Monday, February 1, 2021

அரசு கல்லூரி மற்றும் அரசு உதவி பெரும் கல்லூரி மாணவர்களுக்கு 2 ஜிபி இணைய டேட்டா: முதல்வர் தொடக்கம்.

அரசு கல்லூரி மற்றும் அரசு உதவி பெரும் கல்லூரி மாணவர்களுக்கு 2 ஜிபி இணைய டேட்டா: முதல்வர் தொடக்கம்.

அரசு கல்லூரி மற்றும் அரசு உதவி பெரும் கல்லூரி மாணவர்களுக்கு 2 ஜிபி இணைய டேட்டா வழங்கும் நிகழ்ச்சி இன்று  நடைபெற்றது. தினந்தோறும் 2 ஜிபி டேட்டா என 3 மாதத்ததிற்கு அரசு கல்லூரி மற்றும் அரசு உதவி பெரும் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் என அரசு முன்னரே அறிவித்திருந்தது. 


இது இணையவழி கல்வி பயில உதவியாக இருக்கும் என முதல்வர் கூறியிருந்தார். அதன் பேரில் இன்று டேட்டா அட்டை வழங்கு நிகழ்ச்சியை முதல்வர் தொடங்கி வைத்தார். புதிய தலைமை செயலாளர் ராஜூவ் ரஞ்சனும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.


கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இணைய வழி பாடங்கள் இணைய வழியில் நடத்தப்பட்டு வருகின்றன. 


இணைய வழியில் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் போதிய இணைய வசதிகள் இன்றி பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. அதனை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரி மற்றும் அரசு உதவி பெரும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக  2 ஜிபி இணைய டேட்டா வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.


அதன்படி  இணைய வழி வகுப்புகளில் மாணவர்கள் கலந்துகொள்ள ஏதுவாக அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணவர்களுக்கு பிப்ரவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரை 3 மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜி பி டேட்டா பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா டேட்டா அட்டைகள்  வழங்கப்பட்டன.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

Notification for Student’s Registrations in ISRO START Programme

Notification for Student’s Registrations in ISRO START Programme. இஸ்ரோ ஆன்லைன் படிப்பு பதிவு பதிவுகளுக்கான அறிவிப்பு. ISRO has an active sp...