பான்கார்டு -ஆதார் கார்டுடன் இணைக்க கடைசி தேதி மார்ச் 31.
தனிமனித அடையாள ஆவணமான ஆதார் கார்டுகள் அனைத்து விஷயங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. பான் கார்டுகளையும் ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான கால அவகாசமும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக சென்ற ஆண்டின் ஜூன் மாதம் மத்திய அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில் பான் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரையில் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னர் 2020 ஆண்டின் மார்ச் 31 வரையிலும், பின்னர் ஜூன் 31 வரையிலும் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது கால அவகாசம் நிறைவடைய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் பலர் ஆதாரை பான் கார்டுடன் இணைக்காமல் இருப்பதாகத் தெரிகிறது. எனவே கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். ஆனால், மேலும் கால அவகாசத்தை அரசு நீட்டிப்பதற்கான வாய்ப்பு இல்லை. கடந்த முறை கொரோனா பாதிப்பு காரணமாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது. இன்னும் இரண்டு நாட்கள் இருப்பதால் இணைக்காமல் இருப்பவர்கள் உடனடியாக இணைத்துவிடுவது நல்லது.
Link your Aadhar and PAN
https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html?lang=eng
Check PAN Status
https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/AadhaarPreloginStatus.html
No comments:
Post a Comment