில் அவற்றின் அசாதாரணமான "இரட்டை மீசன்" தடங்களால் அடையாளம் காணப்பட்டன. அவை அவற்றின் சிதைவால் ஒரு புட்டேடிவ் மீசனாக விடப்பட்டன. துகள் ஒரு மியூயானாக அடையாளம் காணப்பட்டதுஇது பொதுவாக நவீன துகள் இயற்பியலில் மீசன் என வகைப்படுத்தப்படவில்லை. 

ஜப்பானில் இருந்த அறிவார்ந்த கழகங்கள் இவருடைய திறமையை உணர்ந்தன. குறிப்பாக ஜப்பான் பல்கலைக் கழகம்இயற்பியல் கழகம்ஜப்பான் அறிவியல் குழு ஆகியவை இவரைத் தங்கள் உறுப்பினராக ஏற்றுக் கொண்டன. ஒசாக்கா பல்கலைக்கழகம் இவரை வருகை தந்து பாடம் பயிற்றுவிக்கும் பேராசிரியராக அமர்த்திக்கொண்டது. கியோட்டோ பல்கலைக்கழகம் அடிப்படை அறிவியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராகஇவருடைய பெயரிடப்பட்ட யுகாவா கூடத்தில் அமைந்துள்ள அதற்கான அலுவலகத்தில் இருந்து செயல்பட்டார். அமெரிக்க இயற்பியல் கழகம்அமெரிக்க தேசிய அறிவியல் கழகம் ஆகியவை இவரை தங்கள் கழகத்தின் அயல்நாட்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தன. 1940ல் ஜப்பான் கழகத்தின் இம்பீரியல் பரிசு 1943-ல் பண்பட்டை அலங்கரிக்கும் தகுதிப் பரிசு (Decoration of culturalment) ஆகியவை இவருக்கு வழங்கப்பட்டன. 

யுகாவா பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டதோடு சில நூல்களையும் எழுதியுள்ளார். அவற்றுள் 'துகள்கற்றை எந்திரவியலுக்கான முன்னுரை' (Introduction to Quantum Mechanics) 1946, 'ஆதாரத் துகள் கோட்பாட்டுக்கான முன்னுரை' (Introductioan to the Theory of Elementary Particles-1948) ஆகிய இரண்டு நூல்களை ஜப்பானிய மொழியில் எழுதி வெளியிட்டார். 'கோட்பாட்டு இயற்பியல் முன்னேற்றங்கள்என்ற தலைப்பில் வெளிவந்த ஆங்கிலப் பருவ இதழின் ஆசிரியராக இருந்தும் செயல்பட்டார். பாரிஸ் பல்கலைக் கழகம்எடின்பர்க் ராயல் கழகம்இந்திய அறிவியல் கழகம்அனைத்துலக தத்துவ மற்றும் அறிவியல் கழகம்பான்டிபிசியா அறிவியல் கழகம் ஆகியவை இவரை தங்களது அயல் நாட்டு உறுப்பினராக தேர்ந்தெடுத்துக் கொண்டன. 

எல்லாவற்றுக்கும் மேலாக 'கியோட்டோ நகர் மதிப்பியல் குடிமகன்' (Honarary citizen of the city of Kyoto, Japan) என்ற சிறப்பு இவருக்கு வழங்கப்பட்டது. இவரைச் சிறப்பிக்கும் வகையில் இவருடைய உருவம் பொறித்த அஞ்சல் வில்லைகள் வெளியிடப்பட்டன. யுகாவா அணுக்கருவினுள் ஏற்படும் வலிமை மிக்க அணுக்கரு விசையை உருவாக்கும்எலக்ட்ரானை விட பல மடங்கு கனமான ஆதாரத் துகளைக் கண்டறிந்தவர். 1949ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற கோட்பாட்டு இயற்பியலாளர். முதன் முதலில் ஜப்பானுக்கு நோபல் பரிசைப் பெற்றுத்தந்த ஹிடேகி யுகாவா செப்டம்பர் 8,1981ல் தனது 74வது அகவையில் ஜப்பான், கியோட்டோ என்ற ஊரில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.



3 comments:

  1. It is not that YUKAWA discovered, he proposed such a particle could exist using Scrodinger equation in quantum mechanics. The cosmic rays studies revealed the existence of particles with mass slightly greater than electron's mass,which later was identified as the particle proposed by Yukawa.In honor of him this was named YUKAWA particle.

    ReplyDelete
  2. It is not that YUKAWA discovered, he proposed such a particle could exist using Scrodinger equation in quantum mechanics. The cosmic rays studies revealed the existence of particles with mass slightly greater than electron's mass,which later was identified as the particle proposed by Yukawa.In honor of him this was named YUKAWA particle.

    ReplyDelete

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...