Monday, June 28, 2021

மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு குடியேற்ற நினைக்கும் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் (Elon Musk) பிறந்த தினம் இன்று (ஜூன் 28, 1971).

மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு குடியேற்ற நினைக்கும் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் (Elon Musk) பிறந்த தினம் இன்று (ஜூன் 28, 1971).

எலான் மஸ்க் (Elon Musk) ஜூன் 28, 1971ல் தென்னாப்பிரிக்காவில் பிறந்தார். இவருடைய தந்தை பொறியாளர். தாயார் மே மஸ்க் சத்துணவு நிபுணர். பன்னிரண்டு அகவையில் இருக்கும்போதே கணினியில் ஈர்ப்புக் கொண்டு 'Blaster' என்ற வீடியோ கேமை வடிவமைத்தார். அதை PC and Office Technology என்ற இதழிடம் 500 டாலருக்கு விற்றார்.தம்முடைய வீடியோ விளையாட்டுக்கு அவரே குறியீடுகள் எழுதி அதனை விற்று ஊதியம் அடைந்தார். கனடாவில் ஒண்டாரியோ கிங்ஸ்டனில் உள்ள குவீன்ஸ் பல்கலைக் கழகத்திலும் பின்னர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திலும் படித்தார். பொருளியல் மற்றும் தெரியியல் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டங்கள் பெற்றார். ஆய்வுகள் செய்து பட்டம் பெற கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் படிப்பை அங்குத் தொடரவில்லை. 1995-ல் சகோதரருடன் இணைந்து Zip2 என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். 

ஆன்லைன் சேவை நிறுவனமான இது 'city guide' என்னும் மென்பொருளை நிறுவனங்களுக்கு விற்றது. இது பெரிய நிறுவனமாக வளர்ந்தது. 27 வயதில் 1999ல் இந்த நிறுவனத்தை Compaq நிறுவனத்திடம் 307 மில்லியன் டாலருக்கு விற்றார். இதில் மஸ்க்கின் பங்காக 22 மில்லியன் டாலர் கிடைத்தது. இதன் பின் ஆன்லைன் பேங்கிங் நிறுவனமான X.com-10 மில்லியன் டாலர் முதலீட்டில் தொடங்கினார். இது Confinity என்ற நிறுவனத்துடன் இணைந்து PayPal ஆனது. உலக அளவில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளில் மிக முக்கியமான இடத்தில் இன்றும் PayPal நிறுவனம் இருக்கிறது. இந்த இடத்தை அடைய முக்கிய காரணம் எலான் மஸ்க்தான். ஆரம்பக்கட்டத்தில் CEO-வாக சரியான பாதையை PayPal-க்கு அமைத்துக் கொடுத்தார் மஸ்க். பின்பு அங்கிருந்தும் விலகினார். PayPal, ebay நிறுவனத்திற்குக் கைமாறியது. இதில் மஸ்க்கின் பங்காக சுமார் 180 மில்லியன் டாலர் அவருக்குக் கிடைத்தது.

 SpaceX launches new cargo Dragon to Space Station for 100th successful  Falcon 9 flight – ClearTips

2002-லேயே தனியார் விண்வெளி ஆராய்ச்சி, மின்சார கார் போன்றவற்றில் பெரு முதலீடுகள் செய்தது அவராக மட்டுமே இருக்கமுடியும். இதனால்தான் டெக் உலகில் ஒரு முன்னோடியாகவும் மிக முக்கிய ஆளுமையாகவும் பார்க்கப்படுகிறார் எலான் மஸ்க். அவரது கனவுத்திட்டம் செவ்வாய்க் கிரகத்தில் மக்களைக் குடியேற்றுவது. அந்த கனவுடன் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம்தான் ஸ்பேஸ் எக்ஸ். ஆனால், இன்று பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் டெஸ்லாதான். மின்சார கார் நிறுவனமான டெஸ்லா வெறும் 70 மில்லியன் டாலர் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம். அதன் இன்றைய மதிப்பு என்பது சுமார் 650 பில்லியன் டாலர். அதில் பெருவாரியான பங்குகள் வைத்திருப்பதாலேயே இன்று உலகின் டாப் பணக்காரராக உயர்ந்திருக்கிறார். டெஸ்லாவின் பங்கு மதிப்பு சமீபத்தில்தான் 4.8% உயர்ந்தது. 

சோதனைகள் எதுவும் இல்லாமல் இப்படி எளிதில் வளர்ந்துவிடவில்லை அவர். 2008-ல் டெஸ்லா திவாலாகும் நிலை ஏற்பட்டது. தனது சொந்த பணத்தை முதலீடு செய்து அப்போது அந்நிறுவனத்தின் மதிப்பு தெரிந்து அதைக் காப்பாற்றினார். CEO-வாகவும் பதவியேற்றுக்கொண்டார். 'இரட்டை குதிரையில் நின்று கொண்டே சவாரி செல்வது எவ்வளவு கடினம்?' ஆனால், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, சோலார் சிட்டி என மூன்று வேகமான குதிரைகளில் ஒரே சமயத்தில் பயணம் செய்தவர் எலான் மஸ்க். இதனால் மொத்தமாகக் கைவசம் இருந்த அனைத்தையும் இழக்கும் சூழல் கூட உருவானது. ''2008 என் வாழ்வில் மிகவும் மோசமான வருடம்'' என அவர் குறிப்பிடுவது அதனால்தான். இத்தனைக்குப்பிறகும் வருங்கால தொழில்நுட்பங்கள் குறித்து கனவு காணுவதை நிறுத்தவில்லை அவர்.

 Elon Musk tweets using SpaceX's Starlink satellite internet | TechCrunch

வணிக நோக்கில் விண்வெளியில் சுற்றுலாப் பயணம் செய்ய விண்கலத்தை உருவாக்கி மனிதர்களை அனுப்புவதே ஸ்பேஸ் எக்சின் முகாமையான அலுவல் ஆகும். மேலும் செவ்வாய்க்கோளுக்கு மனிதர்களைக் குடியேற்ற வேண்டும். அது 2024 ஆம் ஆண்டில் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் எலான் மஸ்க். லான் மஸ்க் 2013 இல் ஹைபர்லூப் என்னும் புதிய கருத்துருவை முன்வைத்து அறிவித்தார். அந்தத் திட்டத்தின்படி பெரு நகரங்களிடையே மிக விரைவில் பயணம் செய்யக்கூடிய நோக்கத்தில் குறைந்த அழுத்தக் குழாய்கள் வழியாக ஒரு மணி நேரத்தில் 700 மைல்கள் விரைந்து செல்ல முடியும். வானுர்தி, தொடர்வண்டி ஆகிய ஊர்திகளை விட வேகமாகச் செல்ல முடியும். இந்த் திட்டம் நிறைவேற 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓபன் AI என்ற ஆராய்ச்சி நிறுவனத்தில் இவர் பொறுப்பேற்றுச் செயல்பட்டார். இது செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக் குறித்து ஆய்வு செய்கிறது. மேலும் நியுராலிங்க் என்ற அமைப்பில், மனிதர்களின் மூளையில் கருவியைப் பொருத்தி மென்பொருளுடன் இணைக்கும் முயற்சியை மேற்கொள்வதில் எலான் மஸ்க் முனைப்பாக இருக்கிறார்.

Source By: Wikipedia, vikatan.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.


இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் புதுமுக மாணவர்களுக்கு தொடக்க விழா.

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் புதுமுக மாணவர்களுக்கு தொடக்க விழா. 3- 7 -2024 புதன்கிழமை புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் ப...