போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்.
ஊதிய உயர்வு, தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் போக்குவரத்து துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி, இரண்டு நாட்களாக தமிழகத்தில் போராட்டம் நீடித்ததால் பேருந்துகள் வழக்கத்தை விட குறைந்த அளவில் இயக்கப்பட்டு பல மாவட்டங்களில் மக்கள் பாதிப்படைந்தனர்.
இந்நிலையில் போராட்டத்தின் மூன்றாவது நாளான இன்று போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இது போன்ற தகவல் பெற
No comments:
Post a Comment