Wednesday, February 17, 2021

✍ 🙉🙊இயற்கை வாழ்வியல் முறை🙉🙊உடை நாகரீகம் சமுதாய சீர்கேடு உணவின் நாகரீகம் உடலின் சீர்கேடு.

✍ 🙉🙊இயற்கை வாழ்வியல் முறை🙉🙊உடை நாகரீகம் சமுதாய சீர்கேடு உணவின் நாகரீகம் உடலின் சீர்கேடு.

🙈🙈🙈🙈🙈🙈

தாம்பத்தியம் சிறக்க வில்லை என்றால் குடும்பத்தின் மகிழ்ச்சி நிறைவு பெறாது தாம்பத்தியம் என்றால் என்ன ஒருவர் மட்டுமே மகிழ்ச்சி பெறுவதல்ல தாம்பத்தியம்  இருவரும் இணைத்து மகிழ்ச்சி பெறுவதே தாம்பத்தியம். அப்படி இருவரும் ஒன்றிணைத்து தாம்பத்தியத்திற்கு தெளிவு பெற்றாள் எந்தக் குடும்பத்திலும் கணவன் மனைவிக்குள் பிரிவினை என்பதே கிடையாது என்பது திண்ணம். இன்றைய கலாச்சார சீர் கேட்டால் நாம் உண்ணும் உணவு ரசாயனம் உள்ள உணவாகவே மாறி போனது ரசாயனம் என்பது  நம் உடலில் உள்ள ஆண்மைக்குரிய அனைத்து சக்தியும்   அழித்து கொண்டிருக்கிறது.  அதனாலே ஆண்களுக்கும் பெண்களுக்கும் மலட்டுத் தன்மை பெருகிப் போனது  இன்று அவசரகதியில் ஓடி ஓடி பணம் சம்பாதித்து இறுதியில் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரிடம் அனைத்துக்கும் ஆலோசனை பெற்று இறுதியில் நாம் சேமித்த பணம் எல்லாம் நோய்க்கு செலவழித்து  நிம்மதியின்றி வாழப் பழகிக் கொண்டு வருகிறோம். ஒரு மனிதனுக்கு உணவும் உறக்கமும் எவ்வளவு முக்கியமோ அதைப் போன்றே மன அமைதியும் மிக முக்கியம். இன்று உள்ள நமது அவசரகதி வாழ்க்கையில் மன நிம்மதி என்பதே கேள்விக்குறியாக மாறிப் போனது ஏன்?. இந்த அவசர கதியான வாழ்க்கை என்று உற்று நோக்கினால் தெளிவாக புரிவது என்னவென்றால் மற்றவரைப் பார்த்து மற்றவர்கள் போலவே நாமும் வாழ வேண்டும் என்ற எண்ணமே இதற்குக் காரணம். நாம் நாமாக வாழ விரும்பவில்லை. பிறரைப் போலவே வாழ விரும்புகிறோம். அதன் விளைவுகளே நமது வாழ்க்கையை சீரழிந்து கொண்டிருக்கிறது என்பது உண்மை. இதை புரிந்து கொள்ளாதவரை மனித சமூகம் அழிவை நோக்கி மிக விரைவில் ஊர்ந்து சென்று கொண்டிருக்கிறோம் என்பதை மறுக்க முடியாத உண்மை.

அமைதியும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ நினைப்பவர்கள் உண்ணும் உணவு முறையில் சில மாற்றங்களும் நமது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை  பின்பற்றினால் மட்டுமே   ‌     சிறப்புடன்  வாழலாம்.

🙊🙊🙊🙊🙊🙊

இட்லி தோசை என்பது நல்ல உணவுதான் அதன் செய்முறை  கைக்குத்தல் அரிசியும் கருப்பு உளுந்து வெந்தயம் கொட்டமுத்து நான்கும் பக்கமாக மாவாக்கி சமைப்பதுதான் இட்லி நல்ல உணவாக இருக்கும்.

ஆனால் இன்றைய சூழலில் செய்முறை என்பது எப்படி உள்ளது ஒன்று கடையில் வாங்கி உண்கிறோம் அல்லது வாரம் ஒரு முறை ஆட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்து கொள்கிறோம்.

இதை உணவாக உண்ணும்போது அது எப்படி உடலுக்கு நன்மை விளைவிக்கும் என்பதே என் கேள்வி??

அதனால் இனி இட்லி தோசை சாப்பிடும் நினைப்பவர்கள் கம்பு ராகி சோளம் வரகு இதுபோன்ற சிறு தானிய வகைகள் இட்லி தோசையாக சமைத்து உணவாக சாப்பிட்டு வாருங்கள் இதுவே நோயில்லாத வாழ வழிவகுக்கும்.

🙈🙈🙈🙈🙈🙈

நிறைய படித்து விட்டோம் பகட்டு வாழ்க்கை வாழலாம் என்று நினைப்பவர்கள் கூட இன்று இயற்கையோடு இணைந்து வாழ முயற்சி செய்து கொண்டு வருகிறார்கள் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. இதையே நாம் அனைவரும் விரும்பினால் மட்டுமே அமைதியான ஆரோக்கியமான வாழ்க்கையும் வாழலாம்  என்பது திண்ணம் சிறுசிறு மாற்றங்களோடு இயற்கையோடு இணைந்து வாழும் முயற்சிப்போம்.

🙊🙊🙊🙊🙊🙊

பின் குறிப்பு எண் அறிவுக்கு எட்டியதை இக்கட்டுரையை எழுதியுள்ளேன் பிழையிருப்பின் அனைவரும் மன்னிக்கவும்.

🙊🙈🙉🙊🙈🙉

 🌷🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்.

Image result for உணவின் நாகரீகம் உடலின் சீர்கேடு.

நன்றி: பெருசங்கர்,🚍 ஈரோடு மாவட்டம், பவானி.

செல் நம்பர்  7598258480 

 வாட்ஸ் அப் எண்

 7598258480 

🙊🙉🙈🙊🙉🙈

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9750895059.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...