Monday, February 1, 2021

✍🏻🪦🪦 இயற்கை வாழ்வியல் முறை🪦🪦கழற்சிக்காயின் பயன்கள்.

 ✍🏻🪦🪦 இயற்கை வாழ்வியல் முறை🪦🪦கழற்சிக்காயின் பயன்கள்.

🪦🪦🪦🪦🪦🪦

கழற்சிக்காயின் இலைகள், காம்புகள், விதைகள், வேர்கள் என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. 

கழற்சிக்காய் மருத்துவப் பயன்கள் - Medicinal benefits oF kazharchikkay |  பெமினா தமிழ்

நமது உடலில் நீண்ட நாட்களாக ஆறாத புண்கள் மற்றும் காயங்கள் சமயங்களில் புரையோடிப்போய் நமக்கு வலுவுடன் மிகுந்த வேதனையை தரும். புதிதாக அரைத்து தூளாக்கப்பட்ட கழற்சிக்காய் தூளை தினமும் சிறிதளவு நீர் விட்டு குழைத்து ஆறாத புண்கள், காயங்கள் மீது பற்றிட்டு வர அவை சீக்கிரம் குணமாகும். தழும்புகளேற்படுவதையும் தடுக்கும். வீக்கம் அடிபடுதல் மற்றும் உடலின் சில பாகங்களில் சுளுக்கு ஏற்படுவதாலும் அப்பகுதியில் அதிகளவில் வீக்கம் ஏற்படுகிறது. கழற்சிக்காய் இலைகள், விதைகள் போன்றவற்றை மைய அரைத்து வீக்கம் ஏற்பட்ட இடங்களில் மேற்பூச்சாக தொடர்ந்து பூசி வந்தால் வீக்கங்கள் விரைவில் குறையும். வயிற்று பிரச்சனைகள் பலருக்கும் அவர்களின் வயிற்றில் வாயு கோளாறுகள், மலச்சிக்கல், குடற்புழு மற்றும் இதர வயிறு சார்ந்த பிரச்சனைகளால் அவதியுறுகின்றனர். இப்படியான நிலையிலிருப்பவர்களுக்கு கழற்சிக்காய் சிறந்த நிவாரணியாக இருக்கிறது.

கழற்சிக்காய் மருத்துவப் பயன்கள் - Medicinal benefits oF kazharchikkay |  பெமினா தமிழ்

🪦🪦🪦🪦🪦🪦

கழற்சிக்காயின் இலைகள் மற்றும் விதைகளை அரைத்து செய்யப்பட்ட தூளை சிறிதளவு நீரில் கலந்து பருகி வர வயிற்று கோளாறுகள் நீங்கும். ஈரல் நமது உடலுக்கு நோய்களை எதிர்த்து நிற்கும் நோய் எதிர்ப்பு திறன் மற்றும் நாம் உண்ணும் உணவுகளில் இருக்கும் நச்சுத்தன்மையை அழிப்பது போன்ற செயல்களை நமது ஈரல் செய்து வருகிறது. கழற்சி கொடியின் காம்புகளை பக்குவம் செய்து சாப்பிடும் போது நமது ஈரல் பலம் பெறும். அதன் செயல்பாடுகளும் மேம்பாட்டு உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். 

🪦🪦🪦🪦🪦🪦

தொழுநோய் என்பது ஒரு வகை கிருமி உடலில் தொற்றிக்கொண்டு கை கால் விரல்கள், மூக்கு, உதடு போன்ற உறுப்புகள் உடலின் இன்ன பிற பாகங்கள் போன்றவற்றை பாதித்து, அவற்றை அழுகி போகச்செய்யும் கொடுமையான வியாதியாகும். கழற்சிக்காய் விதைகள் சிலவற்றை கடாயில் போட்டு, பச்சை வாசனை போகும் வரை வறுத்து, பொடியாக்கி தினமும் ஒரு கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் தொழுநோய் கட்டுப்படும்.

Thagadur Yathirai – | Old Tamil Poetry

🪦🪦🪦🪦🪦🪦

யானைக்கால் வியாதி என்பது ஒரு வகை கொசு கடிப்பதால், அதனிடமிருந்து பரவும் கிருமி உடலில் தொற்றி கால்கள், நிண நீர் சுரப்பிகளையும் பாதிக்கிறது. கழற்சிக்காய் கொடிகளின் இலைகளை பக்குவம் செய்து உள்மருந்தாக சாப்பிட்டு வந்தால் உடலில் தங்கியிருக்கும் யானைக்கால் வியாதியை பரப்பும் தொற்றுண்ணிகளை அழிக்கிறது.

🪦🪦🪦🪦🪦🪦

ஆண்களை பாடாய்ப்படுத்தும் விதை வீக்கம் பிரச்சனைக்கு இவை சிறந்த மருந்தாக இருக்கும். விரையில் அடிபட்டாலோ கட்டி வந்தாலோ விரையை சுற்றியிருக்கும் சவ்வுபையில் சுரக்கும் சுரப்பு நீர் அதிகமாக சுரந்து விரை வீக்கம் உண்டாகும்.

இவை நிணநீர் பாதையை அடைத்துகொள்வதால் விரைகள் வீக்கத்துக்கு உள்ளாகும். இதனால் விரைகள் மெல்ல பெரிதாகி கொண்டே போகும். இந்த கழற்சிக்காய் விதைகளை அரைத்து விரைகள் மீது பற்று போல் தடவி வந்தால் சுரப்பு நீர் பொறுமையாக வெளியேறி வீக்கம் வற்றிவிடும்.

🪦🪦🪦🪦🪦🪦

இந்த கழற்சிக்காய் சூரணத்தை விளக்கெண்ணெயோடு சேர்த்து காய்ச்சி தைலத்தை விதை வீக்கத்தின் மீது தடவி வந்தால் சுரப்பிகளின் வீக்கம் கட்டுக்குள் அடங்கும். விதைப்பை வலி குறையும்.

🪦🪦🪦🪦🪦🪦

விரைவாதம் குறைய கழற்சிக்காய் விதையை வாணலியில் போட்டு இலேசாக பச்சை வாடை போகும்படி வறுத்து பொடிக்கவும். இதை சிட்டிகை எடுத்து பாலில் அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் விரைவாதம் நீங்கும். முன்னோர்கள் விரை பிரச்சனைக்கு பயன்படுத்திய மருந்து இது.

🪦🪦🪦🪦🪦🪦

கழற்சிக்காய் இலையை பொடியாக்கி அதை கொண்டு பல் துலக்குவதன் மூலம் பல் வலி குறையும். பல் ஈறுகள் வலுப்பெற கழற்சிக்காய் இலையை கொதிக்க வைத்த நீரை கொண்டு வாய்கொப்புளித்தால் பலன் கிடைக்கும். வாய் துர்நாற்றம் இருப்பவர்கள் இந்த நீரை தொடர்ந்து வாய்கொப்புளித்து வந்தால் துர்நாற்றம் மறையும்.

🪦🪦🪦🪦🪦🪦

பல் சொத்தை ஆரம்பத்தில் இருந்தால் இந்த பொடியை கொண்டு அந்த இடத்தில் சில நொடி வைத்து தேய்த்துவந்தால் பல் சொத்தை மறையவும் செய்யும். ஆனால் தொடர்ந்து செய்ய வேண்டும். அதோடு கழற்சிக்காயை தீயில் சுட்டு சூரணமாக்கி கொட்டைபாக்கு, கரி சேர்த்து பல் தேய்த்து வந்தாலும் பல் ஈறு பிரச்சனை, பல் சொத்தை இரண்டுக்குமே பலன் கிடைக்கும்

🪦🪦🪦🪦🪦🪦

கட்டுரை ‌ஆ.வீ. இயற்கை மருத்துவர் முத்துப்பாண்டி.

Bonduc Nut facts and health benefits

🪦🪦🪦🪦🪦🪦

மிகினும் குறையினும் நோய்செய்யும்

அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்

🪦🪦🪦🪦🪦🪦

🌷🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚🦚🦚

உடலில் உள்ள  எல்லா உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚🦚

நன்றி : பெருசங்கர், 🚍 ஈரோடு  மாவட்டம், பவானி.

🪦🪦🪦🪦🪦🪦

(( செல் நம்பர்)) (( 6383487768))

(( வாட்ஸ் அப்))  (( 7598258480 ))

🪦🪦🪦🪦🪦🪦

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9750895059.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.


No comments:

Post a Comment

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது?

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது? கடந்த இரண்டு மாதங்களாக விண்வெளியில் தங்கியுள்ள விண்வெ...