Sunday, February 14, 2021

பள்ளி மாணவர்களுக்கு தேசிய கட்டுரைப் போட்டி: வெற்றி பெறுவோர் ரூ.45,000 பரிசுத் தொகையுடன் ஒரு வாரம் தென் கொரியா செல்லலாம்.

பள்ளி மாணவர்களுக்கு தேசிய கட்டுரைப் போட்டி: வெற்றி பெறுவோர் ரூ.45,000 பரிசுத் தொகையுடன் ஒரு வாரம் தென் கொரியா செல்லலாம்.

இந்திய பத்திரிகையாளர் சங்கம், வாய்ஸ் ஆஃப் கிட்ஸ், கொரிய கலாச்சார சங்கம், கொயாத்தே நிறுவனம் மற்றும் வளர்ச்சி மையம் ஆகியவை இணைந்து 9 முதல் 12-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு தேசிய கட்டுரைப் போட்டியை நடத்த உள்ளன. இதற்கு மார்ச் 15-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.


ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சித் திட்டங்களில் உள்ள சவால்கள், கரோனா பெருந்தொற்றால் பாரம்பரியக் கல்வி முறையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, அவற்றை எப்படிச் சரிசெய்யலாம், பாலினச் சமத்துவத்தை அடைவது எப்படி, கழிவுகள் மேலாண்மையை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பன குறித்த கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.


தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் முதல் பரிசு பெறும் மாணவருக்கு ரூ.20,000 தொகையும், இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசாக முறையாக ரூ.15,000 மற்றும் ரூ.10,000 தொகையும் வழங்கப்படும். மேலும் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் 1 வாரம் இலவசமாகத் தென் கொரியப் பயணத்தை மேற்கொள்ளலாம். அத்துடன் சிறப்புப் பதக்கங்களும், கொயாத்தேவில் இலவசமாக ஆன்லைனில் ஒரு சான்றிதழ் படிப்பும் வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க ரூ.100 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க: http://lft.org.in/newt/

Notification Link

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...