Friday, February 12, 2021

விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் - முதல்வர்.

விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் - முதல்வர்.

விவசாயிகளுக்கான அரசாக அதிமுக அரசு திகழ்கிறது என்று கூறியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விவசாயிகள் பம்பு செட்டுக்கு மும்முனை மின்சாரம் 24 மணிநேரமும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பழனிச்சாமி எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சனம் செய்தார்.

விவசாயிகளுக்கு அறிவிப்பு சட்டசபையில் விவசாய கடன் ரத்து அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் பழனிச்சாமி, திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் 24 மணிநேரமும் மும்முனை மின்சார அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தியாவிலேயே சிறப்பான ஆட்சியை தருகிறோம் என்று சொன்ன முதல்வர் பழனிச்சாமி, எங்கள் மீது எதிர்கட்சியினரால் எந்த குற்றச்சாட்டையும் சொல்ல முடியாது என்றார்.

விவசாயிகளின் அறிவிப்பு திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, பல்லடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் முதல்வர் பழனிசாமி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், விவசாயிகளுக்கான அரசாக அதிமுக அரசு திகழ்கிறது என்றார்.

24 மணிநேரமும் மும்முனை மின்சாரம்

தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகள் பம்பு செட்டுக்கு மும்முனை மின்சாரம் 24 மணிநேரமும் வழங்கப்படும் என்று அறிவித்தார். ஏற்கனவே தமிழக விவசாயிகளின் கடன் சுமையை முற்றிலும் குறைத்திடும் விதமாக 12,110 கோடி கூட்டறவு பயிர்க்கடனை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதன் மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர் என்றும் முதல்வர் கூறினார்.
இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.






No comments:

Post a Comment

நெருப்பு வளைய சூரிய கிரகணம் Ring of Fire Solar Eclipse.

நெருப்பு வளைய சூரிய கிரகணம் Ring of Fire Solar Eclipse புதன்கிழமை அக்டோபர் 2- ம் தேதி   வானத்தில் தோன்றவுள்ளது . பூமிக்கும் சூரிய...