Sunday, February 14, 2021

✍️கவிதை ✍️ ❤️💞எது காதல்??? 💞❤️✍️இரஞ்சிதா தியாகராஜன்.

 ✍️கவிதை ✍️

   ❤️💞எது காதல்??? 💞❤️✍️இரஞ்சிதா தியாகராஜன்.

ஒருவர் மீது அளவு கடந்த அன்பு..... 

இதயத்தில்  எய்யப்படும் பாச அம்பு.... 

      காதல் 

அன்னை முகம் சிரிப்பு, குழந்தை பிறந்த தருணம்...

       காதல்.

Image result for எது காதல்

தந்தை பரிதவிப்பு,  குழந்தை கதறல் காதில் கேட்டு.... அந்த அற்புத தருணம்... 

     காதல் 

ஆசிரியர் மீது மாணவர் அன்பு.... 

      காதல் 

அண்ணன் தங்கை மேல் கொண்ட பாசம் 

      காதல் 

இளமை வயதில் இமைகள் தாக்கி, இரவில் இம்சையான அழகிய தருணம்.....

      காதல்

Image result for எது காதல்

தோல் சுருங்கினாலும், தோழமை நீங்காத கணவன், மனைவி புரிதல் அன்பு... 

      காதல் 

உலகம் நாள்தோறும் இயங்கும் உல்லாச பயணம்.... 

       காதல்

✍️கவிதை ✍️: இரஞ்சிதா தியாகராஜன், இயற்பியல், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.



காதலர் தின சிந்தனைகள்....

இந்த படத்துல பொருசா இருக்குப் பாருங்க இது தான். பெண்மைக்கான மரபணு. இதனை X குரோமோசோம் என அழைப்பார்கள்.  

பாவமா போலக் குட்டியா இருக்கு பாருங்க இது தான் ஆண்மைக்கான மரபணு. இதை Y குரோமோசோம் என அழைக்கப்படுகிறது. 

இந்த இரண்டும் தான் பாலுணர்வு மற்றும் ஆண் பெண் ஈர்ப்பின்  அடிப்படை.  இதனால் தான் இவ்வுலகம் இயக்கத்தில் உள்ளது. அதாவது குழந்தைகள் இல்லா நாளைய உலகம் இல்லை.

Image result for X an Y குரோமோசோம் gif

பல கோணத்தில் இந்த அமைப்பைச் சிந்தித்தால் பெண்கள் ஆண்களை விட வலுவானவர்களாகவே உள்ளனர். 

1. X குரோமோசோம்  பெரியது ஆனால் Y குரோமோசோம் மிகவும் சிறியது எனப் பார்த்தோம். மேலும் உடலில் உள்ள 24 வகையான  குரோமோசோம்களில் மிகச்சிறிய Y குரோமோசோம் தான் !!!
ஐயோ பாவம் !!!

2. படிப்படியாக Y குரோமோசோம் சுருங்கி வருகிறது.  ஒரு காலத்தில் இது இல்லாமல் போய்விடும். X குரோமோசோம் அப்படி அல்ல நிலையானது. அச்சச்சோ.....

3.  பெண்கள் உடலில் உள்ள அணுக்களில் இரண்டு X குரோமோசோம்கள் இருக்கிறது.   ஒரு X  மற்றும் ஒரு Y குரோமோசோம்கள் இருந்தால் அது ஆண்.  அதாவது கவனிக்க வேண்டிய சங்கதி என்னவென்றால் ஒரு  X குரோமோசோமாவது நம் அணுக்களிலிருந்தாக வேண்டும். இல்லை என்றால் அந்த  மனிதன் மட்டும் அல்ல அவன் உடலில் ஒரு அணுக்களும் உயிர் வாழ முடியாது. X குரோமோசோமில் அவ்வளவு சக்தி உள்ளது.

அதாவது X குரோமோசோம் உயிரியின் அடிப்படை. 

4. நவீனத் தொழில்நுட்ப உதவியுடன் பெண்களால் ஆண் துணை இல்லாமல்  குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். அதாவது விந்து அணுகூட தேவையில்லை. அவர்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.

ஆண்களால் முடியுமா? அவ்வளவு சக்தி !

5. கருமுட்டை சுமார் 100 மைக்ரான் விட்டம் கொண்டது. அளவில் பெரியது. விந்தணு சுமார் 5 மைக்ரான் விட்டமுள்ள தலையையும் 50 மைக்ரான் நீளமுள்ள மெல்லிய வாலையும் கொண்டுள்ளது. இது அளவில் சிறியது. 

6. வேணும்னா விந்து தான் கருமுட்டையை நாடிச் செல்ல வேண்டும். ஒரு காலமும் கருமுட்டை விந்தைத் தேடிவராது. அதன் சக்தி அப்படி !!

7. அது மட்டுமல்ல ஒரு கருமுட்டையுடன் இணைய சுமார் 600 கோடி விந்தணுக்கள் போட்டி போட்டுகிறது. நினைத்துப் பாருங்கள் எவ்வளவு கடுமையான போட்டி. நீங்களும் இந்த போட்டியில் கிடைத்த வெற்றிக் கனிகள் தான்.  

8. பல மரபணு சேதங்கள் ஆண்களில் மலட்டுத்தன்மையை உண்டு பண்ண வல்லது. ஆனால் அதே மரபணு சேதங்கள் உள்ள பெண்களுக்குக் குழந்தை பாக்கியம் உண்டு !! யார்க் கிட்ட.... நெருங்க முடியுமா? 

9. சராசரியாக ஆண்களைவிடப் பெண்கள் அதிக நாட்கள் உயிர் வாழ்கின்றனர். 

10. சொட்டைத்தலை (வழுக்கை) ஆண்களுக்கு மிகச் சாதாரணம். பெண்களுக்கு இது அபூர்வம்.

11. மன அழுத்தம் மற்றும் கடுங்குளிர் போன்ற உபாதைகளைத்
தாங்குவதில் பெண்கள் ஆண்களைவிட வல்லவர்கள்.

இந்த காதலர் தினத்தில் ஆண்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி உள்ளது.  ஆண்களின் உடலில் உள்ள எலும்பின் அடர்த்தி மற்றும் தடிமன் அதிகம்.  இதனால் ஆண்களின் உடல் வலிமை அதிகம். 

அதாவது ஆண்கள் குடும்பத்தை  உடல் வலிமை கொண்டு காக்க வேண்டும்.  

அதாவது அடியாள் அல்லது பாதுகாவல் வேலை தான் வேரென்ன?

அனைவரும் காதல் தின வாழ்த்துகள்..
பேராசிரியர் சி சுதாகர்.

No comments:

Post a Comment

Notification for Student’s Registrations in ISRO START Programme

Notification for Student’s Registrations in ISRO START Programme. இஸ்ரோ ஆன்லைன் படிப்பு பதிவு பதிவுகளுக்கான அறிவிப்பு. ISRO has an active sp...